Saturday, September 28, 2013

ஆலயம் என்றால் என்ன?

ஆலயம் என்றால் என்ன?

ஆலயம் என்றால் ஆன்மாக்கள்
லயமாகும் இடம் என்று பொருள்

இந்த உடலே தேஹாலயம்
என்றுதான் அழைக்கப்படுகிறது.
இந்த உடலுக்குள்தான்
ஆன்மா உறைகிறது.

அதைப்போல் ஒவ்வொரு
உயிரிலும் ஆன்மா உறைகிறது

அதை வெளிப்புறமாக உணர்த்தும்
முகமாக ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன .

வெளிப்புறத்தில் செல்லும் மனதில்
தோன்றும் எண்ணங்களை உட்புறமாக
 திருப்பிவிடும் வகையில்
ஒவ்வொரு ப்ராகாரமாக  கடந்து உள்ளே
 கருவறைக்குள் சென்று  இறைவடிவத்தை
மங்கிய விளக்கொளியில் எல்லாவற்றையும்மறந்து
மனதை ஒருமைப்படுத்தி இறைவனை வணங்குவதுபோல்,
வெளிப்புறம் செல்லும் நம் மனதின் எண்ணங்களை நிறுத்தி
மனதை நம் இதயத்தில் உறையும் ஆன்மாவை
உணர வழி வகுக்கிறது ஆலயவழிபாட்டு முறைகள்.





இந்த பாவத்தோடு தினமும் ஆலயத்திற்கு
சென்று இறை வடிவத்தை தரிசித்து,மனதை
ஒருமுகப்படுத்திவந்தால் நம் இதயத்தில்
உறையும் ஆன்மாவாகிய இறைவனை
தரிசித்து உய்யலாம்.

அதனால்தான் ஆலயத்தை ஆன்மாக்கள்
லயமாகும் இடமாக அறிவித்தார்கள்.

அங்கு ஆண் , பெண், விலங்குகள்,
 உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள், வறியவர்கள்,
செல்வந்தர்கள், அரசர்கள், என எந்த வேறுபாடுகள்
ஏதும் இல்லாமல் அங்கு வரும் அனைவரும்
ஆன்மாக்களே என்ற எண்ணத்துடன்
சென்று. வழிபாடு செய்வதே
உண்மையான வழிபாடு,




அதை விடுத்து அதை கேளிக்கைக்கூடமாக
ஆக்கி வருவது ,வியாபார நோக்கத்திற்காக
பயன்படுத்துவது போன்றவை ஆலயவழிபாட்டு முறைகள்.
உண்மை தத்துவத்திர்க்கே எதிர்மாறான செயலாகும்
என்பதை அனைவரும் உணரவேண்டும்.

pic. courtesy-google images.

4 comments:

  1. //ஆலயம் என்றால் ஆன்மாக்கள்
    லயமாகும் இடம் என்று பொருள்.

    அருமை அண்ணா.

    ’பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பார்கள்.

    ’கோயிலில்லா ஊரில் குடியிருக்காதே’ என்றும் சொல்வார்கள்.

    //அதனால்தான் ஆலயத்தை ஆன்மாக்கள்
    லயமாகும் இடமாக அறிவித்தார்கள்.//

    சூப்பர். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. உண்மையான வழிபாட்டின் விளக்கம் அருமை ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி....

    ReplyDelete