Friday, June 13, 2014

விழித்துக் கொள்ளுங்கள்


விழித்துக் கொள்ளுங்கள்

முற்றும் துறந்த முனிவராயினும்
மோகத்தில் மூழ்கியுள்ள மனிதராயினும்
முக்காலமும் உணர்ந்த ஞானிகளாயினும்
மனித உடல் தாங்கி மனித குலத்தை
காக்க வந்த அவதார புருஷராயினும்
விதிக்கப்பட்ட காலம் தாண்டி
இவ்வுலகில் தங்க இயலாது

காலம் காலன் மூலம் தன்
காரியத்தினை தவறாது
நிறைவேற்றிவிடும்

விண்ணில் உடலின்றி ஆவியாய்
திரியும் கோடானகோடி ஆவிகள் மீது
கருணை கொண்டு மீண்டும் மீண்டும்
மண்ணில் பிறக்க மனித பிறவி
அளிக்கின்றாள்  . அபார கருணை
கொண்டஅன்னை



ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

மனித பிறவியின் அருமை பெருமை
உணராது இறைவனை மறந்து
விலங்குகள் போல் வாழ்ந்து
மடிவோர் கோடானுகோடி .

வாய்ப்பை தவறவிட்டோர்
இழிபிறவிகள் எடுத்து மீளாத்
துன்பத்தில் ஆழ்ந்தி கிடக்கின்றன

இனியாவது விழித்துக்கொள்ளுங்கள் .!

மனிதராக மண்ணில் பிறவி அளித்த
இறைவனை அன்புடன் நினைந்து
அனைத்து  உயிர்களுடன் அன்புடன்
வாழ்ந்து தனக்குரிய கடமைகளை
பலன் கருதாது நிறைவேற்றி
இறைவனுடன் ஒன்றும்  வழியை
மேற்கொள்ளுங்கள்.

நீ எதை எந்நேரமும் நினைக்கிறாயோ
அதுபோல்  ஆகிறாய் என்பது உண்மை


இறைவனை எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் போதும்
தான் என்னும் அகந்தை அழிந்து நாமும் இறைவனோடு
ஒன்றிவிடுவோம். 

7 comments:

  1. ஓவியத்தில் அன்னையின் கம்பீரக் கருணை.

    பிறருக்குத் துன்பம்/கெடுதல் நினைக்காமல் தர்மவழி வாழ்ந்தாலே இறைவனை மனதில் இருத்தியதற்குச் சமம் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. நாம் நமக்கு துன்பம் இழைத்துக் கொள்வோமா?
      இல்லை .அதுபோல் பிறரையும் நம்மைப் போல் நினைக்க பழகிக் கொண்டால் நாம் ஏன் பிறருக்கு இன்னல் நினைக்கப் போகிறோம்?
      விருப்பு வெறுப்புதான் அனைத்து துன்பங்களுக்கும் ஆதாரம்
      அதை விட்டுவிட்டாலே போதும் நமக்குள் இருக்கும் தெய்வம் தானே வெளிப்படும்

      Delete
  2. ஆணவம் தான் அனைத்திற்கும் காரணம் என்பதை அருமையாக சொல்லி முடித்துள்ளீர்கள் ஐயா...

    தங்களின் கருத்துரைக்காக : http://dindiguldhanabalan.blogspot.com/2014/06/Fault-Rectification.html

    ReplyDelete
  3. திருஆரூர் - கமலாம்பிகை. சித்திரம் அற்புதம் ..
    கவிதையும் அழகு..

    ReplyDelete

  4. நீ எதை எந்நேரமும் நினைக்கிறாயோ
    அதுபோல் ஆகிறாய் என்பது உண்மை


    மறுக்கமுடியாத உண்மை..

    ஓவியம் அற்புதம் .. மனம் நிறைந்தது.. பாராட்டுக்கள்.

    ReplyDelete