Saturday, January 17, 2015

பகுத்தறிவு என்றால் என்ன? (2)

பகுத்தறிவு என்றால் என்ன? (2)

நம்முடைய தமிழ் நாட்டில் ஒவ்வொரு கிராமங்களிலும்
பல்லாண்டு  காலமாக அங்கிருக்கும் கோயில்களில் உறையும்
தெய்வங்களை ஆராதித்துக்கொண்டு  உலக நன்மைக்காக
வேதங்களை ஒதுவித்தும் ,அதை தொடர்ந்து எதிர்கால சந்ததிக்களுக்கு
கற்பித்தும் வாழ்ந்துவந்த பிராம்மண சமூகம் அந்த காலத்தில் மன்னர்களாலும் பின்பு வந்த ஆட்சியாளர்களாலும் கௌரவிக்கப்பட்டும், மான்யங்கள் வழங்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டு வந்தனர்.

அதனால் அவர்கள் தற்காலத்தில் பிழைப்புக்காக பேய்போல் அலையும் நிர்பந்தம் இல்லாமையால் வேதம், இதிகாசம், புராணம், ஜோதிடம், இசை, தர்ம சாஸ்திரங்களைக் பிழையறக் கற்று அனைவருக்கும் அதன் உண்மைகளை
எடுத்து சொல்லி  நல்வழிப் படுத்தி வந்தனர்.

இந்த உலகம் செம்மையாக செயல்படவும், மக்கள் அனைவரும் நன்றாக
வாழவேண்டும் என்ற நோக்கில் பல சாஸ்திர நூல்கள் இயற்றப்பட்டு வழிகாட்டி வந்தது.

அவைகள் அனைத்தும் சம்ஸ்க்ருத மொழியில் இருந்தன. பிறகு அவை
பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன.

நம் நாட்டை தந்திரமாக ஏமாற்றி நம்மை அடிமை செய்த ஆங்கிலேயர்கள்
நம் நாட்டு மக்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டு மென்றால்
நம்முடைய கலாச்சாரத்தை ,தெய்வ நம்பிக்கையை ஒழித்தால்தான் முடியும் என்று தெரிந்துகொண்டு நம்முடைய அனைத்து சாத்திரங்களையும்
கற்றுக்கொள்ள சம்ஸ்க்ருத மொழியைக் கற்றுக்கொண்டு அவைகளை தங்கள் மனம் போன போக்கில் தங்களுக்கு சாதகமாக திரித்து ஆங்கில மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டனர்.

அவர்களிடமிருந்து இந்த சாத்திரங்கள் அனைத்தும் நாத்திகவாதிகளிடம் போய் சேர்ந்து அவர்கள் சாத்திரங்களில் உள்ள தங்களுக்கு சாதகமாக் உள்ள கருத்துக்களை மட்டும் பெரிதுபடுத்தி மக்களைக் குழப்பி அனைவரையும் பிராம்மண சமுதாயத்திர்க்கெதிராக திருப்பிவிட்டனர்.

இலங்கையில் தமிழர்களுக்காக தொடங்கிய சிங்கள வெறியர்களின் தாக்குதல் போல் பிராமண சமூகத்திற்கான போராட்டம் தொடர்ந்தது.

அஹிம்சாவதிகளான பிராம்மணர்கள். தாங்கள் பல்லாண்டு காலமாக் வசித்து வந்த இடத்தையும், வீடுகளையும், உயிரினும் மேலாக தாங்கள் போசித்து வந்த தெய்வங்களையும் விட்டு விட்டு பல்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தனர்.

ஈழத்தில் பல லட்சக்கணக்கான் மக்கள் வெளி நாடு புலம் பெயர்ந்ததால் இன்று காப்பாற்றப்பட்டு நல்ல நிலையில் வாழ்கின்றனர். சிங்களரின் பலத்தினை உணராது தவறான முடிவை எடுத்து  பலர் அங்கேயே தங்கி இலங்கை அரசுடன்போர் தொடுத்து மாண்டனர். .இன்னும் துன்பத்தில் சிக்கி வாடுகின்றனர்.

தற்போது நிலைமை மாறியுள்ளது கிராமங்களில் உள்ள கோயில்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டு மக்களிடையே ஆன்மீக மலர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கோயிலுக்கும் லட்சக்கணக்கில் மக்கள் சென்று வழிபாடு செய்கின்றனர். ,பிராம்மணர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என்பதை புரிந்துகொண்டுள்ளனர் அவர்களும் தமிழ் நாட்டின் ஒரு அங்கம் என்ற எண்ணம் இருந்தாலும். நாத்திகவாதிகள் விதைத்த நச்சு விதைகள் அவ்வபோது தலை தூக்கி வந்துகொண்டுதான் இருக்கிறது. அது எப்போதும் இருக்கும்.

இன்னும் வரும்.


4 comments:

 1. நச்சு விதைகள் விளைந்து மரமாகித் தழைத்தாலும் நின்று நிலைத்ததாக சரித்திரம் இல்லை..

  ReplyDelete
  Replies
  1. மனிதனின் மனம்தான் ஒரு செயலை நன்மை என்றும் தீமை என்றும் கூறு போடுகிறது. இறைவன் படைப்பில் இரண்டும் ஒன்றே. உயிரைக் கொல்லும்
   பாம்பின் நஞ்சில் அதே உயிரைக் காப்பாற்றும் மருந்தையும் அல்லவா வைத்திருக்கிறான்.
   நாத்திகமும் ஆத்திகமும் அவனுக்கு ஒன்றே. நாத்திகர்கள் கடவுள் இல்லை என்று அவனை நினைக்கிறார்கள். ஆத்திகர்கள் கடவுள் உண்டு என்று நினைக்கிறார்கள். அவ்வளவுதான். தெளிவாக நடு நிலைமையுடன் பொறுமையாக சிந்தித்தால் இந்த உண்மை விளங்கும்.

   Delete
 2. என்ன தான் குழப்பினாலும், குழம்புவது மக்களின் தவறு தான் ஐயா... முதல் பகுதிற்கு செல்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. குழப்புவதில் தவறில்லை. தயிராய் நன்றாய் குழப்பினால்தான் வெண்ணை வரும்.அதிலிருந்து நெய் எடுக்கலாம். அதுபோலதான் நாத்திகவாதிகளின் குழப்புதலும். அதனால்தான் இன்று ஆதிக்கத்தை பலரும் ஆராய தலைப்பட்டுள்ளார்கள். பல் விளக்கங்களும், உண்மைகளும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. தெளிவு பெறுபவர்களின் கூட்டமும் பெருகிக்கொண்டிருக்கிறது. ஆனால் குழப்புபவர்கள் மட்டும் அதே இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறாகள்.

   Delete