Thursday, August 4, 2016

என்று தணியும் இந்த உறக்கத்தின் மீது மோகம் ?




என்று தணியும் இந்த 
உறக்கத்தின் மீது மோகம் ?



திருவாடி பூரத்தில் ஜகத்துதித்தாள் !





திரு ஆடி மாதம் பூரம் தன்னில்
நம் புண்ணிய பூமியில் அவதரித்தாள்
நிலமகள்  அம்சமாய் ஆண்டாள்
திருப்பாவை முப்பதும் செப்பினாள்
அரங்கனோடு கலந்து விட்டாள்

இன்றும் அவள் புகழ் பாடுகிறோம்
அவள் மீது கொண்ட அன்பினாலே .

தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான்
இனிய கரும்பு மொழியிலும் இருப்பான்
இங்கும் இருப்பான் எங்கும் இருப்பான்
ஏன் ? எல்லா உயிரிலும் இருக்கின்றான்
நாம்தான் அவனை அறிந்து கொள்ள
முழுமையாக முயற்சி செய்வதில்லை

எப்போதும் எதன்  மீதாவது மயக்கமாகி கிடக்கிறோம்
மீதி பொழுதில்  உறக்கத்தில் சவம்  போல் கிடக்கிறோம்
எதுவுமே அறியாது
முடிவில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறோம்
அடுத்த  பிறவியை நோக்கி.


பக்த ப்ரஹ்லாதனின் பேச்சைக் கேட்டு
ஒரு தூண் விழித்துக்கொண்டது
தன்னுள் இறைவன் இருப்பதை உலகிற்கு காட்டியது.
அப்போதும்நாம் விழித்துக்கொள்ள வில்லை



அனுமன் தன் இதயத்தின் உள்ளே
ஸ்ரீ ராமன் இருப்பதை நமக்கு திறந்து காட்டினான்
அப்போதும்நாம் விழித்துக்கொள்ள வில்லை

ஆண்டாள் நம்மை எல்லாம் உறங்கியது போதும்
விழியுங்கள் கண்மணிகள் கண்ணனின் கோயிலுக்கு
 அவன் புகழ்  பாடி அவன் திருவடி அடையுங்கள்
அவன் உங்களுக்காக காத்திருக்கிறான் என்று
நம்மையெல்லாம் வேண்டினாள். இன்னும்
வேண்டிக்கொண்டுதான் இருக்கிறாள்
நமக்கெல்லாம் என்று தணியும் இந்த
உறக்கத்தின் மீது மோகம் ?

3 comments:


  1. Ranganathan T G
    4:54 PM (16 hours ago)

    to me
    Romba nanna irukku Sir.


    Jaya Sri RAMANA!
    Landline at USA 678 778 6447

    ReplyDelete

  2. Dr Srinivasan
    8:46 AM (10 minutes ago)

    to me
    கவிதையும் படங்களும் விழித்திருக்கவே வைக்கும்.

    பகிர்ந்தமைக்கு நன்றி

    அன்புடன்
    ஸ்ரீநிவாசன்

    ReplyDelete

  3. Mohan Muthusamy
    12:46 PM (4 hours ago)

    to me
    Excellent and beautiful colorful drawings of all Deities are very nice. Thanks for sharing this with me. Mohan

    ReplyDelete