Friday, April 28, 2017

தட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (2)

தட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (2)


இன்பமும் காதலும் இயற்கையின் நியதி 
ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி  என்றான் கண்ணதாசன். 

ஆம் இன்பமும் காதலும் அனைத்து  உயிரினங்களுக்கும் 
பொதுவான அடிப்படை உணர்வும்  அது வெளிப்படுத்தும் 
உணர்ச்சிகளும் 

இதில் எந்தவித தவறும் இல்லை.

ஏனென்றால் இந்த உலகம்,
தொடர்ந்து இயங்கவேண்டுமென்றால் 
அது இருந்துதான் ஆகவேண்டும். 
அது தொடர்ந்துதான் ஆகவேண்டும்.
அதை யாரும் தடுக்கவும் முடியாது 
கட்டுப்படுத்தவும் முடியாது. 

காதல் காதல் காதல் 
காதல் போயின் சாதல் என்றான் பாரதி. 

அவன் கருத்தில் தொனித்த உண்மை வேறு. 
அது என்னவென்றால் காதல் என்பது உண்மையான 
கலப்படமற்ற "அக்மார்க்" அன்பு.

அது மற்றவரின் நன்மையை மட்டுமே எதிர்பார்க்கும் 
அது மற்றவருக்கு இன்பத்தை அளிக்க விரும்பும். 

ஆனால் இன்று கேடு கேட்ட 
சிந்திக்கும் திறனற்ற மூடர்கள். கண்டதும் 
காதல் கொள்கின்றனர். 

இயல்பாக மலரவேண்டிய காதல் என்னும் உணர்வை 
கார்பைடு  கல்லை போட்டு மாம்பழங்களை பழுக்க வைக்கும் 
செயல் போல் ஆகிவிட்டது. 

அதனால் மாம்பழத்தில் சுவை இல்லை 
அது நஞ்சாகவும் மாறிவிடுகிறது. 

அதைப்போலத்தான் தற்கால காதல் குளறுபடிகளும் 
அசிங்கங்களும் 

காதல் ஒரு மலர்  மலர்வதை போல் 
மலர்ந்து மணம்  வீச வேண்டும். 

அதுதான் அழகு. 
இயற்கையின் அற்புதம். 

அனால் இன்று நடப்பதென்ன?

ஒரு மடையனின்  காதலை ஒரு பெண் ஏற்றுக்கொண்டால் 
அந்த பெண் உயிரோடு சாகலாம் 

இல்லாவிடில் உயிரை விட
தயாராக முடிவு செய்துவிட வேண்டும். 

இதுதான் இன்றய வாலிப பருவ வயதில் 
உள்ள ஆண்  பெண்களின்
பரிதாப நிலை. 

அதைவிட அவர்களை பெற்று படாதபாடு வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களின் நிலையோ அதை விட கொடுமை. 

இவர்களை போன்ற நீசர்களுக்கு பயப்படுவதா அல்லது அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தில் உள்ள வர்களை கண்டு பயப்படுவதா அல்லது  உறவுகளைக் கண்டா என்பது கேள்விக்குறி.

நாளுக்கு நாள் கவுரவ கொலைகளும் காம வெறி பிடித்த கொடூரன்கள் 
இழைக்கும் அநீதிகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. 

சட்டங்கள் இருக்கின்றன.  அவைகள் வழக்கறிஞர்களின் வாதங்களினால் தாக்கப்பட்டு    குற்றுயிரும் குலையுயிருமாக படுக்கையில் கிடக்கிறது,

மக்களிடையே ஒழுக்கமும் 
இல்லை ஒழுங்கும் இல்லை

தனி மனிதன் திருந்தும் வரை 
இதற்க்கு விடிவு காலம் இல்லை. 


6 comments:

 1. காதலுக்கான தங்களது ஒப்பீடு மிகவும் அருமை இரித்தேன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கே.ஜீ

   Delete
  2. இரசித்தேன் என படிக்கவும்.

   செல்லில் எழுதுவதால் பிழை நிகழ்ந்து விடுகிறது.

   Delete
  3. பிழை ஏற்படுவதில் தவறில்லை. ஆனால் இந்த உலகில் பிழை செய்வதையே தங்கள் பிழைப்பாக கொண்டு திரிகிறார்கள்
   அதனால்தான் இந்த உலகம் இன்று அல்லல்படுகிறது.

   Delete
 2. ஒரு மடையனின் காதலை ஒரு பெண் ஏற்றுக்கொண்டால்
  அந்த பெண் உயிரோடு சாகலாம்

  இல்லாவிடில் உயிரை விட
  தயாராக முடிவு செய்துவிட வேண்டும். //யதார்த்த நிலையை மிக மிக
  அழகாகச் சொன்னவிதம்
  மனம் கவர்ந்தது
  (விஷயம் மனதைப் பாதிப்பதாயினும் )
  வாழ்த்துக்களுடன்  ReplyDelete
  Replies
  1. நண்பர் திரு ரமணி அவர்களே .இதுமட்டும்தான் மனதை பாதிக்கின்றதா?இதைவிட ஆயிரமாயிரம் விஷயங்கள் நம் முன்னே ஒவொரு கணமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் கண்டும் காணாமல் இருந்துகொண்டு ஊமை போல் உணர்ச்சிகளை வெளியிட முடியாமல் இந்த உலக மக்கள் வெந்து வெதும்பி செத்துக் கொண்டு இருக்கிறார்களே! அதை யாரும் உணர்வதாக தெரியவில்லை.

   Delete