Wednesday, June 28, 2017

MOUTHORGAN-TAMIL FILM-PAALUM PAZHAMUM(1961)-SUPERSONG-பாலும் பழமும் கைகள...


Wednesday, June 28, 2017

இசையும் நானும் (197) திரைப்படம் -(பாலும் பழமும்) (1961) பாடல்:பாலும் பழமும் கைகளில் ஏந்தி



இசையும் நானும் (197) திரைப்படம் -(பாலும் பழமும்) (1961)

பாடல்:பாலும் பழமும் கைகளில் ஏந்தி

பாடல்:  கண்ணதாசன் 

இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி 




MY MOUTHORGAN VEDIO 

paalum pazhamum songs lyrics માટે છબી પરિણામ



Movie :Paalum pazhamum
Song :Paalum pazhamum
Singers:TM Soundarrajan
Music Director:M.S.Viswanathan-Ramamurthy
_________________________________



பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே 
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே
பேசிப் பழகும் மொழி மறந்தாயே
அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே
அன்னக் கொடியே அமைதி கொள்வாயே

உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே
உறங்க வைத்தே விழித்திருப்பாயே
கண்ணை இமைபோல் காத்திருப்பாயே
காதற் கொடியே கண் மலர்வாயே

ஈன்ற தாயை நான் கண்டதில்லை
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்
உதய நிலவே கண் மலர்வாயே

(பாலும்)

6 comments:

  1. அருமை நண்பரே மிகவும் இரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. சிவாஜி பவள வாயில் புன்னகை சிந்தி என்று பாடும்போது சரோஜாதேவி நோயின் கொடுமை
      இடையேயும் ஒரு புன்முறுவல் பூக்கும் காட்சி அற்புதம்.56 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாடலை இசைக்கும்போதுதான் அதை கவனித்து ரசித்தேன்.

      Delete
  2. எனக்கு மிகவும் பிடித்த பாடல். பல வருடங்களுக்கு முன் கேசட்டில் டி எம் எஸ் பாடல்களை பதிவு செய்தபோது இந்தப்பாடலை இரண்டு பக்கமும் முதல் பாடலாகப் பதிவு செய்தேன்.

    ரசித்தேன். அந்த நினைவுகளை மீட்டி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நினைவுகள் என்றும் மரிப்பதில்லை
      இந்த பாடல் எனக்கு மனப்பாடம். இன்றே பல முறை பயிற்சி செய்து பதிவு செய்து படங்களை இணைத்து வெளியிட்டேன். ஒரு உண்மையான ரசிகனின் பாராட்டு அதற்காக பட்ட கஷ்டங்களை மறக்கடிக்க செய்துவிட்டது.

      Delete
  3. நெஞ்சம் நெகிழ வைக்கும் பாடல்...

    ReplyDelete