Tuesday, September 19, 2017

மனம் என்னும் புதிர்.

மனம் என்னும் புதிர்.

மனம் என்ற
ஒரு மாபெரும் சக்தியை
உள்ளடக்கியவன் மனிதன்.

அது அனைத்தையும்
பதிவு செய்து வைத்துக் கொள்கிறது.

நாம் விரும்பினாலும்
அல்லது விரும்பாவிட்டாலும்.

பதிவு செய்த தகவல்களை நாம் விரும்பாவிட்டாலும்
விரும்பினாலும் அது மீண்டும் ஓயாமல்
 வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.

நாம் அதை கவனிக்காவிடில்
அது அடுத்த தகவலுக்கு தாவிவிடும்.

அதை நாம் ஒரு தடவை தொட்டுவிட்டால்போதும்
நாம் அத்தோடு நாம் தொலைந்தோம்.

மீண்டும் மீண்டும் அந்த எண்ணம் தோன்றி
நம்மை செயல்படவைத்து நம்மை
அந்த எண்ணத்திற்கு அடிமையாக்கிவிடும்.

பிறகு அதிலிருந்து விடுபட
 இயலாது போய்விடும்.

மது போன்ற போதை பழக்கத்திற்கு
மனிதர்கள் அடிமையாகிப் போவதன் காரணம்  இதுதான்.

இது போன்றுதான் ஒவ்வொரு எண்ணங்களும் .

நாம் அவைகளை தெருவில் நம் கண் முன்னே போய்க்கொண்டிருக்கும் மனிதர்களை   கண்டு கொள்ளாமல் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தால்  பிரச்சினை  ஏதும் இல்லை.

அவர்கள் பாட்டுக்கு வருவதும் போவதுமாக
 அவரவர்கள் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

நாம் அவர்களோடு வலிய  போய் தொடர்பு கொண்டாலோ
அல்லது தொடர்பு கொள்பவர்களை  நாம் அனுமதித்தாலோ பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.

எனவே நாம் நம் மனதில் தோன்றும்
ஒவ்வொரு எண்ணங்களையும் ஆராய்ந்து
நமக்கு தேவையானால் மட்டுமே
அதை கவனிக்க பழக வேண்டும்.

மற்றவற்றை சும்மா விட்டுவிட்டால்
வாழ்க்கை  பயணம் நிம்மதியாக போகும்.


No comments:

Post a Comment