Tuesday, October 31, 2017

இறைவன் கண்டு கொள்ள முடியாதவனா?


இறைவன் கண்டு கொள்ள முடியாதவனா?

இறைவனை தேடி தேடி களைத்து விட்டேன்
என்று புலம்புகிறார்கள்
பலர்.

நீ இருக்குமிடம் தெரியவில்லையே
என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள்.

ஆனால் பலருக்கும் உண்மை தெரிவதில்லை.

இறைவன் எப்படி இருப்பான் என்று தெரியாது.

சரி அவன்  அப்படி எதிரில் வந்தாலும்
அவனை அடையாளம் கண்டுகொள்ளவும் தெரியாது.

அப்படி வந்துவிட்டாலும் அவனிடம்
எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரியாது.

எதற்காக அவனை  அழைத்தார்கள் என்றும் தெரியாது.

கண்ணெதிரே தோன்றினாலும் அவனிடம் என்ன பேச வேண்டும்

என்ன கேட்க வேண்டும் என்றும் தெரியாது.

இந்த கேள்விகளுக்கெல்லாம்.  நம்முடைய இதிஹாசங்களிலும், இறைவனை நேரில் கண்ட  பக்தர்களின் வாழ்க்கை  சரிதங்களிலும் விடைகள் ஏராளமாக உள்ளன.

அவைகளை மன  ஒருமையுடன் ஊன்றி படித்து சிந்தித்தால் அனைத்து கேள்விகளுக்கும் விடை எளிதாக கிடைக்கும்.

அதற்க்கு ஈடுபாடு, பக்தி, நம்பிக்கை தேவை.

நம்பிக்கை இல்லாது  அவனை அணுகுவதில் எந்த பயனும் இல்லை.

அதுபோல் ஏதாவதொரு  கோரிக்கையுடனும் மட்டும் அவனை அணுகுவதில் பயனில்லை.

நாம் அயற்சியில்லாமல்  தளர்ச்சியில்லாமல் அவனை நோக்கி
மற்ற எல்லா எண்ணங்களையும் விட்டுவிட்டு அவனை அறிய வேண்டும் என்ற ஒரே கோணத்தில் மட்டும் அணுகினால் அவன் நமக்கு புலப்படுவான்

ஆனால் அது நம் நோக்கம் நிறைவேறும்வரை தொடரவேண்டும். எந்த இடையூறு வந்தாலும் பொருட்படுத்தாது.

ஆசா பாசங்கள் நிறைந்த மனதினால் இறைவனை அடைய முடியாது.

அதே நேரத்தில் மனதின் துணையின்றியும் அவனை அறிய முயற்சி கைகூடாது.

கட்டிடம் கட்ட சாரம் தேவைப்படுவதுபோல் உள்ளத்தில் இறைவனை நிலை நிறுத்த  மனதின் உதவி தேவை. கட்டிடம் கட்டி முடித்தபின் அதன் வேலை அவசியம் இல்லை.

முயற்சி திருவினையாக்கும். .

No comments:

Post a Comment