Monday, February 20, 2012

இன்று மகா சிவராத்ரி



இன்று மகா சிவராத்ரி 

இன்று இரவு முழுவதும் சிவ பெருமானை நினைத்து 
உறங்காமல் வழிபாட்டு புண்ணியம் தேடவேண்டும்

எதற்க்காக இன்று இவ்வளவு முயற்சி எடுக்கவேண்டும் ?

எப்போதும் சிவ பெருமானை நினைத்து
கொண்டிருப்பவர்களுக்கு
தனியாக முயற்சி தேவையில்லை

ஆனால் இறைவனை மோர் சாதத்திற்கு ஊறுகாய் 
தொட்டுகொள்பவர்கள் போல் ஒரு நாளில் நமக்கு இறைவன்
அளித்த24 மணி துளிகளில் ஒரு சில நொடிகள் மட்டும் 
அவனை நினைக்கும் மனிதர்களை இறைவன்பால் 
மனதை திருப்ப இதுபோன்ற விரதங்கள் தேவைபடுகின்றன

அன்பே சிவம் என்று சொல்கிறார்கள்

சிவபெருமான்தான் எல்லா உயிர்க்கும் தலைவன் 
அதனால்தான் அவனுக்கு பசுபதி என்று அழைக்கபடுகின்றான்

கண்ட மனிதர்களையெல்லாம் தலைவா தலைவா  என்று
சுயலாபங்களுக்காக வாழ்நாளெல்லாம் 
அழைத்து வீண் பொழுது போக்கும் மனிதர்களே


 நாமெல்லாம் வாழ ஆலகால விஷத்தை தன்னுடைய 
கண்டத்தில் நிறுத்தி நம்மை எல்லாம் 
காத்த தியாகத்தின் உருவமாம் சிவபெருமானை,
எந்த நோக்கத்தோடு  தவம் செய்து
வரம் கேட்டாலும் அதை தப்பாமல் 
அளிக்கும் சிவபெருமானை,
எளிய முறையில் புற வழிபாடுகள் செய்தாலும்,
மனதிலே அக வழிபாடுகள் செய்தாலும் 
மிகவும் மகிழ்ந்து  பக்தர்களை 
காக்கும் அன்பு தெய்வத்தை
ராம நாமத்தின் பெருமையை 
அனைவருக்கும் உபதேசித்து முக்தியை 
அடைய வழி காட்டிய வள்ளல் பெருமானை,  
பக்தனுக்காக  தன  முதுகில் 
பிரம்படி  பட்ட  தயாபரனை  
பகீரதனுக்காக கங்கையை தன ஜடாமுடியில் தாங்கியவனை
தஷனின் சாபத்தால் களையிழந்த சந்திரனின் சாபம் நீங்க தன காலில்
விழுந்தவனை தா தலையிலே தாங்கியவனை  
 தனக்கென்று எதையும் வைத்துகொள்ளாமல் 
தியாகேசனாக விளங்கும் மூர்த்தியை
மனதில் தியானித்து 
எல்லா வளங்களையும் பெறுவோமாக .

அதே  நேரத்தில்  அனைவரிடமும்
 எப்போதும் அன்பு செலுத்தி 
அறவழியில் வாழ்க்கை நடத்தி,
 இறைவன் நமக்கு வாழ்ந்து காட்டிய
 நல்ல குணங்களை  நம் வாழ்வில் கடைபிடிக்க
 இந்நாளில் உறுதி ஏற்று செயல்படுவதுதான் 
மகாசிவராத்திரியின் உண்மையான வழிபாடு  

2 comments:

  1. ஒரு ஜீவன் சவமாவதற்க்குள்
    சிவமாக வேண்டும்
    இல்லையேல்
    எடுத்த இப்பிறவி வீண்
    மண்ணுக்குள் போவதற்கு முன்
    மண்ணையும் விண்ணையும்
    நம்மையும் படைத்த இறைவனை
    அறிந்து கொள்ளாவிடில் மானிட
    பிறப்பு எடுத்து என்ன பயன்?
    விலங்கு போல் வாழ்ந்து
    ஆசைகள் என்னும் விலங்கை
    மாட்டிகொண்டு உலக சிறையிலிருந்து
    மீண்டும் ஒரு தாயின் சிறைக்கு செல்லுவதற்க்கா
    இறைவன் மனித பிறவி அளித்துள்ளான் என்பதை
    ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும்
    ஆனால் யாரும் அதை பற்றி கவலையே
    இல்லாமல் காலத்தை தள்ளிக்கொண்டு
    முடிவில் காலனின்பிடியில் சிக்கி மடிகின்றார்கள்
    என்ன செய்வது?

    ReplyDelete