Friday, March 9, 2012

குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது உண்மையா?


குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது உண்மையா?

குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது உண்மையா?
அதில் என்ன சந்தேகம்?
எப்படி?

எங்காவது ஒரு குரங்கு வந்தால் அதை பார்ப்பதற்கு
அவன் ஓடுகிறானே .தன்னுடைய முன்னோடியை
 காணாமல் அவனால் இருக்க முடியாது
.
மிருக காட்சி சாலையில் கூண்டில் வைக்கப்பட்டுள்ள
 குரங்குகளை பார்க்க கூடும் கூட்டமே இதற்க்கு சான்று
.
அவன் உடளவில்,தோற்றத்தில் மட்டும் மாறினானே 
ஒழிய மனதளவில் இன்னும் அவன் குரங்காகத்தான் இருக்கிறான்

அவன் தன்னுடைய மனம் ஒரு குரங்கு என்று சொல்வதில் 
இன்னும் பெருமைபட்டுகொண்டு இருக்கிறான்.

அவன் மனம் குரங்கு ஒரு கிளையிலிருந்து 
மற்றொரு கிளைக்கு தாவி கொண்டிருப்பது போல் 
நிலையான எண்ணம் இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கிறது .
 என்பது அனைவரும் அறிந்ததே
.
அவன் இன்னும் தன் மூதாதையாரனான 
குரங்கை ஹனுமான் உருவத்தில் கோயில் கட்டி 
வழிபட்டு கொண்டு இருக்கிறான். 
காரணம் என்ன தெரியுமா?

ஹனுமான் தன் குரங்கு உருவத்தை 
அப்படியே வைத்துக்கொண்டார்

மனதளவில் தெய்வமாக மாறிவிட்டார்

ஆனால் மனிதனோ உடலளவில்
 மனிதனாக மாறினாலும் 
இன்னும் மனதளவில்
குரங்காக இருப்பதால்தான்.

6 comments:

  1. கருத்துக்கு
    நன்றி நண்பரே

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இப்போது உள்ள குரங்குகள் மனிதனாக முயற்சி செய்ய வில்லை.

      மனிதன் படும் துன்பங்களை பார்த்துவிட்டு.அவைகள் குரங்காக இருப்பதே மிகவும் சௌகர்யமாக இருப்பதால் அவைகள் மனிதனாகும் முயற்சியை கைவிட்டுவிட்டன.

      இருந்தும் மனிதன் எதிர்காலத்தில் அவைகளின் மூளையில் அறுவை சிகிச்சை செய்து அதை மனிதர்களாக மாற்றி தங்களுக்கு அடிமை சேவகம் செய்ய பயன்படுத்திகொள்ளுவான். என்பது நிச்சயம்.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete