Sunday, April 8, 2012

கேலிக் கூத்தாகும் அன்ன தானம்

கேலிக் கூத்தாகும் அன்ன தானம் 


அன்ன தானம் என்பது ஒரு உயர்ந்த நெறி

பசியால் வாடுபவருக்கு உள்ளன்புடன் 
உபசரித்து உணவு வழங்கும் 
ஒரு உயரிய பண்பு

ஏனென்றால் உணவுதான் ஒரு உயிரை 
அது தங்கியுள்ள உடலிலிருந்து 
மரணமடையாமல் காப்பாற்றுகிறது
அதனால்தான் உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே என்றனர் நம் ஆன்றோர்

திருவள்ளுவரும் இருக்கும் உணவு பொருளை 
தான் ஒருவரே மட்டும் அனுபவிக்காமல் 
பகுத்துண்டு பல்லுயிரும் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்று 
வலியுறுத்தியுள்ளார்

இன்று எங்கு பார்த்தாலும் 
அன்னதானம் நடைபெறுகிறது 
ஆனால் அன்ன தானத்தில் வீணடிக்கப்படும் 
உணவு பொருட்கள் அளவு மிகவும் அதிகமாக உள்ளது

இதை தவிர விழாக்களில் வீணடிக்கப்படும் உணவுபொருடகளின் அளவு 
கணக்கிடமுடியாது தங்கள் கௌரவத்தை காட்டவும் ஊரார் மெச்சவும்
மக்கள் இது போன்ற அனாகநீகமான செயல்களில் ஈடுபடுகின்றனர்
இவர்களை யார் திருத்துவது/

உலகில் கோடிக்கணக்கான மக்கள் ஒருவேளை உணவுக்கு கூட 
வழியில்லாமல் மடிந்து போகின்றனர்
பலர் வறுமையில் வாடி வதங்கி தவிக்கின்றனர்

ஆனால் இப்படி விலை மதிக்கவொண்ணா உணவுபோருளை மக்கள் 
பாழ் செய்வது அவர்களை இந்த பிறவி அல்லது அடுத்த 
பிறவிகளில் வறுமையில் தள்ளி கொடுமைபடுத்தும் என்பதில் 
சந்தேகமில்லை
இதை உணர்ந்து கடவுளுக்கு சமமான உணவு பொருளை 
தேவையானவர்களுக்கு தேவையான அளவு வழங்கி 
பயன்படுத்தவேண்டும் 

இதை வழங்குபவர்களும் வாங்கி பயன்படுத்துபவர்களும் 
நினைவில் கொள்ள வேண்டும்

முற்பிறவியில் உணவு பொருட்களை வீணடித்தவர்களும் 
பசியால் வாடும் ஏழைகளுக்கு தங்களிடம் உணவிருந்தும் 
பிச்சையிடாதவர்களும்தான் அடுத்த பிறவியில் ஒரு வேளை
சோற்றுக்கு வழியில்லாமல் உலகில் திரிவார்கள் என்பது உண்மை 

அன்னபூரணியான பராசக்தியிடம் சிவ பெருமானே 
பிச்சை கேட்கும் நிலை உள்ளது  
ஆதலால்  தெய்வம் போன்ற அன்னத்தை 
உரிய மரியாதையுடன் பக்தியுடன் பயன்படுத்தவேண்டும் 

வீண் ஆடம்பரத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் 
இறைவனின் தண்டனைக்கு ஆளாவதுடன் துன்பத்திற்கும் ஆளாவது உறுதி.



1 comment: