Sunday, April 22, 2012

நம்முடைய எதிரிகள் யார்?

நம்முடைய எதிரிகள் யார்?


அவர்கள் எங்கிருக்கிறார்கள்?
இந்த கேள்வி ஒவ்வொரு மனிதனையும் ஆட்டி படைக்கிறது 
சில எதிரிகள் நேரடியாகவே நம்மை தாக்குகிறார்கள்
சிலர் நம்மை மறைமுகமாக தாக்குகிறார்கள்
சிலர் நமக்கு வேண்டியவர்களையே நம்முடைய 
எதிரிகளாக மாற்றிவிடுகிறார்கள்
சிலர் நம்மோடு இருந்துகொண்டு நாம் எதிர்பாராமல் நம்மை
தாக்கி வீழ்த்தி விடுகிறார்கள்

இதனால் மனிதர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள 
வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்து கொண்டு
இருப்பதிலேயே ஆயுள் கழிந்துவிடுகிறது
இப்படி நாம் நம்முடைய எதிரிகளை பற்றியே
சிந்தித்து கொண்டிருந்தால் வாழ்க்கையின் 
இன்பங்களை எப்போது அனுபவிப்பது?
இவர்களிடமிருந்து நம்மை
எப்படி காப்பாற்றி கொள்வது?

நாம் நம்முடைய எதிரிகள் நமக்கு வெளியேதான் இருக்கிறார்கள் 
என்று நம்பிக்கொண்டு அவர்களை எதிர்கொள்ள நாம்
சக்தியையும் நேரத்தையும் வீணடித்து கொண்டு இருக்கிறோம்
ஒவ்வொருவருடைய மனதில்தான் அந்த எதிரிகள் புகுந்துகொண்டு 
ஒருவரைஒருவர் அன்பு செய்ய விடாமல் பகைமையை தூண்டி
அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தி வைத்திருக்கிறார்கள் 

ஆனால் இறைவன் பகவத் கீதையில் நம்முடைய எதிரிகள் 
யார் என்பதை பட்டியலிட்டு கொடுத்திருக்கிறான்

அதை தெரிந்துகொண்ட ஞானிகள் அந்த எதிரிகளிடமிருந்து 
நம்மை காப்பற்றிக்கொள்ள எளிய வழியினை
நமக்கு அருளியிருக்கிறார்கள்
அதுதான் இறைவனிடம் நம்மை மனபூர்வமாக 
சரணடைந்துவிடுவது
அவ்வாறு சரணடைந்தவர்கள் எல்லா துன்பங்களிலும் விடுபெற்று 
ஆனந்த வாழ்வை பெற்றுவிட்டார்கள்

ஆனால் நாம் அனைத்து துன்பங்களுக்கும் தாயான 
நம்முடைய தான் என்னும் அகந்தை குணத்தினால்
இந்த கருத்தை ஏற்றுகொள்ளாது தொடர்ந்து துன்பத்தில் 
மிதந்து நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

இனியாவது வாழ்வில் இனிமை நிலவ இறைவனின் இனிய 
ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டு நம் கடமைகளை 
அன்போடு உறுதியோடு ஆற்றி நன்மை பெருவோம  

No comments:

Post a Comment