Tuesday, April 17, 2012

வரவேண்டும்இறைவா நீ அவதாரம் எடுத்துஅன்பே சிவம் என்றார்கள் 

ஆனால் சிவனை வணங்கும் சைவர்கள் ஈவிரக்கமில்லாமல் உயிரை கொன்று அதன் மாமிசத்தை புசிக்கிறார்கள்
அனைத்தும் வாசுதேவனின் வடிவம் என்கிறார்கள் வைணவ பக்தர்கள்
ஆனால் அவனை வணங்கும் பலர் புலால் உண்கிறார்கள்

அன்பே சிவமாய் நீயிருக்க தெய்வங்கள் உயிர்  பலி கேட்பதாக  
உயிர்களை கொன்று தின்னும் கொடிய மனம் படைத்தோர் ஒருபுறம் 

இப்படி சொல்வது ஒன்றும் செய்வது 
ஒன்றுமாகதான் இந்த மனிதர்கள் இருக்கிறார்கள் 
சொல்லில் நேர்மையில்லை 
செயலில் நேர்மையில்லை
வாழ்க்கையில் நேர்மையில்லை
பகட்டுக்காக இறைவனை வணங்குவதுபோல் நடிக்கிறார்கள்
சுத்தம்தான் கடவுள் என்கிறார்கள்
காணும் இடமெல்லாம் அசுத்தம் செய்வதை தவிர வேறு செயல்களை அவர்கள் மறந்தும் செய்வதில்லை
இறைவழி பாட்டு தலங்களும் இதற்க்கு விதி விலக்கல்ல 

தனக்குள் இருக்கும் இறைவனை அறியமால் போலிகளிடம் சென்று பணத்தையும் வாழ்வையும் தொலைக்கும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகிறது 

நவ நவநாகரீகமாக  ஆங்கிலம் பேசி குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்துகொண்டு ஆன்மிகம் என்ற பெயரில்  புளுகுகளை தினம் தினம் அவிழ்துவிட்டுகொண்டு கோடிக்கணக்கான ரூபாய்களை தினம் 
கல்லா கட்டும் பாபாக்கள்

காவி உடை உடுத்தி ஆடம்பர வாழ்வு நடத்தும் ஸ்வாமிகள்
ஆன்மிகம் பேசி ஆடம்பர கார்களில் உலா வரும் ஆனந்தாக்கள்

மனம் முழுவதும் குப்பைகளை நிரப்பிக்கொண்டு 
அதை வெளியே அப்புறபடுத்த வழி அறியாமல் 
அலையும் மனித இனம்

பிறரை வஞ்சித்து பொருள் சேர்த்து மகிழ்ச்சியாக 
வாழலாம் என்று நினைத்து ஆப்பசைத்து மரத்தின் இடுக்கில் வால் மாட்டிகொண்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் 
தவிக்கும் குரங்குகள் போல் பலர்

சுயலாபத்திர்க்காக பலரின் வாழ்க்கையை சீரழித்து
தங்களின் சொந்த வாழ்க்கை 
பறிபோய் தவிக்கும் பலர்

மனிதர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டு
மனித நேயமற்ற செயல்களில்
ஈடு பட்டுகொண்டிருக்கும் ஒரு கூட்டம்

உலகம் முழுவதும் தன் மதம்தான் உயர்ந்தது என்று கருதிக்கொண்டு மற்ற மதத்தை பின்பற்றுபவர்களை இழிவுபடுத்துவதும், கொடுமைபடுதுவதும்,சிறுமைபடுத்துவதும் கொன்று குவிப்பதுமாக வெறி பிடித்து அலையும் பல மதவாத கும்பல்கள் 

ஒரு பக்கம் செல்வசெழிப்பில் புரளும் மனிதர்கள்
மறுபக்கம் உணவுக்கு  வழியில்லாமல்

மடியும்  கோடிக்கணக்கான மக்கள் கூட்டம்

பூவுலகை ,பாழுலகமாக மாற்றும் பாதகர் கள் பெருகிவிட்டனர்
அணு உலைகளை நிறுவி அனைவரையும் அழிக்க திட்டம் தீட்டும்
அணு வல்லரசுகள் நிறைந்து அரக்கர் கூட்டம் பெருகிவிட்டது

நம்மை வாழவைக்கும் நதிகளை நாற்றமெடுக்கும் சாக்கடையாக 
மாற்றிவிட்டனர் நாகரீகமில்லா நாசக்கார பேய் மனித கூட்டம்

நீர் வழங்கும் ஏரிகளை சேரிகலாக்கி அரசியல் துணையுடன் அசுத்த படுத்தி வருகிறது அராஜக கூட்டம் 

தெய்வங்கள் என்று போற்றி வணங்கும் 
பெண்களின் வாழ்வை சீரழிக்கும் 
ஈவு இரக்கமற்ற ஆண் மற்றும் பெண்கள் 

அறிவை மயக்கி அழிவு பாதையில் கொண்டு செல்லும் மது, மாது, மேனாட்டு கலாசார சீர்கேடுகள், மூட நம்பிக்கைகள், மத வாதம், தீவிர வாதம் கலப்படம், போலி மருந்துகள்,போதை, வாழ்வில் அனைத்திலும் புகுந்து கொண்டு நம்மையெல்லாம் அழித்தொழிக்கும், லஞ்சம், நேர்மையின்மை ஒழுக்கமின்மை என இன்று மானிட இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது 

இறைவா படைத்தவன் நீயிருக்க தானே கடவுள் என்று பிதற்றிக்கொண்டு திரியும் பலர்.
அவர்கள் பின்னே மந்தைமந்தையாய்
எதையோ எதிர்பார்த்து ஏமாந்துபோய் துன்பத்தில் மூழ்கும் 
அலையும் கோடிகணக்கான மதியில்லா மக்கள் கூட்டம் 

இந்த மானிட இனம் இனி திருந்த வாய்ப்பில்லை 

இறைவா நீ அவதாரம் எடுத்து
இவைகளையெல்லாம் சரி செய்ய விரைவில் வரவேண்டும்.
வேறு வழியில்லை 

நல்ல மனம் படைத்தவர்களே தினமும் காலையில் எழும்போது 
இந்த பிரார்தனையுடன் உங்கள் நாளை தொடங்குங்கள் இதில் உங்கள் நலமும் உலகின் நலமும் அடங்கியிருக்கிறது என்பதை மறவாதீர்கள் 

No comments:

Post a Comment