Sunday, April 29, 2012

வாழ நினைப்பவர்களே .......

வாழ நினைப்பவர்களே .......

தான் நன்றாக வாழ நினைப்பவர்களே 
அதில் தவறில்லை 

தான் மட்டும்தான் வாழ வேண்டும்
மற்றவர்கள் எப்படி  போனாலும் கவலையில்லை என்று
நினைப்பதுதான் தவறு

தானும் வாழவேண்டும் மற்றவர்களும் நன்றாக
வாழவேண்டும் என்று மனமார நினைத்து
வாழ்க்கையை தொடங்குங்கள் 
நாம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்றால்
பிறருடைய மகிழ்ச்சியை கெடுக்காமல் இருக்க வேண்டும்

நல்லது எங்கு நடந்தாலும் பாராட்டுங்கள்
யார் அதை செய்தாலும் பாராட்டுங்கள் 
அவர்கள்  உங்கள் எதிரிகளாக இருந்தால் கூட
பிறரிடம் குறை காணாதீர்கள்
அவர்களிடம் உள்ள நிறைகளை மட்டும் 
கண்டு அதை பாராட்டுங்கள்

எப்போதும் நல்ல சொற்களையே பேசுங்கள்

சொல் என்பது நெருப்புக்கு சமமானது
அது உணவை பக்குவபடுத்தும் 
நம்மை காக்கும் 
கவனக்குறைவாக் இருந்தால் அது 
அனைத்தையும் அழித்துவிடும் 

அனைவரையும் மனம் திறந்து வாழ்த்துங்கள் 
உங்கள் வாழ்க்கை எந்த சூழ்நிலையிலும் 
மகிழ்ச்சியாக இருக்கும் 

Sunday, April 22, 2012

நம்முடைய எதிரிகள் யார்?

நம்முடைய எதிரிகள் யார்?


அவர்கள் எங்கிருக்கிறார்கள்?
இந்த கேள்வி ஒவ்வொரு மனிதனையும் ஆட்டி படைக்கிறது 
சில எதிரிகள் நேரடியாகவே நம்மை தாக்குகிறார்கள்
சிலர் நம்மை மறைமுகமாக தாக்குகிறார்கள்
சிலர் நமக்கு வேண்டியவர்களையே நம்முடைய 
எதிரிகளாக மாற்றிவிடுகிறார்கள்
சிலர் நம்மோடு இருந்துகொண்டு நாம் எதிர்பாராமல் நம்மை
தாக்கி வீழ்த்தி விடுகிறார்கள்

இதனால் மனிதர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள 
வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்து கொண்டு
இருப்பதிலேயே ஆயுள் கழிந்துவிடுகிறது
இப்படி நாம் நம்முடைய எதிரிகளை பற்றியே
சிந்தித்து கொண்டிருந்தால் வாழ்க்கையின் 
இன்பங்களை எப்போது அனுபவிப்பது?
இவர்களிடமிருந்து நம்மை
எப்படி காப்பாற்றி கொள்வது?

நாம் நம்முடைய எதிரிகள் நமக்கு வெளியேதான் இருக்கிறார்கள் 
என்று நம்பிக்கொண்டு அவர்களை எதிர்கொள்ள நாம்
சக்தியையும் நேரத்தையும் வீணடித்து கொண்டு இருக்கிறோம்
ஒவ்வொருவருடைய மனதில்தான் அந்த எதிரிகள் புகுந்துகொண்டு 
ஒருவரைஒருவர் அன்பு செய்ய விடாமல் பகைமையை தூண்டி
அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தி வைத்திருக்கிறார்கள் 

ஆனால் இறைவன் பகவத் கீதையில் நம்முடைய எதிரிகள் 
யார் என்பதை பட்டியலிட்டு கொடுத்திருக்கிறான்

அதை தெரிந்துகொண்ட ஞானிகள் அந்த எதிரிகளிடமிருந்து 
நம்மை காப்பற்றிக்கொள்ள எளிய வழியினை
நமக்கு அருளியிருக்கிறார்கள்
அதுதான் இறைவனிடம் நம்மை மனபூர்வமாக 
சரணடைந்துவிடுவது
அவ்வாறு சரணடைந்தவர்கள் எல்லா துன்பங்களிலும் விடுபெற்று 
ஆனந்த வாழ்வை பெற்றுவிட்டார்கள்

ஆனால் நாம் அனைத்து துன்பங்களுக்கும் தாயான 
நம்முடைய தான் என்னும் அகந்தை குணத்தினால்
இந்த கருத்தை ஏற்றுகொள்ளாது தொடர்ந்து துன்பத்தில் 
மிதந்து நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

இனியாவது வாழ்வில் இனிமை நிலவ இறைவனின் இனிய 
ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டு நம் கடமைகளை 
அன்போடு உறுதியோடு ஆற்றி நன்மை பெருவோம  

GOD LIVES IN YOUR HEART

Tuesday, April 17, 2012

வரவேண்டும்இறைவா நீ அவதாரம் எடுத்து



அன்பே சிவம் என்றார்கள் 

ஆனால் சிவனை வணங்கும் சைவர்கள் ஈவிரக்கமில்லாமல் உயிரை கொன்று அதன் மாமிசத்தை புசிக்கிறார்கள்
அனைத்தும் வாசுதேவனின் வடிவம் என்கிறார்கள் வைணவ பக்தர்கள்
ஆனால் அவனை வணங்கும் பலர் புலால் உண்கிறார்கள்

அன்பே சிவமாய் நீயிருக்க தெய்வங்கள் உயிர்  பலி கேட்பதாக  
உயிர்களை கொன்று தின்னும் கொடிய மனம் படைத்தோர் ஒருபுறம் 

இப்படி சொல்வது ஒன்றும் செய்வது 
ஒன்றுமாகதான் இந்த மனிதர்கள் இருக்கிறார்கள் 
சொல்லில் நேர்மையில்லை 
செயலில் நேர்மையில்லை
வாழ்க்கையில் நேர்மையில்லை
பகட்டுக்காக இறைவனை வணங்குவதுபோல் நடிக்கிறார்கள்
சுத்தம்தான் கடவுள் என்கிறார்கள்
காணும் இடமெல்லாம் அசுத்தம் செய்வதை தவிர வேறு செயல்களை அவர்கள் மறந்தும் செய்வதில்லை
இறைவழி பாட்டு தலங்களும் இதற்க்கு விதி விலக்கல்ல 

தனக்குள் இருக்கும் இறைவனை அறியமால் போலிகளிடம் சென்று பணத்தையும் வாழ்வையும் தொலைக்கும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகிறது 

நவ நவநாகரீகமாக  ஆங்கிலம் பேசி குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்துகொண்டு ஆன்மிகம் என்ற பெயரில்  புளுகுகளை தினம் தினம் அவிழ்துவிட்டுகொண்டு கோடிக்கணக்கான ரூபாய்களை தினம் 
கல்லா கட்டும் பாபாக்கள்

காவி உடை உடுத்தி ஆடம்பர வாழ்வு நடத்தும் ஸ்வாமிகள்
ஆன்மிகம் பேசி ஆடம்பர கார்களில் உலா வரும் ஆனந்தாக்கள்

மனம் முழுவதும் குப்பைகளை நிரப்பிக்கொண்டு 
அதை வெளியே அப்புறபடுத்த வழி அறியாமல் 
அலையும் மனித இனம்

பிறரை வஞ்சித்து பொருள் சேர்த்து மகிழ்ச்சியாக 
வாழலாம் என்று நினைத்து ஆப்பசைத்து மரத்தின் இடுக்கில் வால் மாட்டிகொண்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் 
தவிக்கும் குரங்குகள் போல் பலர்

சுயலாபத்திர்க்காக பலரின் வாழ்க்கையை சீரழித்து
தங்களின் சொந்த வாழ்க்கை 
பறிபோய் தவிக்கும் பலர்

மனிதர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டு
மனித நேயமற்ற செயல்களில்
ஈடு பட்டுகொண்டிருக்கும் ஒரு கூட்டம்

உலகம் முழுவதும் தன் மதம்தான் உயர்ந்தது என்று கருதிக்கொண்டு மற்ற மதத்தை பின்பற்றுபவர்களை இழிவுபடுத்துவதும், கொடுமைபடுதுவதும்,சிறுமைபடுத்துவதும் கொன்று குவிப்பதுமாக வெறி பிடித்து அலையும் பல மதவாத கும்பல்கள் 

ஒரு பக்கம் செல்வசெழிப்பில் புரளும் மனிதர்கள்
மறுபக்கம் உணவுக்கு  வழியில்லாமல்

மடியும்  கோடிக்கணக்கான மக்கள் கூட்டம்

பூவுலகை ,பாழுலகமாக மாற்றும் பாதகர் கள் பெருகிவிட்டனர்
அணு உலைகளை நிறுவி அனைவரையும் அழிக்க திட்டம் தீட்டும்
அணு வல்லரசுகள் நிறைந்து அரக்கர் கூட்டம் பெருகிவிட்டது

நம்மை வாழவைக்கும் நதிகளை நாற்றமெடுக்கும் சாக்கடையாக 
மாற்றிவிட்டனர் நாகரீகமில்லா நாசக்கார பேய் மனித கூட்டம்

நீர் வழங்கும் ஏரிகளை சேரிகலாக்கி அரசியல் துணையுடன் அசுத்த படுத்தி வருகிறது அராஜக கூட்டம் 

தெய்வங்கள் என்று போற்றி வணங்கும் 
பெண்களின் வாழ்வை சீரழிக்கும் 
ஈவு இரக்கமற்ற ஆண் மற்றும் பெண்கள் 

அறிவை மயக்கி அழிவு பாதையில் கொண்டு செல்லும் மது, மாது, மேனாட்டு கலாசார சீர்கேடுகள், மூட நம்பிக்கைகள், மத வாதம், தீவிர வாதம் கலப்படம், போலி மருந்துகள்,போதை, வாழ்வில் அனைத்திலும் புகுந்து கொண்டு நம்மையெல்லாம் அழித்தொழிக்கும், லஞ்சம், நேர்மையின்மை ஒழுக்கமின்மை என இன்று மானிட இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது 

இறைவா படைத்தவன் நீயிருக்க தானே கடவுள் என்று பிதற்றிக்கொண்டு திரியும் பலர்.
அவர்கள் பின்னே மந்தைமந்தையாய்
எதையோ எதிர்பார்த்து ஏமாந்துபோய் துன்பத்தில் மூழ்கும் 
அலையும் கோடிகணக்கான மதியில்லா மக்கள் கூட்டம் 

இந்த மானிட இனம் இனி திருந்த வாய்ப்பில்லை 

இறைவா நீ அவதாரம் எடுத்து
இவைகளையெல்லாம் சரி செய்ய விரைவில் வரவேண்டும்.
வேறு வழியில்லை 

நல்ல மனம் படைத்தவர்களே தினமும் காலையில் எழும்போது 
இந்த பிரார்தனையுடன் உங்கள் நாளை தொடங்குங்கள் இதில் உங்கள் நலமும் உலகின் நலமும் அடங்கியிருக்கிறது என்பதை மறவாதீர்கள் 

Sunday, April 15, 2012

பாகவதம்-ஒரு புதிய சிந்தனை


பாகவதம்-ஒரு புதிய சிந்தனை 
பாகவதம் 
பாகவதம் என்ற நூல் பகவான் கிருஷ்ணனின் 
லீலைகளையும் , போதனைகளையும் விவரிக்கும் 
பக்தி இலக்கியம்
உலக மாயையிலே உழலும் மாந்தர்கள் 
இதை படித்து அல்லது கேடடு இன்புற்று 
மன அமைதியும் இறை கருணையும் 
பெற்று வருகின்றனர்
பாகவதம் என்ற நூல் கிருஷ்ணனை பற்றி 
விவரிப்பதால் கிருஷ்ண காவியம் அல்லது 
கிருஷ்ண லீலை அல்லது கிருஷ்ணன் கதை 
என்றுதான் பெயரிடபட்டிருக்கவேண்டும் 
ஆனால் ஏன் பாகவதம் என்று பெயரிடபட்டிருக்கிறது? 
இறைவனை நாம் அடைய முடியாமல் நமக்கு
தடையாய் இருப்பது இந்த உலக மனிதர்களிடமும் மற்ற 
பொருட்களிடமும் நாம் வைத்திருக்கும் பாசமும் பற்றும்தான்
மற்றொன்று நம்மிடமுள்ள கர்வமும் தான் என்ற அகந்தையும்தான்
பா என்றால் பாசம் 
 என்றால் கர்வம்
வதம் என்றால் அழிப்பது 

இந்த பாகவத கதையை நாம் உரிய முறையில்
புரிந்து கொண்டால் பாச வலையில் சிக்கி வாழ்நாள் முழுவதும்
துன்பப்படும் நாம் அதிலிருந்து விடுபட்டு இறைஅருளை பெறுவது திண்ணம்

அதைபோல் நம்மை கருவியாக கொண்டு 
அனைத்தையும் இறைவன் செய்துகொண்டிருக்க 
நாம்தான் அனைத்தையும் செய்கின்றோம் என்று அகந்தை கொண்டு 
நாமும் துன்பதிற்க்குள்ளாகி பிறரையும் துன்பத்திற்குள்ளாக்கும் 
கர்வத்தை அழிப்பதற்கு உதவுவது பாகவத புராணம் 

நாம் பரிபூரண சரணாகதி செய்து 
இறைவன் அருளை  அடைய வழி காட்டுவதும் பாகவத புராணம்தான்
.
எனவே இந்த எண்ணத்துடன் நாம் பாகவதத்தை நாம் அணுகினால் 
நம் பிறவி தொலையும் .நாம் புனிதர்களாகி இறைவனுடன் இரண்டற கலந்து 
நீங்கா இன்பம் அடைவது மிக எளிது

Friday, April 13, 2012

புத்தாண்டு வாழ்த்து



புத்தாண்டு வாழ்த்து 
தந்தன தந்தன என்று வந்தது
நந்தன புத்தாண்டு 
தரணியில் வாழும் அனைவரும்
கோரும் வரமனைத்தும்
தந்திடவே வந்தது
நந்தன புத்தாண்டு 
உலகத்து மாந்தரெல்லாம் 
ஓர் குடும்பம்
என்ற உன்னத நெறியை 
உலகமெல்லாம் பரப்பிடவே 
நல்லாசி கூறுது 
நந்தன புத்தாண்டு 
எல்லோரும் வளமாய் வாழ
நலமாய் வாழ தீமைகள் ஒழிய
கட்டியம் கூறுது 
நந்தன புத்தாண்டு 

Sunday, April 8, 2012

கேலிக் கூத்தாகும் அன்ன தானம்

கேலிக் கூத்தாகும் அன்ன தானம் 


அன்ன தானம் என்பது ஒரு உயர்ந்த நெறி

பசியால் வாடுபவருக்கு உள்ளன்புடன் 
உபசரித்து உணவு வழங்கும் 
ஒரு உயரிய பண்பு

ஏனென்றால் உணவுதான் ஒரு உயிரை 
அது தங்கியுள்ள உடலிலிருந்து 
மரணமடையாமல் காப்பாற்றுகிறது
அதனால்தான் உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே என்றனர் நம் ஆன்றோர்

திருவள்ளுவரும் இருக்கும் உணவு பொருளை 
தான் ஒருவரே மட்டும் அனுபவிக்காமல் 
பகுத்துண்டு பல்லுயிரும் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்று 
வலியுறுத்தியுள்ளார்

இன்று எங்கு பார்த்தாலும் 
அன்னதானம் நடைபெறுகிறது 
ஆனால் அன்ன தானத்தில் வீணடிக்கப்படும் 
உணவு பொருட்கள் அளவு மிகவும் அதிகமாக உள்ளது

இதை தவிர விழாக்களில் வீணடிக்கப்படும் உணவுபொருடகளின் அளவு 
கணக்கிடமுடியாது தங்கள் கௌரவத்தை காட்டவும் ஊரார் மெச்சவும்
மக்கள் இது போன்ற அனாகநீகமான செயல்களில் ஈடுபடுகின்றனர்
இவர்களை யார் திருத்துவது/

உலகில் கோடிக்கணக்கான மக்கள் ஒருவேளை உணவுக்கு கூட 
வழியில்லாமல் மடிந்து போகின்றனர்
பலர் வறுமையில் வாடி வதங்கி தவிக்கின்றனர்

ஆனால் இப்படி விலை மதிக்கவொண்ணா உணவுபோருளை மக்கள் 
பாழ் செய்வது அவர்களை இந்த பிறவி அல்லது அடுத்த 
பிறவிகளில் வறுமையில் தள்ளி கொடுமைபடுத்தும் என்பதில் 
சந்தேகமில்லை
இதை உணர்ந்து கடவுளுக்கு சமமான உணவு பொருளை 
தேவையானவர்களுக்கு தேவையான அளவு வழங்கி 
பயன்படுத்தவேண்டும் 

இதை வழங்குபவர்களும் வாங்கி பயன்படுத்துபவர்களும் 
நினைவில் கொள்ள வேண்டும்

முற்பிறவியில் உணவு பொருட்களை வீணடித்தவர்களும் 
பசியால் வாடும் ஏழைகளுக்கு தங்களிடம் உணவிருந்தும் 
பிச்சையிடாதவர்களும்தான் அடுத்த பிறவியில் ஒரு வேளை
சோற்றுக்கு வழியில்லாமல் உலகில் திரிவார்கள் என்பது உண்மை 

அன்னபூரணியான பராசக்தியிடம் சிவ பெருமானே 
பிச்சை கேட்கும் நிலை உள்ளது  
ஆதலால்  தெய்வம் போன்ற அன்னத்தை 
உரிய மரியாதையுடன் பக்தியுடன் பயன்படுத்தவேண்டும் 

வீண் ஆடம்பரத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் 
இறைவனின் தண்டனைக்கு ஆளாவதுடன் துன்பத்திற்கும் ஆளாவது உறுதி.



Saturday, April 7, 2012

புழுவை நாடி சென்று மரணத்தை தழுவும் மீன்கள் போல

ஏன் ?


எதை எதையோ எண்ணி கவலைப்படுகிறோம்
தேவையில்லாமல் பல கற்பனைகளை வளர்த்துகொண்டு
அவைகள் நிறைவேறாமல் போய்விட்டதை மனதில் 
நினைத்து நினைத்து நிகழ்கால சந்தோஷங்களை 
இழந்துகொண்டு வாழ்வை துன்பமயமாக்கி கொள்ளுகிறோம் 

இறைவன் ஏராளமான இன்பங்களை நாம் கேட்காமலேயே 
அள்ளி அள்ளி கொடுத்திருக்க  அவைகளை
அனுபவிக்காமல் இன்பம் தருவதுபோல் தோற்றமளித்து 
நம்மை துன்ப கடலில் தள்ளி மூழ்கடிக்கும் விஷயங்களையே 
நாம் நாடி செல்கிறோம் தூண்டிலில் வைத்திருக்கும் 
புழுவை நாடி சென்று மரணத்தை தழுவும் மீன்கள் போல
 
நம்மை காக்க அறிவிருந்தும் அதை மறந்து உணர்ச்சிகளுக்கு
அடிமையாகி அறிவற்றவர்களோடு சேர்ந்து கொண்டு 
இறைவன் அளித்த அழகான வாழ்\கையை சிதைத்து கொள்ளுகிறோம்

இவையெல்லாம் தேவைதானா என்று ஒரு கணம் சிந்தித்தால் 
நம்மை சூழ்ந்துள்ள துன்பமெல்லாம் இன்பமாக மாறி விடும் 

புலன்களிடம் நம்  மனதைஒப்படைக்காமல் 
நம்மை படைத்த இறைவனிடம் நம் மனதை 
ஒப்படைத்துவிட்டால் போதும்

அவன் நமக்கு அளித்துள்ள 24மணி நேரத்தில் 
நமக்குள் இருந்துகொண்டு நம்மை இயக்கிகொண்டிருக்கும் அவனோடு 
உரையாட சில நிமிடங்கள் தினமும் செலவிட்டால் போதும் 

நம் வாழ்வு வளம் பெறும்
நலம் பெறும் 

Thursday, April 5, 2012

மனம் ஒரு குரங்கு

 மனம் ஒரு குரங்கு 


அந்த குரங்கை எப்படி நம் வழிக்கு கொண்டு வருவது?

ராமாயணத்தில் இந்த கேள்விக்கு பதில் இருக்கிறது
ராமாயணத்திலும் பல லட்சம் குரங்குகள் வருகின்றன 


அனைத்து உயிர்கள் மீதும் கருணை கொண்ட 
ஸ்ரீராமபிரான் அவர்களை தேடி 
வனத்திற்கே  சென்றான்


அங்குள்ள ஒரு குரங்கு மட்டும் ஸ்ரீ ராமபிரானிடம் 
தன்னை முழுமையாக ஒப்படைத்து விட்டது
அந்த குரங்குதான் ஸ்ரீ ஹனுமானாக உருவெடுத்தது


இராமாயண காவியத்தில் ஸ்ரீ ஹனுமான் இல்லாமல் 
எந்த சம்பவமும் இல்லை 


அனைவரும் போற்றும் அந்த நிலையை அடைய
காரணம் என்ன?


அவரின் பக்தி,பண்பு,பணிவு,ஆகிய குணங்கள்தான்
இறைவனிடம் முழுமையாக சரணடைந்தால் நாமும் 
அந்த பண்புகளை பெற்று உய்வடையலாம் 


நம்மை சிறை வைத்திருக்கும் நம் மன குரங்கை 
அடக்குவதை நிறுத்திவிட்டு அதை ஸ்ரீ ராமபிரானிடம் 
கொண்டுநிறுத்தி விட்டால்போதும் அனைத்தும் 
சரியாகிவிடும்

ஒவ்வொரு கணமும் ராம நாமத்தை சொல்லுவோம்
நலம் பெறுவோம் .ஸ்ரீ ராமபிரானின் அருள் பெற 
ஹனுமானின் அருளை வேண்டுவோம் 

Tuesday, April 3, 2012

Pl. leave your footprints













When we walk we leave our footprints
When we talk we create impressions
when we see something we appreciate or criticize
So when we visit a blog we must pass our comments
Comments make the blogger to correct themselves
or improve themselves or to strengthen themselves
to both sides of positive and adverse comments.
So readers Pl. leave your footprints in the blog.