Thursday, April 25, 2013

மகான் சேஷாத்ரி ஸ்வாமிகள்


மகான் சேஷாத்ரி ஸ்வாமிகள் 


ஒளி  மயமாய்  நாத  மயமாய்
இருக்கும்  இறைவன் ;
அக்னி  ஸ்வரூபமாய்  விளங்கும் 
 ஈசன்  குளிர்ந்தான் ;
அண்ணாமலையாக  
கோயிலில்  சிலையாய்  நின்றான்  
உண்ணாமுலை  உடனுறை  
அருணாசலேஸ்வரராக 
அடியவருக்கு  காட்சி  தந்து 
கடைத்தேற்றும்   பொருட்டே !
அவன்  திருப்பாதம்  போற்றி !

மகான் சேஷாத்ரி ஸ்வாமிகள் 

அத்திகிரியில்   தொடங்கிய 
 உன்  ஆன்மீக  பயணம்  ;;
அருணாச்சல கிரியில்  
அல்லவோ  நிறைவுற்றது  

அன்னையின்  அருள்  பெற்றவனே  
அண்டினோரை  அபயமளித்து  காத்தவனே 
உன்  நாமமொன்றே  போதும்  அனைத்து 
பாபங்களையும்  அழித்தொழிப்பதற்கு 

அம்பிகை  புதல்வா  போற்றி 
அருணாசலேஸ்வரரின் 
 அருள்  பெற்றவா   போற்றி  
அண்ணாமலையை  வலம்  வந்த  
ஸ்ரீ  சேஷாத்ரி   ஸ்வாமிகள்  திருவடிகள்  போற்றி  !

யார்  அறிந்தார்  உன்  பெருமையை  
நீ  இப்பூவுலகில்  நடமாடி  லீலைகள்  புரிந்தபோது ?

பிறை  சூடிய  பித்தனை  நெஞ்சில் 
சுமந்துசிவானந்த  வெள்ளத்தில்  மிதந்த  
உன்னை பித்தன்ன்றல்லவோ   என்று  
இவ்வுலக  மாந்தர்  எள்ளி  நகையாடினர் 

தன்னையறியும்  வழியை தரணிக்குணர்த்த 
அவதரித்த  ஸ்ரீ  ரமண  மகரிஷியை  கண்டெடுத்து  
காத்து  உலகுக்களித்த  உன்  கருணையை 
 கூற  வார்த்தைகள்  உண்டோ ?

அன்னை  காமாட்சியின்  அருட்காட்சியில் 
 முக்காலமும்  மூழ்கி  பேரின்பத்தில்  திளைத்திருந்த
 உன்னை  சிறுமதி  படைத்து  சிற்றின்பத்தில் 
 மூழ்கியுள்ள  அற்ப  மாந்தர்கள்  எவ்வாறு  அறிய  இயலும் ?

காண்போர்  வெறுக்கும்  
வெளித்தோற்றம்  காட்டியே  பரப்ரம்மத்துடன்  
கலந்துவிட்ட  நீ  மாயையில்  மூழ்கியுள்ள  
இவ்வுலக  மாந்தர்களை  உன்னருகில்  
வரவிடாமல்  செய்த  மாயம்  
உனக்கல்லவோ  தெரியும்  

கந்தை  துணியணிந்து  வலம்  வந்த  நீ  
உன்னை  நாடி  வந்தவர்களை  விரட்டியடித்தாலும் 
அதை  பொருட்படுத்தாது 
உன்  திருவடியை  பற்றியவர்களின்  
அகந்தையை  போக்கி  அவர்களின்  
துன்பத்தை  துடைத்த 
தயாபரன்   நீயன்றோ !

மெத்த  படித்தோரும் 
சாத்திர  ஞானம்  கொண்டோரும்  
அனுபவ  ஞானம்  கொண்ட  உன்னிடம்  
தோற்று  ஓடி  பின்பு உன் மகிமை உணர்ந்து 
உன்  திருவடியில்  தஞ்சமடைந்ததில்
வியப்பேதுமில்லையன்ரோ !

உன்  பெருமையறியாது  உள்ளத்தில்  
கள்ளம்  கொண்டு  உன்னை  
சோதனை  செய்ய  வந்தவர்கள்  வேதனைப்பட்டு 
ஓடியது  உன்  அவதார  லீலையன்றோ !

பூதஉடலை உதிர்த்தாலும்  
இன்றும்  சூட்சும  நிலையில்  நின்று 
உன்னை  நினைத்து  நாடி  வணங்குபவர்களின்
 பாபம்  போக்கி  தாபம்  நீக்கி  
நல்வழி  காட்டும்  கருணா  மூர்த்தியே  ! 
நின்  திருவடிகள்  போற்றி  போற்றி .

ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே. !
4 comments:

 1. ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி...

  ReplyDelete
  Replies
  1. அனுதினமும் அவரை போற்றுங்கள்.
   முடிந்தால்ஒருமுறை திருவண்ணாமலை
   சென்று அவர் ஆஸ்ரமத்தில் சென்று வணங்குங்கள்
   உங்களை கண்ணிமைபோல் காத்தருளுவார்
   கருணைக்கடல் அவர்

   Delete
 2. ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே. ! சரணம் சரணம்

  ReplyDelete

 3. Sankara I. Ramaswamy
  Apr 27 (7 days ago)

  to me
  Respected Sir,
  The simple poem on Sri. Mahan Seshadri Swamigal is really wonderful. Keep up your excellent poetic expertise, which is given to you ONLY by the GOD.
  Namaskarams.

  ReplyDelete