Monday, April 8, 2013

புது அக்ரஹாரம் பட்டாபிராமர் கோயில்


புது அக்ரஹாரம் பட்டாபிராமர் கோயில்

திருவையாற்றில் உள்ள
தியாக பிரம்மத்தின் பிருந்தாவனத்திலிருந்து
2 கி. மீட்டர் தொலைவில்
அமைந்துள்ளது புது அக்ரஹாரம்

இந்த சிறிய கிராமத்தில்
ஒரு பெரிய  விசேஷம் உண்டு
.
ஆம் இங்கே பரவசமூட்டும் கம்பீரத்தோடு
பட்டாபிராமர் கோயில் கொண்டுள்ளார்மூலவராகவும் உற்சவராகவும் 
விளங்குகின்ற
இந்த ராகவனுடைய
அழகு வர்ணனைகளுக்கு எட்டாதது

.அப்படிப்பட்ட வர்ணனை  கம்பன் வால்மீகி
போன்ற மகா கவிகளுக்கே சாத்தியம்.
இந்த புது அக்ரஹாரம் தோன்றியதின்
வரலாற்று பின்ன்னணியை முதலில் காண்போம்.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்
ஒருவரின் மனைவி மோகனாம்பாள் .
இவர்தான் புது அக்ரஹாரத்தில்
 பட்டபிராமர் ஆலயத்தை எழுப்பியவர்


இந்த ராணியின் பெயராலேயே
!பஞ்சநத மோகனாம்பாள்புரம் என்று
அழைக்கப்பட்ட இந்த கிராமம் காலப்போக்கில்
 புது அக்ரஹாரம் என மருவியது.

 திருவையாறு ஐயாறப்பன்
திருக்கோயிலின் வடபுறத்தில்
தேவியோடு காட்சி தருகின்ற
ஒரு பட்டாபிராமர் உண்டு.

அந்த ராகவனிடம் பக்தி உடையவராக
இருந்த தஞ்சை மகாராணி
புது அக்ரஹாரத்திலும் அப்படியோர்
ஒரு ஆலயம் இருக்க வேண்டுமென்ற
ஆசையில் இங்கோர் கோயிலை
கட்டியிருக்கலாம் என்கின்றனர்
விவரம் தெரிந்தவர்கள்.

புது அக்ரஹாரம் திருக்கோயிலில்
ராமாயணத்தில் வால்மீகி முனிவர்
செய்த பட்டாபிஷேக வர்ணனைப்படி
ராமபிரான் வீற்றிருக்கிறார்

தனது இடது கரத்தை முழங்காலில்
வைத்துக்கொண்டு வலக்கரத்தால்
 ஞான முத்திரை காட்டுகிறார்
.இவருடைய திருப்பாதத்தை
ஆஞ்சநேயர் ஒரு கையால் தாங்கி
மற்றொரு கையால் தாச பாவத்தில்
வாயைக் பொத்திக்கொண்டு விளங்குகிறார்
இதுவோர் ஒப்பற்ற காட்சி
(அந்த காட்சியைத்தான்
இவன் வரைந்திருக்கிறான்)

ராமனுக்கு பக்கத்தில் ஒரு கரத்தில்
தாமரை ஏந்தி மறு கரத்தால்
அயிஸ்வர்ய தன முத்திரை காட்டி
சீதாபிராட்டி வீற்றிருக்கிறாள்

அவளருகே நின்ற திருக்கோலத்தில்
சாமரம் வீசும் நிலையில் சத்ருக்கனனும்
வலது புறம்.கை கூப்பிய நிலையில்
லக்ஷ்மணரும் காணப்படுகின்றனர்

குடை பிடிக்கும் பாவனையில்
பரதாழ்வார் நிற்கின்றார்

தனியே ஒரு ஆஞ்சநேயர்
ராம கானம் செய்கின்றார்.
இப்படியோர் அற்புத ராம சபையை
காணாத கண்கள் கொடுப்பினை அற்றவை
என்றே கூற வேண்டும்.
(இந்த பட்டாபிராமன் 33 ஆண்டுகளுக்கு
முன் இந்த பட்டாபிராமனை தரிசித்திருக்கிறான்)

இங்கேயுள்ள பட்டாபிராமனின்
உற்சவ திவ்ய மங்கள விக்ரஹங்களும்
அற்புதமானவை உற்சவ ஆஞ்சநேயர் ராமாயணத்தை
ஒரு கையில் தாங்கி மற்றொன்றில்
ஜபமாலை வைத்திருக்கின்றார்.

Dasa Sri Anjaneya Swami with Ramayanam, Pudu Aharaharam, Thiruviyaru

'இந்த கலியில் ராம நாமத்தையும்
இராமாயண பாராயணத்தையும்
தவிர வேறு கதியில்லை 'என்று
போதிக்கும் குருநாதராக
இங்கே ஹனுமான் விளங்குகிறார்.

பட்டாபிராமன் ஞானமே வடிவானவன்
அந்த ராகவனையே வழிபடு கடவுளாக கொண்டு
வாழ்ந்திருந்த தியாகராஜசுவாமிகளின்
கீர்த்தனங்கள் பல 'புது அக்ரஹாரம் பட்டாபியைக்
குறித்து பாடபெற்றவை என்பது அறிஞர்களின் கருத்து

கோயிலடி திவ்யதேசத்தின்
அபிமான தலமாகவும்
புது அக்ரஹாரம் கொண்டாடப்படுகிறது.

இப்படி மெய் அன்புடன் விரும்பி தொழும்
அடியவர்க்கெல்லாம் மெய்யனாக இருந்து
 காக்கும் கருணா காகுத்தன் திருக்கோயிலுக்கு
நிரந்தர வருமானம் இல்ல என்பது வருந்த வைக்கிறது.
( இந்த கட்டுரை 2003 ஆம் ஆண்டு
வெளிவந்த நாளேட்டிலிருந்து தயாரிக்கப்பட்டது.)

இப்போதும் அதேநிலைமைதான் .
இருந்தாலும் கோயில் நன்றாக பராமரிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ராம பக்தர்களின் ஆதரவு தேவை.

கோயிலின் தற்போதைய தோற்றம் 

Sri Pattabirama Temple, Pudu Aharaharam, Thiruviyaru

விபீஷண ஆழ்வாரோடு
எழுவரான ராமபிரான். எத்தனை பேர் வந்தாலும்
தனது உடன்பிறப்புக்களாக வரித்துக்கொள்ள
உண்மையிலேயே காத்திருக்கிறார்.
ஆயினும் கைங்கர்யம் செய்து இளவாலாகின்ற
மகா பாக்கியம் யாருக்கு இருக்கிறதோ?
அந்த ராகவனே அறிவார்.

1 comment:

  1. தெய்வீக தகவல்களுடன் வரைந்த படம் மிகவும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete