Monday, April 8, 2013

தலைஎழுத்து மாற ராம நாமம் சொல்லுங்கள்
தலைஎழுத்து மாற 
ராம நாமம் என்னும் 
இரண்டெழுத்தை 
சொல்லுங்கள்

முற்றும் துறந்தஅத்வைதிகளே 
ராமச்சந்திர மூர்த்தியின் 
முகவழகில் சொக்கி போய்
அவன் தரிசனம் கண்டு 
விவரிக்கவொண்ணா பேரின்பத்தில் 
மூழ்கிவிட்டனர். 
அழியா பேரின்பம் பெற்றனர்.

பிரம்மத்தை உணர்ந்தவர்களே
அந்த பிரம்மமே உருவெடுத்து
வந்ததை கண்டு அதன் மீது
பக்தி கொண்டு அதன் சுவையை 
அனுபவித்து அவனோடு
கலந்துவிட்டனர். 

நாரதரின் அம்சமாக 
அவதரித்த புரந்தர  தாசர் 
ராம மந்திரம் இருக்க ஏன்
மற்ற மந்திரங்களை நாடி 
செல்கிறீர்கள் என்றார். 

ராம நாமே கற்கண்டு
ரசமறியாதவன் கல்குண்டு 
என்றார் அவர் 

ராம நாம பாயசகே. என்றார் 
மேலும் அவர் 

கற்பார் ராமபிரானைஅல்லால் 
மற்றும் கற்பரோ என்றார் 
கம்பநாட்டாழ்வார். 

ஆபத்திலே கைகொடுப்பதும்,
ஆபத்துக்களே வராமல் காப்பதும்
அளவில்லா ஆனந்தத்தை  அளிப்பதும், 
அனைத்து  அயிஸ்வர்யங்களை அளிப்பதும்
இந்த உலகை காப்பதும் அந்த ராம நாமமே 

காசியில் மரிப்பவர்க்கு
காசி விஸ்வநாதனே 
முக்தி அளிக்கும் ராம நாமத்தை
செவியில்ஓதி ஜீவர்களை 
கடைதேற்றுகிறான் 
என்று  அனைவரும் அறிவர் 

குலசேகராழ்வாரின் 
ராம பக்திக்கு நிகர் உண்டோ?

சென்ற நூற்றாண்டில் எது ராமனாகவும் 
கிருஷ்ணனாகவும் இந்த பூமிக்கு வந்ததோ 
அதுதான் பகவான் ராமக்ரிஷ்ணராக 
அவதரித்து வந்திருக்கிறது.என்று 
அந்த தெய்வமே தன் திருவாயால்
 மலர்ந்தருளியுள்ளதை நாம் மறக்கலாமோ 

கடந்த காலத்தை விடுங்கள். 
சமீப காலத்தில்  அவனை துதித்து 
அருள் பெற்ற மகான்களான 
போதேந்திர ஸ்வாமிகள்,
சதாசிவ பிரம்மேந்திர ஸ்வாமிகள் ,
சேஷாத்ரி ஸ்வாமிகள் 
தியாகராஜ  ஸ்வாமிகள்,
பத்ராசலம் ராமதாசர், 
அக்கல்கொட் மஹராஜ் 
சீரடி சாயிநாதன் ,மகாத்மா காந்தி  
பாப்பா ராமதாசர், 
யோகி ராம் சூரத்குமார்.
போன்ற எண்ணற்ற  மகான்கள்
நம்மிடையே நடமாடி ராம நாமத்தின் 
மகிமையை பறை சாற்றியுள்ளதை 
நாம் அறிவோம். 

நன்மையையும் செல்வமும் 
நாளும் நல்கும் ராம நாமம் சொல்லுங்கள் 

திண்மையும் பாவமும் சிதைந்து
தேய ராம நாமம் சொல்லுங்கள் 

ஜன்மமும் மரணமும் நீங்க 
ராம நாமம் சொல்லுங்கள் 

தீவினைகள் நிறைந்த
 நம் தலைஎழுத்து மாற 
ராம நாமம் என்னும் 
இரண்டெழுத்தை சொலுங்கள்.


ராம நாம மகிமையால் 
கற்கள் கடலில் மிதக்கவில்லையா?

கவலைகளால் பாரமாகிப்போன 
நம் மனம் ராம நாமம் ஜபிப்பதால்
லேசாகி போகும்.

ஹனுமான் கடலை 
ராம நாமம் துணை கொண்டு 
எளிதில் தாண்டவில்லையா?

நாமும் இந்த பிறவிக்கடலை 
ராம நாமத்தை கொண்டு 
எளிதாக தாண்டிவிடலாம்

இது சத்தியம். மட்டுமல்ல 
சாத்தியமும் கூட 

ஏனென்றால் 
ராம நாமம் நித்தியம்
.
கண்டவர்கள் 
பேச்சை கேட்காதீர்கள். 
விண்டவர்களின் 
பேச்சை கேளுங்கள் 
மூச்சு நிற்குமுன். 

துளசிதாசர்,ராமதாசர்,ராமானந்தர்,
கபீர்தாசர். இன்னும் எத்தனை பேர்களோ 
அவன் புகழை பாடி கடைத்தேறியவர்கள் 
இவனுக்கு தெரியாது. 

ராமாயணத்தை படித்தது போதும் 
கதையை கேட்டது போதும் 

ராம நாமம் சொல்ல துவங்குங்கள் 
உங்கள் வாழ்வில் அந்த கணத்திலிருந்து 
புது அத்தியாயம் துவங்க ஆரம்பித்துவிடும்
இது சத்தியம்.


ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 


4 comments:

 1. Replies
  1. நன்றி
   உலக கடமைகள் மத்தியில்
   இக்கணத்திலிருந்தே .
   ராமநாமம் சொல்ல ஆரம்பியுங்கள்

   Delete
 2. வீட்டில் அனைவரும் தங்கள் பதிவைப் படித்து
  மகிழ்ந்தோம்
  தங்களால் இந்த நாள் இனிய நாளானது
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete