Monday, September 9, 2013

கொழுக்கட்டை சொல்லும் ஆன்மிகம்




கொழுக்கட்டை சொல்லும் ஆன்மிகம் 



கொள் கட்டையும் - வாழ்கை தத்துவமும்

ஒரு உரல்- ஒரு உலக்கை

தனி தனி பெயரும்- குணமும்-சுவையும் கொண்ட எல்லா பொருளும் உரலின் வயிற்றுக்குள் கொட்டப்பட்டுவிட்டது.

அம்மா உலைக்கையை தூக்கிவிட்டார்கள். வலது கை மாற்றி இடது கை.
இடது கை மாற்றி வலது கை."ஆச்..ஆச்.." என அவள் எது வரை இடிப்பாள்..?

உரலுக்குள் இட்ட ஒவ்வொரு தனிப்பொருளும் தம் தனி தன்மையை இழந்து- தனியான் சுவைதன்மையை இழக்கும் வரை குத்தவேண்டும் உலக்கையால்.

உலக்கையால் இடிபடுவது தண்டனை அல்லவா..?
ஆம் தண்டனைதான்...?
"நான் எள்ளு.."
"நான் தேங்காய்.."
என்று தம் த்னி தன்மையில் இறுமாப்பு கொள்கிற ஆணவத்திற்கு கிடைக்கிற தண்டனை.

பல தனி பொருட்களை இப்படி உரலில் கொட்டி இடித்து உருவாவதும் ஒரு பொருள்தானே. அம்மா அதை எப்படி அழைக்கிறாள் தெரியுமா..?
"பூரணம்" என்கிறாள்.(absoluteness )





தனிபொருட்கள் கூட்டு பொருள் ஆகி- அந்த கூட்டுப் பொருள்தான் இப்போது பூரணமாக மாறி இருக்கிறது.

காரணப்பெயருடன் (பொட்டுடன் இருப்பதால் பொட்டுகடலை) இருந்த ஒவ்வொரு பொருளும் காரணமும் அழிந்து,பெயரும் அழிந்து, பூரணம் என்கிற தன்மை பெயருக்கு மாறிவிட்டது.

நம்மிடமும் சில தனி பொருட்கள் உண்டு-அவற்றை கூட்டுபொருளாக்கி-பூரணமடைய செய்யவேண்டும்.

உடல்-ஒரு பொருள்-அதற்கென தனிதன்மை- தொடு உணர்தல்.
கண் - பார்த்தல்- காது கேட்டல்-நாக்கு சுவைத்தல்- மூக்கு வாசம் உணர்தல்.

இந்தனிதன் தனிதன்மையினாலால் வாழ்கிறோம் நம் வாழ்வை.

இந்த தனிதன்மை பூரணப்படவேண்டும்.என்ன செய்வது..?
உரலில் இட்டு நசித்த மாதிரி புலன்களை இடிக்கவா முடியும்..? வேண்டாம்..நசிக்க வேண்டாம்..உணர்ந்தாலே போதும்.
உடல்-நாக்கு-கண்-மூக்கு-காது-மனம் ஆகியவை தம் த்னி தன்மையை மட்டும் தூக்கி பிடித்துக்கொண்டு ஆணவம் கொள்ளாமல் மற்ற புலன்களோடு பூரணப்படவேண்டும்.

உதாரணத்துக்கு

கண்- பார்த்தல் அதன்தொழில் எனில் மற்ற புலனறிவையும் தன்னோடு அது பிணைத்துக்கொள்லுதல் வேண்டும். ஆம் பார்த்தல் மட்டுமன்றி.,
கண்களால் -உணர்தல்-கேட்டல்-சுவைத்தல்-ஆகியவற்றை செய்து பழகுதல் வேண்டும்.

ஒவ்வொரு புலனும் மனதோடு கலக்கும்போதுதான் பூரணப்படும் இல்லை எனில் அது அதன் தனி தன்னையோடு இருக்கும்.
இருட்டில் கிடக்கும் ஒன்றை கயிறு என உணர்ந்து அறிவு சொல்லாத வரை கண் அதை பாம்பாகவே காட்டிக்கொண்டிருக்கும். அதன் விளைவாக காதுகள் இல்லாத பாம்பின் சீறலை கேட்பதும், மூக்கு இல்லாத பாம்பின் வாசனையை உணர்வதும், உடல் பாம்பு தன்னை சீண்டுவதாக அச்சம்கொள்வதும்- வெகு சாதாரணமாக நடந்துவிடும். பூரணப்படுவதே வாழ்கை.

அப்பாடா..பூரணத்தை அம்மா இடித்துவிட்டிருக்கிறாள்.

உரல் நிறைய நிறைந்திருப்பது பூரணம். இடித்த அம்மா அதை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றுகிறாள். இப்போது பாத்திரத்தில் இருப்பதும் பூரணமே. அவள் கைகளில் ஒட்டிக்கொண்டிருப்பதும் பூரணமே. எடுத்து போடுகையில் கொஞ்சமாய் கீழே சிந்திவிட்டது. அதுவும் பூரணமே. கீழே விழுந்ததில் சில துணுக்குகளை எறும்புகள் இழுத்து செல்கின்றன. அதுவும் பூரணமே.

ஆக பூரணமடைந்த பின் பூரணத்தின் ஒவ்வொரு பகுதியும் பூரணமே.
பார்த்தீர்களா கட்டுரை பிள்ளையாரின் கொழுகட்டையில் துவங்கி பகவத் கீதையின் பூரண தத்துவத்துக்கு வந்துவிட்டது.
இப்போது ஒப்புகொள்கிறீர்களா இரண்டுக்கும் உள்ள தொடர்பை..?

கவிழ்த்து வைத்த உரல்தான் நம் கபாலம். வலதும் இடதுமாய் சிந்தித்து நம் உணர்வுகள் பயணிக்கும் முதுகு எலும்புதான் (தண்டுவடம்) உலக்கை.

கொழுக்கட்டை பூரணத்துக்கு உலக்கையை கீழ்னோக்கி இடிக்க வேண்டும்.

நம் மனதின் பூரணத்துக்கு மூலாதாரத்திலிருந்து கபாலத்தை நோக்கி மேல்னோக்கி குண்டலியின் துணையோடு இடிக்க வேண்டும்.
பூரணம் என்பது பொருளல்ல தன்மை- அடையப்படவேண்டிய தன்மை.

அரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணு
இதை மாற்றுவோம்
எல்லாருமே ஒன்னு.
பூரணப்படுவோம். பூரணப்படுத்துவோம்

இந்த தகவலை மின்னஞ்சலில் அனுப்பியவர் pnathan123@gmail.com
இந்த தகவலை அளித்தவர் Kumar Ramanathan

pic-google images 

9 comments:

  1. விளக்கம் அருமை ஐயா... அனுப்பியவருக்கும் பதிவு செய்தமைக்கும் நன்றிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //தனிபொருட்கள் கூட்டு பொருள் ஆகி- அந்த கூட்டுப் பொருள்தான் இப்போது பூரணமாக மாறி இருக்கிறது.//

    அருமையான விளக்கங்கள், அண்ணா !

    பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  3. உரல் உலக்கை இவையெல்லாம் இப்போது யாருக்குமே தெரியாத பொருட்களாகி விட்டன.

    எல்லாமே மிக்ஸி, கிரைண்டர் என ஆகி விட்டது.

    அதுபோல அம்மா என்றாலும் வேறு யாரையோ குறிக்கும் சொல்லாகவே போய் விட்டது.

    எல்லாம் [விலையில்லா] மிக்ஸி கிரைண்டர் இவைகளால் வந்த வினை.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. பழைய கள் புதிய மொந்தையில்
      அவ்வளவுதான்

      மிக்சியில் போட்டாலும் கிரைண்டரில் போட்டாலும்
      தனி தனியாக இருப்பதனைத்தும் ஒன்றாய்தான் போகிறது.

      எனவே தத்துவம் அன்றும் ஒன்றுதான் இன்றும் ஒன்றுதான் என்றும் ஒன்றுதான்.

      யாரை அம்மா என்று அழைத்தாலும் மகாகவி பாரதி கூறியதுபோல் அனைத்து மாதரும் அவள் வடிவங்களே என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

      Delete
  4. உலக்கையைப்பற்றி நான் விபரமாக நகைச்சுவையாக ஓர் சிறுகதை எழுதி வெளியிட்டுள்ளேன்.

    நீங்க அவசியம் படித்துக் கருத்துச்சொல்லணும்.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html

    சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]

    >>>>>

    ReplyDelete
  5. அந்தக்காலப்பெண்கள் [சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு] யாரும், ரவிக்கை ஏதும் அணிந்ததாகத் தெரியவில்லை.

    புடவை மட்டுமே அணிவார்கள்.

    அவர்கள் கையை மேலே தூக்கித்தூக்கி உரல் + உலக்கையில் நெல் குத்தும்போது மிகவும் கவனமாக இருப்பார்களாம்.

    ”கமுக்கட்டை தெரியாமல் நெல் குத்துகிறாள் பார்” என்றுகூட வேடிக்கையாகச் சொல்லுவார்கள். ;)

    oooOooo

    ReplyDelete
  6. Replies
    1. முதன்முதலாக இவன் வலைப்பதிவிற்கு வந்து கருத்துகளை பகிர்ந்துகொண்டமைக்கு அன்றி.
      உங்களுடைய ஐயங்கார் சமையல் குறிப்புகள் அருமை.

      Delete