Saturday, November 23, 2013

அழகிய சிங்கனே அருள் தந்திடுவாய்

அழகிய சிங்கனே அருள் தந்திடுவாய் 







நலம் தரும் சொல் நாராயணா
என்று அறிந்துகொண்டான்
ஒரு சிறுவன்

அதுவே அனைவரையும் காக்கும்
என்று தன் தந்தைக்கு உபதேசம்
செய்தான்.

பிரணவ மந்திரத்தை தன்  தந்தை
பரமசிவனுக்கு உபதேசம் செய்த
சுவாமிநாதனைப்   போல்.

ஆதிசிவனோ அகந்தையற்றவன்
அன்பு   நிறைந்தவன்
ஏற்றுக்கொண்டான்

ஆனால்  இவன்  தந்தையோ
ஆணவம்  மிகுந்தவன்

அதனால்  எதையும்  ஆராய்ந்து
உண்மையை உணரும் தன்மையற்றவன்

வெகுண்டெழுந்து  தன்  மகன்  எனவும்  பாராது
கொல்ல   துணிந்தான் பல முறை

காக்கும் திருமால் காத்து நின்றான்
ஒவ்வொரு முறையும் இவன் திருந்துவான்
தன் அடாத செயலுக்கு வருந்துவான்
என்று எண்ணியே

முடிவில் அவன் விருப்பப் படியே
அவன் காட்டிய தூணிலேயே  தோன்றினான்
சிங்கமுகமும் மனித   உடலும்   கொண்டு

மனித  உடல்  கொண்டு  விலங்கு  போல்
நடந்துகொண்ட  அரக்கனை  அழித்தொழித்தான்

அழகிய சிங்கனை
அனுதினமும் பணிவோம்

அகமும் முகமும் மலர
மலர்கொண்டு பூசிப்போம்

ஆனந்த வாழ்வும்
அழியா பதமும் பெறுவோம்.

அழகிய சிங்கனே
அருள் தந்திடுவாய் 

12 comments:

  1. என் மகன் australia-வில் இருந்து,India வரமாட்டானா என்று நினைத்த போது,அங்கிருந்த படியே Newzeland, மாற்றி விட்டார்கள்...இந்தியநேரப்படி இரவு புறப்படுகிறேன்..அங்கே சென்று phone connection பெற்று பேசுகிறேன்...கவலை படாதே என mail மூலம் சொன்னான்...இன்று காலை திருவேலுக்கை "நரசிமானயும்,
    கருக்கினில் அமர்ந்த அம்பாள்யும் தரிசித்து விட்டு வரும்போது,phone வந்தது...newzeland flight ஏறும் முன் simcard for Newzeland available here என்ற விளம்பர பலகையை பார்த்து வாங்கினேன் என சொன்னான்..ஒரு நிம்மதி...இங்கே வந்து பார்த்தால் "ராமர் அனுப்பிவைத்த நரசிம்மன்...இதைவிட வேறு அனுக்ரஹம் வேண்டுமா? இதற்கே நான் கிஞ்சித்தும் தகுதி அற்றவன்...ரொம்ப நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நம்பியவர்களுக்கு
      நலம் தரும் நரசிம்மன்

      நம்பாதவர்களை நரகத்தில்
      தள்ளும் உக்ர சிம்மன். அவன்.

      Delete
  2. //அழகிய சிங்கனை
    அனுதினமும் பணிவோம்

    அகமும் முகமும் மலர
    மலர்கொண்டு பூசிப்போம்

    ஆனந்த வாழ்வும்
    அழியா பதமும் பெறுவோம். //

    படமும் பதிவும் மிக அருமை. பகிர்வுக்கு நன்றிகள், அண்ணா.

    ReplyDelete
  3. அழகிய சிங்கன் அருள் தரும் அக்காரக்கனி ..!

    ReplyDelete
    Replies
    1. அவன் அக்காரக்கனி மட்டுமல்ல
      அடியவர்கள்மீது அக்கறையுள்ள
      அன்புக் கனியும் கூட

      வருகைக்கு நன்றி அம்மணி

      Delete
  4. ///அழகிய சிங்கனை
    அனுதினமும் பணிவோம்

    அகமும் முகமும் மலர
    மலர்கொண்டு பூசிப்போம்

    ஆனந்த வாழ்வும்
    அழியா பதமும் பெறுவோம்.

    அழகிய சிங்கனே
    அருள் தந்திடுவாய் ///
    பணிவோம் பயன்பெறுவோம்
    நன்றி ஐயா

    ReplyDelete
  5. அழகிய சிங்கனே... அருள் தந்திடுவாய் அனைவருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. தருவான் தன்னருளை தடங்கலின்றி
      சத்தியமாய் நம்பியவருக்கு

      Delete
  6. அழகிய சிங்கனின் அருள் பெற்று அனைவரும் மகிழ்ந்திட
    வழி காட்டிடும் சிறப்பான பகிர்வு கண்டு உள்ளம் குளிர்ந்தது
    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி அம்மணி

      Delete