Thursday, November 28, 2013

எதற்காகப் பிறந்தேன்?


எதற்காகப் பிறந்தேன்?

எதற்காகப் பிறந்தேன்?

இவ்வுலகில் கணக்கற்ற கோடி
ஜீவராசிகள் இருக்கமுற்பிறவியில் 
செய்த புண்ணியங்களின் பயனாய்  
மனிதப் பிறவி  இறைவன்
எதற்காக அளித்தான்?


சுவர்க்கத்தில்  தேவர்களாய் பிறந்து
சுக போகத்தில் உழன்று  இறைவா !
உன்னை  மறந்து  பாழாகாமல்
எதற்காகப்  பிறந்தேன் மானிடனாய் ?

ஆன்மீக  ஞானமில்லாத 
காட்டுமிராண்டிகள் 
வாழும்  நாட்டில்  பிறக்காமல்  
ஆன்மீகமே உயிர்  மூச்சாய்க்  கொண்டு  
வாழும்  புனிதர்கள் வாசம் செய்யும்.
புண்ணிய பூமியாம் பாரதத்தில் 
எதற்காகப் பிறந்தேன்? 

தெய்வங்கள் போட்டி போட்டுக் கொண்டு
இப்புனித மண்ணில்
அவதாரம் செய்து ஞானத்தை
போதித்த மண்ணில்
நான் எதற்காகப் பிறந்தேன் ?

இவ்வுலக மாயையில் சிக்கி மூழ்கி
தன்னை மறந்து ,தான் யார்
என்பதையே  அறியாது
அலையும்  மூடர்களுடம்  கூடி
அரிதாய் கிடைத்த
பிறவியை  வீணடிப்பதற்கா
இவ்வுலகில் பிறந்தேன்?

எண்ணற்ற பிறவிகளை
எடுத்து ஓய்ந்து விட்டேன்

இனி வரும் பிறவியிலாவது
என்னை படைத்து  காக்கும்
எம்பெருமானை
எண்ணி எண்ணி மகிழ்ந்து
அவன் பெருமை பேசி
கிடைக்கும் பிறவியை
புனிதமாகி கொள்ள
விழைந்தேன்

ஆனால் 
அந்தோ பரிதாபம்!

இவ்வுலகில் பிறந்தவுடன்
சுற்றோரும் மற்றோரும்
உன்னை சிந்திக்க விடாமல்
செய்து விட்டனரே!

இவ்வுலக சுற்றமும், 
சேர்க்கும் பொருட்களும், 
வந்து போகும் இன்பமும் துன்பமும் 
இகழும் புகழும் நிலையில்லாதவை
என்பதை அறிந்துகொண்டேன்.

இனியும் தாமதித்தால்
இவ்வாழ்வு  முடிந்துவிடும்
மாளா   இருள்  சூழ்ந்துவிடும்
என்பதை உணர்ந்தேன்

உன்  நாமம் சொல்லத்
தொடங்கிவிட்டேன்





ராமா !   ராமா! 
இனி என் சிந்தையெல்லாம் 
நீதான் இருப்பாய் 

நான் நன்றாய் அறிந்துகொண்டேன்
புரிந்துகொண்டேன்,தெளிவுபெற்றேன்

ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்.

3 comments:

  1. /// இவ்வுலகில் பிறந்தவுடன் சுற்றோரும் மற்றோரும் உன்னை சிந்திக்க விடாமல் செய்து விட்டனரே! ///

    நிதர்சனமான உண்மை...

    ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்.

    ReplyDelete
  2. ஆன்மீகமே உயிர் மூச்சாய்க் கொண்டு
    வாழும் புனிதர்கள் வாசம் செய்யும்.
    புண்ணிய பூமியாம் பாரதத்தில் ..

    ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்.

    ராம ரஸ அமிர்தம் துளிர்க்கும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  3. ராமரஸம் அருமை.

    கோதண்டராமர் விக்ரஹரம் மிக அழகாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !

    ReplyDelete