Friday, November 29, 2013

பிறவிப் பிணிக்கு இதுதான் வைத்தியம்

 பிறவிப்  பிணிக்கு
 இதுதான் வைத்தியம்

விதைக்கும் எல்லா விதைகளும்
முளைப்பதில்லை

முளைத்த எல்லா விதைகளும்
கதிராகும் வரை நிலைப்பதில்லை.

கதிர் வந்தாலும் அதில் முழுவதும்
தானிய மணிகள்    இருப்பதில்லை

மணிகள் இருந்தாலும்  அனைத்தும்
சந்தைக்கு  வருவதில்லை

சந்தைக்கு வந்தாலும்
அனைத்தும் விற்ப்பதில்லை. .

விற்பதனைத்தும் மனிதனின்
வயிற்ருக்குள் போவதில்லை

இப்படியாக போய்கொண்டிருக்கும் ஒரு
விதையின்   பயணமே
 நிச்சயமற்ற  நிலையில்  உள்ளது

இத்தனைக்கும் ஒரு விதை முளைப்பதிலிருந்து மீண்டும் மண்ணுக்குள் செல்லும் வரை அது  செய்யவேண்டியதனைத்தும் அதில் ஏற்கெனவே இறைவனால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல்தான் ஒவ்வொரு உயிரின் வாழ்க்கையும் இறைவனால் ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்டு  .இவ்வுலகத்திற்கு அனுப்பப்படுகிறது.

நம்முடைய அறிவையும் ஆசைகளையும் கொண்டு அதை மாற்றியமைத்தாலும் முடிவில்  இறைவன் திட்டமிட்டபடிதான் நடக்கிறது. .

இந்த உடலில் நடக்கும் ஆச்சரியங்களை நம்மால் அறிய வெளிப்புற கருவிகளை நாம் நாட வேண்டியிருகிறது.
அதனால் முழுமையாக எதையும்
அறிய இயலாது என்பதே உண்மை.
இன்னும் அறியவேண்டியவை
ஆயிரமாயிரம் உள்ளது.

அனைத்தும் கடவுளின்  செயல்

இருந்தும் அகந்தையினால்
இதை மனிதர்கள்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

மனிதனின் வாழ்க்கையும் இப்படித்தான்
எதுவும் அவன் கையில் இல்லை

மருத்துவத்திற்கு பல லட்சம் செலவு செய்து
படிக்கிறான்.
முடிவில் நாடகத்தில் நடிக்க வந்துவிடுகிறான்

பல்லாயிரம் பெண்கள் பல லட்சங்களை
கொட்டி படிக்கிறார்கள். முடிவில்
திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில்
மூழ்கிவிடுகிறார்கள்.

இப்படிதான் ஒவ்வொருவரும்
நினைப்பது ஒன்று
சொல்வது ஒன்று
செய்வது ஒன்று என்று இருக்கிறார்கள்.

இப்படித்தான் வாழ்நாள் முழுவதும்
உடலைக் கவனிக்காது குடலை நிரப்புகிறார்கள்.
சுடலைக்குப் போகும்வரை
நோயினால்துன்புற்று மடிகிறார்கள்.

சிலர் ஏமாற்றியே  பிழைக்கிறார்கள்
பலர் ஏமாறியே  வாழ்க்கை
முழுவதும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

பலர் பிறருக்காக உழைத்தே
ஒன்றுக்கும் உதவாமல்
முதுமையில் தவிக்கிறார்கள்.

சிலர் பேசியே பிழைப்பை நடத்துகிறார்கள்.

சிலர் பேசினாலே நாடு இரண்டாகிறது.
வீடு ரெண்டாகிறது.நாசம் விளைகிறது.

பலர் பணம் பணம் என்று
பிணமாகும்வரை.  அலைகிறார்கள்.

இரு நாட்டின் தலைவர்களின்
தனிப்பட்ட விரோதம் போராக மாறி
கோடிக்கணக்கான மனிதர்கள் போரிட்டு
வீணே மாள்கின்றனர்.

ஒரு    சிலர் கடவுள் இல்லை
என்று பிதற்றித் திரிகிறார்கள்

சிலர் கடவுள்  இருக்கிறார்
என்று அரற்றி திரிகிறார்கள் .

கடவுளைக் காணாதவர்கள்
அவனை கண்டவர்கள்போல் புளுகியே
ஒருகூட்டதைத் சேர்த்துக்கொண்டு
அங்கும் இங்கும் திரிகிறார்கள்.

கடவுளைகல்லில்  தேடுகிறார்கள்.
மலையில் தேடுகிறார்கள்
மனிதர்களிடம்   தேடுகிறார்கள்
மதங்களிடம் தேடுகிறார்கள்.

ஆனால் அவன் அவ்வளவு எளிதாக
 யாருக்கும் கிடைப்பதில்லை.

அவன் தேடுபவர்களின் உள்ளத்தில்
ஒளிந்துகொண்டுவிட்டான்.

அவன் நாமத்தை இடைவிடாது


சொல்லிவந்தால்  மட்டும்தான்  அகப்படுவான் .
என்பதை  புரிந்துகொள்ளுங்கள் .

சொல்லுங்கள்  ராம நாமம் .

இப்பிறவியில்  இல்லாவிட்டாலும்
என்றாவது  ஒரு  பிறவியில்
அவனை அடைந்துவிடலாம் .

இது  சத்தியம்  நித்தியம்
பிறவிப்  பிணிக்கு  இதுதான் வைத்தியம்.
என்று சொல்கிறது
ஒரு  ராம நாம பயித்தியம். 

8 comments:

  1. //சொல்லுங்கள் ராம நாமம் .

    இப்பிறவியில் இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு பிறவியில்
    அவனை அடைந்துவிடலாம் .//

    அருமை. விதையைப்பற்றிச் சொல்லியுள்ளது யாவும் மனதில் விதையூன்றி ஆலவிருக்ஷமாக பதிந்து போனது. மிக்க நன்றி. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அனைத்தும் கடவுளின் செயல்

    hat is the truth
    nothing but truth

    ReplyDelete
  3. // மண்ணுக்குள் செல்லும் வரை... //

    அனைவரும் உணர வேண்டிய வரிகள் ஐயா...

    ReplyDelete