Saturday, November 9, 2013

நம்மை கடைதேற்றும் எளிதான வழி.

நம்மை 
கடைதேற்றும் எளிதான வழி. 

எல்லாம் இருந்தும் ?

எல்லாம் இருந்தும்
அது இல்லையேல்
எல்லாம் வீண்

அது என்ன ?



சொல்கிறார் ஆதி சங்கரர் பகவத் பாதாள்
குருவஷ்டகம் என்ற
அற்புதமான ஸ்தோத்திரத்தில்

ஒருவனுக்கு அனைவரும் மெச்சக்கூடிய
அழகிய வடிவம் இருக்கலாம்.

ரதி போன்ற அழகிய மனைவி
வாய்த்திருக்கலாம்

உயர்ந்த கீர்த்தி ,
பெருமை கிடைத்திருக்கலாம்

இமயமலை அளவிற்கு
செல்வங்கள் குவிந்திருக்கலாம்.

இவை எல்லாம் இருந்தாலும்
மனதில் சத்குருவின் பாதாரவிந்தங்களில்
பக்தி இல்லையேல் இவையெல்லாம்
வீண்.. வீண்.. வீண். என்கிறார்

உலகத்தில் பலர் இவர்களை
போற்றி வணங்கினாலும் உலகெங்கும்
இவருக்கு மதிப்பிருந்தாலும் .
மனதில் சத்குருவின் பாதாரவிந்தங்களில்
பக்தி இல்லையேல் இவையெல்லாம்
வீண்.. வீண்.. வீண். என்கிறார்

உலகின் சக்ரவர்த்தியாக இருந்தாலும்
பலர் இவர் பாதத்தில் விழுந்து வணங்கினாலும்
மனதில் சத்குருவின் பாதாரவிந்தங்களில்
பக்தி இல்லையேல் இவையெல்லாம்
வீண்.. வீண்.. வீண். என்கிறார்

இவ்வுலகத்தில் இருக்கும் செல்வங்களும்,
மதிப்பும் நாம் தரிக்கும் இந்த உடலும்
நாம் கண்டுகொண்டிருக்கும்போதே
கண  நேரத்தில் காணாமல்
மறைந்துவிடும்

இவைகள் நிலையற்றவை.
எனவே இவைகளையே எப்போதும்
நினைத்துக்கொண்டு.
நிலையான பரமாத்மாவை மறந்துவிட்டு
மாயையில் மூழ்கி மாண்டுவிடக்கூடாது. .

எண்ணற்ற  வடிவங்களில் தோன்றும்
பரமாத்மாவின் ரூபங்கள் நம்மை
மாய வலையில் சிக்க வைத்துவிடும்.

தத்துவங்கள் நம்மைகுழப்பி
தடுமாற செய்துவிடும்.

ஆனால் என்றும் மாறாது
நம் முன்னே காட்சி தந்து
நம்மை ஆட்கொள்ளும்.
குருவின் ஸ்வரூபம் 
வணங்குவதற்கு. எளிது.
தியானிப்பதற்கு எளிது.

மும்மூர்த்திகளின்
ஒன்றான வடிவம் சத்குரு



அவர் பாதாரவிந்தங்களில் பணிந்து
அகந்தையை விட்டு ஆசா பாசங்களில்
அகப்பட்டுக்கொண்டு
வழி தவறி போகாமல்
 நம்மை காத்துக்கொள்ளவேண்டும்.

ராம நாமத்தை எப்போதும் 
உச்சரிக்க வேண்டும்.





குருவின் வடிவத்தை
தியானம் செய்ய வேண்டும்.




அதுவே நம்மை
கடைதேற்றும் எளிதான வழி. 

4 comments:

  1. ////அகந்தையை விட்டு ஆசா பாசங்களில்
    அகப்பட்டுக்கொண்டு
    வழி தவறி போகாமல்
    நம்மை காத்துக்கொள்ளவேண்டும்.////
    நன்றாக சொன்னீர்கள் ஐயா
    அகந்தை ஆபத்து

    ReplyDelete
    Replies
    1. அகந்தையில்லா குழந்தை
      அழுதாலும் சிரித்தாலும்
      பார்க்க பார்க்க இன்பம்.
      அகந்தையுடைய நாமோ
      அழுதால் பிறர் சிரிப்பார்
      சிரித்தால் பிறர் எள்ளி நகைப்பார்.

      Delete
  2. //குருவின் வடிவத்தை தியானம் செய்ய வேண்டும்.
    அதுவே நம்மை கடைதேற்றும் எளிதான வழி. //

    எளிமையாகவும் அருமையாகவும் சொல்லியுள்ள அண்ணா வாழ்க !

    ReplyDelete
    Replies
    1. அண்ணாவை வாழ்த்தும் தம்பி வாழ்க

      Delete