Thursday, May 29, 2014
Wednesday, May 28, 2014
Tuesday, May 27, 2014
மனதிற்கு உபதேசம்
மனதிற்கு உபதேசம்
மனமே நீ எப்போதும்
ஸ்ரீராமபிரானின் திருவடிகளையே நாடு
அதுதான் உன் நிரந்தர வீடு
புலன்களின் பின்னே செல்லாதே
பின் துன்பங்களில் சிக்கி தவிக்காதே
சொந்தங்களும் பந்தங்களும்
விரிக்கும் வலையில் வீழாதே
எதையும் உனதென்று எண்ணாதே
எது வந்தாலும் மன அமைதியை இழக்காதே
வண்ண வண்ண ஜாலங்கள் காட்டும்
நீர்க்குமிழியே இவ்வுலக வாழ்வு
நீர்க் குமிழி வெடித்து வெளியேறும்
உள்ளிருக்கும் காற்று போல்
இந்த உடலில் உள்ளே வந்து போகும் காற்று
வெளியேறிவிடும் சந்தடியில்லாமல்.
இதயத்தில் உறையும் இறைவனைக்
கண்டுகொண்டால் என்றும் துன்பமில்லை
மனமே நீ எப்போதும்
ஸ்ரீராமபிரானின் திருவடிகளையே நாடு
அதுதான் உன் நிரந்தர வீடு
புலன்களின் பின்னே செல்லாதே
பின் துன்பங்களில் சிக்கி தவிக்காதே
சொந்தங்களும் பந்தங்களும்
விரிக்கும் வலையில் வீழாதே
எதையும் உனதென்று எண்ணாதே
எது வந்தாலும் மன அமைதியை இழக்காதே
வண்ண வண்ண ஜாலங்கள் காட்டும்
நீர்க்குமிழியே இவ்வுலக வாழ்வு
நீர்க் குமிழி வெடித்து வெளியேறும்
உள்ளிருக்கும் காற்று போல்
இந்த உடலில் உள்ளே வந்து போகும் காற்று
வெளியேறிவிடும் சந்தடியில்லாமல்.
இதயத்தில் உறையும் இறைவனைக்
கண்டுகொண்டால் என்றும் துன்பமில்லை
Monday, May 26, 2014
இறைவனுக்கு நன்றி
இறைவனுக்கு நன்றி
நம் நாடு 1947 ஆம் ஆண்டு வெள்ளையர்கள்
என்ற கொள்ளையர்கள் நம் நாட்டை துண்டாடி
நம் நாட்டு கொள்ளையர்களிடம்
ஆட்சியை ஒப்படைத்தனர்.
தெய்வ நம்பிக்கை யற்றவர்கள், நம் புண்ணிய
பாரத பூமியில் நிலவும் உயரிய
பண்பாட்டை சிதைத்தவர்கள் இன்று காணாமல்
போய்விட்டனர். அவர்கள் நிரந்தரமாக தலை தூக்க விடாமல்
சித்தர்களும் யோகிகளும் ரிஷிகளும், மகான்களும்
நம்மையும் நம் நாட்டையும் காப்பாற்றுவார்களாக
கங்கா மாதாவையும், அவளை தான் சிரசில் தாங்கியுள்ள
கங்காதரனையும் வணங்கி ,பாராளுமன்றத்தை கோயிலாக
கருதி வணங்கி பதவியை ஏற்றுக்கொண்ட நம்
பாரத பிரதமர் பல்லாண்டு வாழி
நம் நாட்டை பலமுள்ள நாடாக
நம் பண்பாட்டை உயர்த்தும் விதமாக,
நம் நாட்டு மக்களை சுரண்டல்காரர்களிடமிருந்து மீட்டு
அவர்களுக்கு நல்ல வாழ்வாதாரத்தையும்.
நம்மை சுற்றியுள்ள நாடுகளுடன்
அமைதியான நல்லுறவை பேணுபவர்களாக
விளங்க வழி வகை மேற்கொள்ள
எல்லா தெய்வங்களும்
அனைவருக்குள்ளும் அந்தராத்மாவாக
விளங்கும் அந்த கண்ணன் துணை புரிவானாக .
அனைத்துயிர்க்கும் அபயம் அளிக்கும் ஆத்மராமன்
அனைவரின் வேண்டுதலையும் நிறைவேற்றி வைப்பானாக
நம் நாடு 1947 ஆம் ஆண்டு வெள்ளையர்கள்
என்ற கொள்ளையர்கள் நம் நாட்டை துண்டாடி
நம் நாட்டு கொள்ளையர்களிடம்
ஆட்சியை ஒப்படைத்தனர்.
தெய்வ நம்பிக்கை யற்றவர்கள், நம் புண்ணிய
பாரத பூமியில் நிலவும் உயரிய
பண்பாட்டை சிதைத்தவர்கள் இன்று காணாமல்
போய்விட்டனர். அவர்கள் நிரந்தரமாக தலை தூக்க விடாமல்
சித்தர்களும் யோகிகளும் ரிஷிகளும், மகான்களும்
நம்மையும் நம் நாட்டையும் காப்பாற்றுவார்களாக
கங்கா மாதாவையும், அவளை தான் சிரசில் தாங்கியுள்ள
கங்காதரனையும் வணங்கி ,பாராளுமன்றத்தை கோயிலாக
கருதி வணங்கி பதவியை ஏற்றுக்கொண்ட நம்
பாரத பிரதமர் பல்லாண்டு வாழி
நம் நாட்டை பலமுள்ள நாடாக
நம் பண்பாட்டை உயர்த்தும் விதமாக,
நம் நாட்டு மக்களை சுரண்டல்காரர்களிடமிருந்து மீட்டு
அவர்களுக்கு நல்ல வாழ்வாதாரத்தையும்.
நம்மை சுற்றியுள்ள நாடுகளுடன்
அமைதியான நல்லுறவை பேணுபவர்களாக
விளங்க வழி வகை மேற்கொள்ள
எல்லா தெய்வங்களும்
அனைவருக்குள்ளும் அந்தராத்மாவாக
விளங்கும் அந்த கண்ணன் துணை புரிவானாக .
அனைத்துயிர்க்கும் அபயம் அளிக்கும் ஆத்மராமன்
அனைவரின் வேண்டுதலையும் நிறைவேற்றி வைப்பானாக
Saturday, May 24, 2014
ஆனந்தமாய் சொல்லு ராம ராம ராம்
ஆனந்தமாய் சொல்லு
ராம ராம ராம்
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்
அன்பு நிறைந்த மனதுடன்
ஆனந்தமாய் சொல்லு
ராம ராம ராம் ராம ராம ராம்
ஸ்ரீ ராம ராம ராம்
பாவங்களும் துன்பங்களும்
காணாமல் போக மீண்டும் மீண்டும்
சொல்லு ராம ராம ராம்
ராம ராம ராம் ராம ராம ராம்
ஸ்ரீ ராம ராம ராம்
அவன் திவ்ய நாமம் ஒன்றே போதும்
சம்சார சாகரத்தை எளிதாக
கடந்திட அதனால் சொல்லு
ராம ராம ராம் ராம ராம ராம்
ஸ்ரீ ராம ராம ராம்
அவன் நாமம் ஒன்றே அமைதியும்
ஆனந்தமும் அளிக்கும் வற்றா சுரங்கம்
அந்த நிலையை அடைய எப்போதும் சொல்லு
ராம ராம ராம் ராம ராம ராம்
ஸ்ரீ ராம ராம ராம்
அபலைகளுக்கு பலம் அளித்து காப்பவன்
ஆனந்த வாழ்விற்கு உறுதுணை அவன்
எனவே அல்லும் பகலும் சொல்லு
ராம ராம ராம் ராம ராம ராம்
ஸ்ரீ ராம ராம ராம்
பக்தர்களும் தெய்வங்களும் ஜெபிக்கும்
மந்திரம் அவன் நாமம்
ஞானிகளின் இதய ஒலியாய் விளங்கும்
அவனின் நாமம் திரும்ப திரும்ப சொல்லு
ராம ராம ராம் ராம ராம ராம்
ஸ்ரீ ராம ராம ராம்
அவனே அன்னை,
அவனே தந்தை ,
அவனே தோழன்
அவனே நம்மை எப்போதும் கைவிடாத துணைவன்
நம்பியவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் அவன்
எனவே எப்போதும் சொல்லு
ராம ராம ராம் ராம ராம ராம்
ஸ்ரீ ராம ராம ராம்
இந்த பாடலின் ஒலி இணைப்பு.
http://clip.dj/prema-mudita-manase-kaho-o-s-arun-download-mp3-mp4-9wy2Ll3n7TE
Friday, May 23, 2014
கணபதியே கணபதியே
கணபதியே கணபதியே
கணபதியே கணபதியே
வளமாய் வாழ தருவாய்
நவநிதியே
ஆலயத்திலும் இருப்பாய்
ஆளில்லா ஆற்றங்கரையினிலும் இருப்பாய்
புகலில்லா மனிதருக்கு
புகலும் நீயே இகழே வாராது
காத்து பாரோர் புகழும்
வாழ்வை அளிப்பவனும் நீயே
மஞ்சளில் பிடித்து
வைத்தாலும் நீ வருவாய்
மண்ணில் பிடித்து
வைத்தாலும் நீ வருவாய்
உன் மனதினில் இடம் பிடிக்க
நீ வரமருள்வாய்.
ஓவியம் -தி. .ரா.பட்டாபிராமன்
கணபதியே கணபதியே
வளமாய் வாழ தருவாய்
நவநிதியே
ஆலயத்திலும் இருப்பாய்
ஆளில்லா ஆற்றங்கரையினிலும் இருப்பாய்
புகலில்லா மனிதருக்கு
புகலும் நீயே இகழே வாராது
காத்து பாரோர் புகழும்
வாழ்வை அளிப்பவனும் நீயே
மஞ்சளில் பிடித்து
வைத்தாலும் நீ வருவாய்
மண்ணில் பிடித்து
வைத்தாலும் நீ வருவாய்
உன் மனதினில் இடம் பிடிக்க
நீ வரமருள்வாய்.
காக்கும் தெய்வங்களே வணக்கம்
காக்கும் தெய்வங்களே
வணக்கம்
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்
பாற்கடலில் பள்ளி கொண்ட
கருணைக்கடலே
கார்மேக வண்ணா
பரந்தாமா பக்தர்களைக் காக்க
புவியில் அர்ச்சாவதாரமாய்
நிலை கொண்ட நாராயணா
ஆவியாய் அண்டத்தில் திரியும்
உயிர்களுக்கு உடல்தந்து,
இருக்க இடம் தந்து
உணவுதந்து உதவும்
புவியன்னையே
உலகில் இன்பமுடன் செழிப்புடன் வாழ
அறம் வளர்க்க வகை செய்யும்
செல்வமகளே
அனைவரையும் பெற்ற
திருமகள் அன்னையே
உங்கள் அனைவருக்கும் கோடி
கோடி வணக்கங்கள்.
வணக்கம்
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்
பாற்கடலில் பள்ளி கொண்ட
கருணைக்கடலே
கார்மேக வண்ணா
பரந்தாமா பக்தர்களைக் காக்க
புவியில் அர்ச்சாவதாரமாய்
நிலை கொண்ட நாராயணா
ஆவியாய் அண்டத்தில் திரியும்
உயிர்களுக்கு உடல்தந்து,
இருக்க இடம் தந்து
உணவுதந்து உதவும்
புவியன்னையே
உலகில் இன்பமுடன் செழிப்புடன் வாழ
அறம் வளர்க்க வகை செய்யும்
செல்வமகளே
அனைவரையும் பெற்ற
திருமகள் அன்னையே
உங்கள் அனைவருக்கும் கோடி
கோடி வணக்கங்கள்.
Wednesday, May 21, 2014
திருப்பதி வாசனே
திருப்பதி வாசனே
திருப்பதி வாசனே
திருவோடு விளங்கும் ஈசனே
திருமலையில் நின்றருளும்
திருமாலே காணக் காண
திகட்டாத தெள்ளமுதனே
மலைபோல் துன்பங்கள்
வந்தாலும் கலங்காத மனம்
வரமருள்வாய்
பொறுப்போடு பக்தர்களின்
அல்லல் அகற்றும் அலைமகளை
திருமார்பில் கொண்டவனே
நாவில் உன் நாமம் எந்நேரமும்
தவழட்டும்.இதயத்தில்
உன் திருவடிவம் நிலையாய்
நின்று மாறா இன்பம் அருளட்டும்.
பாரிலுள்ளோர் அனைவரும்
பகைமை நீக்கி அன்போடு
பரம சாந்தியுடன் வாழ
கருணை செய்வாய்
ஓவியம். தி.ரா.பட்டாபிராமன்
திருப்பதி வாசனே
திருவோடு விளங்கும் ஈசனே
திருமலையில் நின்றருளும்
திருமாலே காணக் காண
திகட்டாத தெள்ளமுதனே
மலைபோல் துன்பங்கள்
வந்தாலும் கலங்காத மனம்
வரமருள்வாய்
பொறுப்போடு பக்தர்களின்
அல்லல் அகற்றும் அலைமகளை
திருமார்பில் கொண்டவனே
நாவில் உன் நாமம் எந்நேரமும்
தவழட்டும்.இதயத்தில்
உன் திருவடிவம் நிலையாய்
நின்று மாறா இன்பம் அருளட்டும்.
பாரிலுள்ளோர் அனைவரும்
பகைமை நீக்கி அன்போடு
பரம சாந்தியுடன் வாழ
கருணை செய்வாய்
Friday, May 16, 2014
தாமரைப்பூவில் அமர்ந்தவளே
தாமரைப்பூவில் அமர்ந்தவளே
தாமரைப்பூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே… செந் (தாமரை)
சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன்பாதம் எந்நாளும் தஞ்சமே திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே.. செந் (தாமரை)
அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே
அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே
செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலே
உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே (தாமரை)
இந்த பாடலை இன்னிசை குயில் சுசீலா குரலில் கேட்க
http://www.5abimusic.com/term/thamarai-poovil-amarnthavale
தாமரைப்பூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே… செந் (தாமரை)
சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன்பாதம் எந்நாளும் தஞ்சமே திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே.. செந் (தாமரை)
அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே
அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே
செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலே
உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே (தாமரை)
இந்த பாடலை இன்னிசை குயில் சுசீலா குரலில் கேட்க
http://www.5abimusic.com/term/thamarai-poovil-amarnthavale
தாமரை செல்வியே தயை புரிவாய்.
தாமரை செல்வியே தயை புரிவாய்.
அலைகடலில் தோன்றிய அன்னையே
அரவணைப்பள்ளியானின் இதயத்தில்
இடம்கொண்டான் உன்னையே
அதிகாலையில் தீபமேற்றி
உன்னை வணங்கும் பக்தர் வாழ்வில்
வளம் சேரும் உண்மையே
இல்லை என்ற சொல்லை
இல்லாமல் ஆக்கிடும்
இலக்குமிதேவி நீ
தாமரை மலரில்
வீற்றிருக்கும் தேவியே
உன் பார்வை பட்டால்போதும்
வறுமை அகன்றிடும்
வாழ்வில் பெருமைகள் குவிந்திடும்.
செல்வத்தினால் செருக்குற்றால்
அகன்றிடுவாய்
இல்லாதோர்க்கு
உதவினால் நீ மகிழ்ந்திடுவாய்.
அறம் வளர்க்கும் நாயகியே
அரங்கனிடம் அடியவர்களின்
குறை காணாது அருள் செய்ய
பரிவு காட்டும் தாயே
என்றென்றும் என் உள்ளத்தில்
நீங்காது நின்று அருள் புரிவாய்
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்
அலைகடலில் தோன்றிய அன்னையே
அரவணைப்பள்ளியானின் இதயத்தில்
இடம்கொண்டான் உன்னையே
அதிகாலையில் தீபமேற்றி
உன்னை வணங்கும் பக்தர் வாழ்வில்
வளம் சேரும் உண்மையே
இல்லை என்ற சொல்லை
இல்லாமல் ஆக்கிடும்
இலக்குமிதேவி நீ
தாமரை மலரில்
வீற்றிருக்கும் தேவியே
உன் பார்வை பட்டால்போதும்
வறுமை அகன்றிடும்
வாழ்வில் பெருமைகள் குவிந்திடும்.
செல்வத்தினால் செருக்குற்றால்
அகன்றிடுவாய்
இல்லாதோர்க்கு
உதவினால் நீ மகிழ்ந்திடுவாய்.
அறம் வளர்க்கும் நாயகியே
அரங்கனிடம் அடியவர்களின்
குறை காணாது அருள் செய்ய
பரிவு காட்டும் தாயே
என்றென்றும் என் உள்ளத்தில்
நீங்காது நின்று அருள் புரிவாய்
Tuesday, May 13, 2014
பக்த பிரகலாதன் செய்த துதி
பக்த பிரகலாதன் செய்த துதி
பிரகலாதன்
ஹரியின் பரம பக்தன்
தாயின் கருவிலேயே நாரத மகரிஷியால்
நாராயண மந்திர உபதேசம் பெற்ற புண்ணியன்
அவனை தன மகன் என்றும் பாராது
கர்வம் கொண்ட ஹிரண்யன் பலவகையிலும்
துன்புறுத்தியது மட்டுமல்லாது
அவன் சித்திரவதை செய்து கொல்ல முயன்றான்
ஆனால் ஹரியின் அருளால் அனைத்து
துன்பங்களிலிருந்தும் பிரகலாதன் காப்பாற்றப்பட்டான்.
ஹரி இந்த அண்டம் முழுவதும் உள்ளான்,
ஒவ்வொரு அணுவினுள்ளும் உள்ளான் என்ற
பிரகலாதனின் கருத்தை மெய்ப்பிக்க
அங்கிருந்த தூணிலிருந்து வெளிப்பட்டு
ஹிரண்யனை கொன்றான்.
தன் பக்தனுக்கு கொடுமை இழைத்த
அரக்க மனம் கொண்டவனைக் கொன்ற பிறகும்
ஹரியின் சீற்றம் அடங்கவில்லை .
அனைவரும் அவனை
நெருங்கவே அஞ்சினர்.
பிரம்மனும், சிவபெருமானும்,
மற்ற தேவர்களும் வேண்டியும்
நரசிங்கப் பெருமானின் சீற்றம் தணியவில்லை.
அவர்களை அடுத்து மஹாலக்ஷ்மி நரசிங்கப்பெருமானை
வேண்டியும் பலனில்லை. அவள் இதற்குமுன்
இதுபோன்ற உக்ரத்தை கண்டதில்லை.
உடனே அனைவரும் சிறுவன் பிரகலாதனை
நரசிங்கப்பெருமானிடம் தன் தந்தைமீது
கொண்ட கோபத்தை விடுத்து மீண்டும்
சாந்தமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புமாறு
வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்
கூப்பிய கைகளுடன் நரசிங்க பெருமானின்
நோக்கி சென்று அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி
பெருமானை போற்றித் துதிக்க தொடங்கினான்.
பிரகலாதன்.
இன்னும் வரும்
பிரகலாதன்
ஹரியின் பரம பக்தன்
தாயின் கருவிலேயே நாரத மகரிஷியால்
நாராயண மந்திர உபதேசம் பெற்ற புண்ணியன்
அவனை தன மகன் என்றும் பாராது
கர்வம் கொண்ட ஹிரண்யன் பலவகையிலும்
துன்புறுத்தியது மட்டுமல்லாது
அவன் சித்திரவதை செய்து கொல்ல முயன்றான்
ஆனால் ஹரியின் அருளால் அனைத்து
துன்பங்களிலிருந்தும் பிரகலாதன் காப்பாற்றப்பட்டான்.
ஹரி இந்த அண்டம் முழுவதும் உள்ளான்,
ஒவ்வொரு அணுவினுள்ளும் உள்ளான் என்ற
பிரகலாதனின் கருத்தை மெய்ப்பிக்க
அங்கிருந்த தூணிலிருந்து வெளிப்பட்டு
ஹிரண்யனை கொன்றான்.
தன் பக்தனுக்கு கொடுமை இழைத்த
அரக்க மனம் கொண்டவனைக் கொன்ற பிறகும்
ஹரியின் சீற்றம் அடங்கவில்லை .
அனைவரும் அவனை
நெருங்கவே அஞ்சினர்.
பிரம்மனும், சிவபெருமானும்,
மற்ற தேவர்களும் வேண்டியும்
நரசிங்கப் பெருமானின் சீற்றம் தணியவில்லை.
அவர்களை அடுத்து மஹாலக்ஷ்மி நரசிங்கப்பெருமானை
வேண்டியும் பலனில்லை. அவள் இதற்குமுன்
இதுபோன்ற உக்ரத்தை கண்டதில்லை.
உடனே அனைவரும் சிறுவன் பிரகலாதனை
நரசிங்கப்பெருமானிடம் தன் தந்தைமீது
கொண்ட கோபத்தை விடுத்து மீண்டும்
சாந்தமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புமாறு
வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்
கூப்பிய கைகளுடன் நரசிங்க பெருமானின்
நோக்கி சென்று அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி
பெருமானை போற்றித் துதிக்க தொடங்கினான்.
பிரகலாதன்.
இன்னும் வரும்
ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி
ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி
அலர்மேல் மங்கையுடன் உறையும்
அழகிய சிங்கனே அருள் தருவாய்
சோளிங்கபுர மலையுச்சியில்
நிலை கொண்டவா என்
இதயத் தாமரையில்
குடி கொள்ள வாராய்
அன்புடன் நினைக்கும் அடியவர்க்கு
துணையாவாய்
அரக்கமனம் கொண்டு
பிறரை துன்புறுத்தும்
பாதகரை அழிக்கும்
கணையாவாய்
மனம் உருகி அழைத்திட்டால்
அருகே இருந்து உதவும்
தோழனாவாய்
அணுவிற்குள்
அணுவாய் இருப்பவனே
உயிருக்குள்
உயிராய் உறைபவனே
உன் காலடியே கதி
என்றிருப்போர்க்கு
காவலனாய்
இருந்து காப்பவனே
கவலைகள் தோன்றிடில்
காணாது போகும்
உந்த திருநாமத்தை
உச்சரித்தால் போதும்
பிறவிக் கடலை
கடக்கும் உபாயம் நீ
பிரகலாதன் கண்டெடுத்த
ரத்தினம் நீ
தந்தையும் நீ தாயும் நீ
பந்துவும் நீ அனைத்தும் நீ
அருள்வாய் நீ
அலர்மேல் மங்கையுடன் உறையும்
அழகிய சிங்கனே அருள் தருவாய்
சோளிங்கபுர மலையுச்சியில்
நிலை கொண்டவா என்
இதயத் தாமரையில்
குடி கொள்ள வாராய்
அன்புடன் நினைக்கும் அடியவர்க்கு
துணையாவாய்
அரக்கமனம் கொண்டு
பிறரை துன்புறுத்தும்
பாதகரை அழிக்கும்
கணையாவாய்
மனம் உருகி அழைத்திட்டால்
அருகே இருந்து உதவும்
தோழனாவாய்
அணுவிற்குள்
அணுவாய் இருப்பவனே
உயிருக்குள்
உயிராய் உறைபவனே
உன் காலடியே கதி
என்றிருப்போர்க்கு
காவலனாய்
இருந்து காப்பவனே
கவலைகள் தோன்றிடில்
காணாது போகும்
உந்த திருநாமத்தை
உச்சரித்தால் போதும்
பிறவிக் கடலை
கடக்கும் உபாயம் நீ
பிரகலாதன் கண்டெடுத்த
ரத்தினம் நீ
தந்தையும் நீ தாயும் நீ
பந்துவும் நீ அனைத்தும் நீ
அருள்வாய் நீ
Monday, May 12, 2014
இன்று நரசிம்ம ஜெயந்தி
இன்று நரசிம்ம ஜெயந்தி
விலங்கிலிருந்து நரனாக (மனிதனாக)
பிறவிஎடுத்த நாம் விலங்கு போல்தான்
வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறோம்.
உறங்குவது ,விழிப்பது, இரை தேடுவது
சண்டை போடுவது, உண்பது, உறவுகொள்வது,
பாசத்தில் மூழ்குவது, உறங்குவது, போன்று விலங்குகள் செய்யும் காரியங்களைத்தான் அனுதினமும் செய்துகொண்டுவருகிறோம்
உடலில் உள்ள இரைப்பையை நிரப்ப
இரை தேடுவதிலேயே ஆயுளில் பெரும்பகுதி
கழிந்துவிடுகிறது
நம் இதயத்தில் இறைவனை நிரப்ப
நாம் முயற்சி செய்வதேயில்லை.
அனைத்தையும் நம்முள் இருக்கும்
இறைவன் செய்துகொண்டிருக்க நாம்தான் அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறோம்.என்ற மமதை வேறு.
அதனால் இறைவனை மறந்து
தன்னையே உயர்வாகக் கருதிக்கொண்டு
மற்றவர்கள் நம்மை மதிக்கவேண்டும் என்று அகந்தைகொண்டு ஹிரன்யகசிபுவைப்போல பிறரை துன்புருத்திக்கொண்டு நாமும்
ம ன நிம்மதியில்லாமல் அலைந்துகொண்டிருக்கிறோம்.
அதனால்தான் ஹரி அகந்தை வடிவான
ஹிரணியனை வதம் செய்தான்.
தன் மீது பக்தி பூண்ட பிரகலாதனை
அழிவிலிருந்து காப்பாற்றி
அழியா ஞானத்தை அளித்தான்.
நமக்கும் இறைவன் நம் உள்ளத்தில் மண்டிக் கிடக்கும்
அகந்தை காட்டை அழிக்கட்டும்.
பக்தி அருளட்டும் அதன் மூலம்
அருள் கிடைக்கட்டும்
ஆனந்தம் ஆனந்தம் ஞானானந்தம் !
ஆனந்தம் ஆனந்தம்
ஞானானந்தம் !
இந்த உலகில் பிறந்த
உயிர்கள் அனைத்தும்
ஆனந்தத்தை நாடுகின்றன.
ஆனால் அவைகள் அந்த ஆனந்தத்தை
அழியும் பொருளில் தேடுவதால் அது
நிலைப்பதில்லை.
அழியும் பொருள் எது அழியாதது எது என்று
பகுத்தறியும் அறிவு உலக மாயையில்
மூழ்கியிருக்கும் நம் போன்றோருக்கு
வாய்ப்பதில்லை .
நம்மை படைத்த
இறைவன் ஒருவனே
அழியாதவன்.
அவனே ஆனந்தமயமாக
இருப்பதால் அவனையே நினைத்து
அவன் திருவடிகளை
வணங்கி அவனை அறிந்துகொண்ட
ஞானிகளைத் தேடி அவர்களுக்கு
தொண்டு செய்து நாம் எந்த சூழ்நிலையிலும்
அழியாத அந்த ஆனந்தத்தை பெற்றுவிட்டால்
நாம் என்று அந்த ஆனந்த நிலையிலேயே இருக்கமுடியும்.
அதனால்தான் பரிமுகனை
ஞானத்தையும் ஆனந்தத்தையும், அதற்கான
அறிவையும் தரும் கடவுளாக
போற்றி வணங்குகிறோம்.
அப்படிப்பட்ட ஞானத்தை அடைந்து
அந்த நிலையிலேயே நின்று
நம்மிடையே வாழ்ந்து இன்று
ஒளி வீசிக்கொண்டிருக்கும்
ஞானானந்தகிரி சுவாமிகளை வணங்கி
ஞானத்தையும் ஆனந்தத்தையும்
ஒருங்கே பெறுவோம்.
ஞானானந்தம் !
இந்த உலகில் பிறந்த
உயிர்கள் அனைத்தும்
ஆனந்தத்தை நாடுகின்றன.
ஆனால் அவைகள் அந்த ஆனந்தத்தை
அழியும் பொருளில் தேடுவதால் அது
நிலைப்பதில்லை.
அழியும் பொருள் எது அழியாதது எது என்று
பகுத்தறியும் அறிவு உலக மாயையில்
மூழ்கியிருக்கும் நம் போன்றோருக்கு
வாய்ப்பதில்லை .
நம்மை படைத்த
இறைவன் ஒருவனே
அழியாதவன்.
அவனே ஆனந்தமயமாக
இருப்பதால் அவனையே நினைத்து
அவன் திருவடிகளை
வணங்கி அவனை அறிந்துகொண்ட
ஞானிகளைத் தேடி அவர்களுக்கு
தொண்டு செய்து நாம் எந்த சூழ்நிலையிலும்
அழியாத அந்த ஆனந்தத்தை பெற்றுவிட்டால்
நாம் என்று அந்த ஆனந்த நிலையிலேயே இருக்கமுடியும்.
அதனால்தான் பரிமுகனை
ஞானத்தையும் ஆனந்தத்தையும், அதற்கான
அறிவையும் தரும் கடவுளாக
போற்றி வணங்குகிறோம்.
அப்படிப்பட்ட ஞானத்தை அடைந்து
அந்த நிலையிலேயே நின்று
நம்மிடையே வாழ்ந்து இன்று
ஒளி வீசிக்கொண்டிருக்கும்
ஞானானந்தகிரி சுவாமிகளை வணங்கி
ஞானத்தையும் ஆனந்தத்தையும்
ஒருங்கே பெறுவோம்.
Sunday, May 11, 2014
அந்த நாளும் வந்திடாதோ?
அந்த நாளும் வந்திடாதோ?
கண்ணா கார்மேக வண்ணா
பிருந்தாவனத்தில்
அவதரித்தகண்ணா
நீ மீண்டும் வந்திடுவாய்
இவ்வுலகில் இன்பம் தழைத்திட
ஓவியம் -தி.ரா.பட்டாபிராமன்
இன்று சாலையில் கார்கள்தான்
பவனி வருகின்றன
நச்சுப்புகையைக் கக்கிகொண்டு
காளிங்கன் போல்
நீ ஓடி விளையாடி மகிழ்ந்த
தூய யமுனை பெருநீர்
இன்றில்லை தூய மனமுடைய
கோபியர்கள் போல்
களங்கமற்ற பக்தி செலுத்தும்
மனிதர்களுமில்லை இப்புவியில்
கோக்களை காக்க வந்தவனே
அன்று ஆனந்தமாய் உன் குழலோசை
கேட்டு தூய யமுனை நீரைப்
பருகி பசும்புல்லை உண்டு களித்த
பசுக்கள் எங்கே?
வீட்டிற்கு ஒரு பசுமாடு உண்டு அக்காலத்தில்
மேய பசும் புல்வெளி உண்டு. குடிக்க
தூய நீருண்டு அந்தோ
இன்றி எதுவும் இல்லை
வீட்டில் பால் கார்டுதான் உண்டு
விலங்குமனம் கொண்ட மனிதர்களின்
வயிற்றுக்குள் போகும் பசுக்களின்
நிலை நீ அறியாயோ? அவைகளின்
துயர் தீர்த்து காக்க வருவாயோ?
ஒருபுறத்தில் கோபாலகிருஷ்ணனாய்
உன்னை வணங்கிக்கொண்டு மறுபுறம்
கோக்களை கொன்றுதின்கின்றார்
உன் பக்தர்கள் என்போர் பலர்.
பேராசை பிடித்த கயவர்களை
அழித்தொழித்தாய் பூமியிலிருந்து அன்று
அந்தோ அவர்கள் இந்த உலகை
துன்ப உலகாக மாற்றிவிட்டனர்
அனைவரும் மனிதர்களின்
மனதில் புகுந்துகொண்டு
கண்ணா கார்மேக வண்ணா
பிருந்தாவனத்தில்
அவதரித்தகண்ணா
நீ மீண்டும் வந்திடுவாய்
இவ்வுலகில் இன்பம் தழைத்திட
ஓவியம் -தி.ரா.பட்டாபிராமன்
இன்று சாலையில் கார்கள்தான்
பவனி வருகின்றன
நச்சுப்புகையைக் கக்கிகொண்டு
காளிங்கன் போல்
நீ ஓடி விளையாடி மகிழ்ந்த
தூய யமுனை பெருநீர்
இன்றில்லை தூய மனமுடைய
கோபியர்கள் போல்
களங்கமற்ற பக்தி செலுத்தும்
மனிதர்களுமில்லை இப்புவியில்
கோக்களை காக்க வந்தவனே
அன்று ஆனந்தமாய் உன் குழலோசை
கேட்டு தூய யமுனை நீரைப்
பருகி பசும்புல்லை உண்டு களித்த
பசுக்கள் எங்கே?
வீட்டிற்கு ஒரு பசுமாடு உண்டு அக்காலத்தில்
மேய பசும் புல்வெளி உண்டு. குடிக்க
தூய நீருண்டு அந்தோ
இன்றி எதுவும் இல்லை
வீட்டில் பால் கார்டுதான் உண்டு
விலங்குமனம் கொண்ட மனிதர்களின்
வயிற்றுக்குள் போகும் பசுக்களின்
நிலை நீ அறியாயோ? அவைகளின்
துயர் தீர்த்து காக்க வருவாயோ?
ஒருபுறத்தில் கோபாலகிருஷ்ணனாய்
உன்னை வணங்கிக்கொண்டு மறுபுறம்
கோக்களை கொன்றுதின்கின்றார்
உன் பக்தர்கள் என்போர் பலர்.
பேராசை பிடித்த கயவர்களை
அழித்தொழித்தாய் பூமியிலிருந்து அன்று
அந்தோ அவர்கள் இந்த உலகை
துன்ப உலகாக மாற்றிவிட்டனர்
அனைவரும் மனிதர்களின்
மனதில் புகுந்துகொண்டு
Friday, May 9, 2014
கடன் சுமை நீங்க வேண்டுமா?
கடன் சுமை நீங்க வேண்டுமா?
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை
நம்பிக்கையோடு துதியுங்கள்
ஓவியம். தி.ரா. பட்டாபிராமன்
கடன் இருந்தால் நீங்கிவிடும்.
கடனில்லாமல் வாழ்க்கை நடத்தலாம்
ஆபத்துகள் விலகும்.
பாப க்ரஹங்களினால்
துன்பம் ஏற்படாது
மனதில் பயம் நீங்கும்.
முடிவில் சத்யம் என்ற
ஞானமும் சித்திக்கும்.
முக்தியும் கிடைக்கும்.
இது சத்தியம்.
மிக எளிமையான ஸ்தோத்ரம்
எத்தனை முறை
வேண்டுமானாலும் சொல்லலாம்.
ருண விமோசன ஸ்தோத்ரம்
தேவதா கார்ய சித்யர்த்தம்
சபாஸ் ஸ்தம்ப சமுத்பவம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
லக்ஷ்ம்யாலிந்கித வாமாங்கம்
பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
ஆந்த்ரமாலாதரம்
சங்க சக்ராப்யுததாரினம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
ஸ்மரணாத் சர்வ பாபக்னம்
கத்ரூஜ விஷ நாசனம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை
நம்பிக்கையோடு துதியுங்கள்
கடன் இருந்தால் நீங்கிவிடும்.
கடனில்லாமல் வாழ்க்கை நடத்தலாம்
ஆபத்துகள் விலகும்.
பாப க்ரஹங்களினால்
துன்பம் ஏற்படாது
மனதில் பயம் நீங்கும்.
முடிவில் சத்யம் என்ற
ஞானமும் சித்திக்கும்.
முக்தியும் கிடைக்கும்.
இது சத்தியம்.
மிக எளிமையான ஸ்தோத்ரம்
எத்தனை முறை
வேண்டுமானாலும் சொல்லலாம்.
ருண விமோசன ஸ்தோத்ரம்
தேவதா கார்ய சித்யர்த்தம்
சபாஸ் ஸ்தம்ப சமுத்பவம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
லக்ஷ்ம்யாலிந்கித வாமாங்கம்
பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
ஆந்த்ரமாலாதரம்
சங்க சக்ராப்யுததாரினம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
ஸ்மரணாத் சர்வ பாபக்னம்
கத்ரூஜ விஷ நாசனம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
சிம்ஹநாதென மஹதா
திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
ப்ரஹ்லாத வரதம்
ஸ்ரீசம் தைத்யேசவர விதாரிணம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
க்ரூர க்ரஹை பீடிதானாம்
பக்தானாம் அபயப்ப்ரதம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
வேத வேதாந்த யக்னேசம்
பிரம்ம ருத்ராதி வந்திதம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
ய இதம் படதே நித்யம்
ருண மோசன சம்ஜிதம்
அன்றிநி ஜாயதே
சத்யோ தனம் சீக்ரமாப்னுயாத்
நமாமி ருண முக்தயே
ப்ரஹ்லாத வரதம்
ஸ்ரீசம் தைத்யேசவர விதாரிணம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
க்ரூர க்ரஹை பீடிதானாம்
பக்தானாம் அபயப்ப்ரதம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
வேத வேதாந்த யக்னேசம்
பிரம்ம ருத்ராதி வந்திதம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
ய இதம் படதே நித்யம்
ருண மோசன சம்ஜிதம்
அன்றிநி ஜாயதே
சத்யோ தனம் சீக்ரமாப்னுயாத்
ஸ்தோத்திரத்தை கேட்க இணைப்பு கீழே.
http://shrinarasimha.com/Slokas/runavimochana.mp3
,
Tuesday, May 6, 2014
அழகிய சிங்கா அருள் தருவாய் !
அழகிய சிங்கா
அருள் தருவாய் !
ஓவியம்- தி.ரா. பட்டாபிராமன்
அழகிய சிங்கனே !
அன்னை இலக்குமியுடன்
அருட்காட்சி தந்து
அயிஸ்வர்யங்களை
அள்ளித் தரும்
லக்ஷ்மி நரசிம்மனே
புன்னகை பூத்த முகத்தவா
புவனத்தைக் காக்கும் சுந்தரா
பாவம் போக்கும் பரந்தாமா
இன்னல் வாராமல் காத்திடுவாய்
இவ்வுலகில் இன்பமாக வாழ
அருள் செய்திடுவாய்
அலைகடல் மேல் துயின்றவா
அடியவரைக் காக்க தூணிலிருந்து
வெளிவந்து அகந்தை என்னும்
அரக்கனை அழித்தவா
ஆபத்திலே அபயக்கரம்
அளித்த அண்ணலே
ஆதி சங்கரர் போற்றித் துதித்த
கராவலம்பனே
பரமேச்வரன் பாடிப் போற்றிய
மந்திர ராஜ பதனே
நீ உறையும் உள்ளத்தில்
களங்கம் உண்டோ?
கவலைகள்தான் தோன்றுமோ?
இறப்பிற்கு இறப்பளித்து
பிறப்பறுக்கும் புண்ணியனே
கடக்க இயலா பவக்கடல்
வற்றிப்போகும்
பற்றுக்கள் அற்றுப்போகும்
உன் பாதார விந்தங்களை
நம்பிக்கையுடன்
சரணடைந்தவர்க்கு
என் மனம் எப்போதும்
உன் திருவடிகளையே
சிந்தனை செய்யட்டும்
என் நாக்கு உன் நாமத்தையே
சொல்லட்டும்
என் உள்ளத்தில் உன் திருவடிவம்
நிலையாய் நிலைத்து நிற்கட்டும்.
அன்புடனே பூசிப்பேன்
உன் திருவடிவத்தை அனுதினமும்
அன்புடனே மலர் சாற்றி வழிபடுவேன்
இவ்வுலகில் உள்ள அனைத்து
உயிர்களின் வாழ்வும் ஆனந்தமாய்
அமைந்து அமைதியாய் வாழ
அருள் தருவாய் !
ஓவியம்- தி.ரா. பட்டாபிராமன்
அழகிய சிங்கனே !
அன்னை இலக்குமியுடன்
அருட்காட்சி தந்து
அயிஸ்வர்யங்களை
அள்ளித் தரும்
லக்ஷ்மி நரசிம்மனே
புன்னகை பூத்த முகத்தவா
புவனத்தைக் காக்கும் சுந்தரா
பாவம் போக்கும் பரந்தாமா
இன்னல் வாராமல் காத்திடுவாய்
இவ்வுலகில் இன்பமாக வாழ
அருள் செய்திடுவாய்
அலைகடல் மேல் துயின்றவா
அடியவரைக் காக்க தூணிலிருந்து
வெளிவந்து அகந்தை என்னும்
அரக்கனை அழித்தவா
ஆபத்திலே அபயக்கரம்
அளித்த அண்ணலே
ஆதி சங்கரர் போற்றித் துதித்த
கராவலம்பனே
பரமேச்வரன் பாடிப் போற்றிய
மந்திர ராஜ பதனே
நீ உறையும் உள்ளத்தில்
களங்கம் உண்டோ?
கவலைகள்தான் தோன்றுமோ?
இறப்பிற்கு இறப்பளித்து
பிறப்பறுக்கும் புண்ணியனே
கடக்க இயலா பவக்கடல்
வற்றிப்போகும்
பற்றுக்கள் அற்றுப்போகும்
உன் பாதார விந்தங்களை
நம்பிக்கையுடன்
சரணடைந்தவர்க்கு
என் மனம் எப்போதும்
உன் திருவடிகளையே
சிந்தனை செய்யட்டும்
என் நாக்கு உன் நாமத்தையே
சொல்லட்டும்
என் உள்ளத்தில் உன் திருவடிவம்
நிலையாய் நிலைத்து நிற்கட்டும்.
அன்புடனே பூசிப்பேன்
உன் திருவடிவத்தை அனுதினமும்
அன்புடனே மலர் சாற்றி வழிபடுவேன்
இவ்வுலகில் உள்ள அனைத்து
உயிர்களின் வாழ்வும் ஆனந்தமாய்
அமைந்து அமைதியாய் வாழ
Monday, May 5, 2014
எல்லாம் பிராணன் உள்ள வரை தான்
எல்லாம் பிராணன்
உள்ள வரை தான்
தெருவிலே ஒரு காய்ந்த சருகு கிடக்கிறது
காற்று வீசுகிறது
அசையாமல் கிடந்த அந்த சருகு
பறந்து போய் ஒரு வீட்டின் மேல் விழுகிறது.
அப்புறம் மழை பெய்கிறது அது நனைந்து
மக்கி அங்கேயே மண்ணாகிப் போகிறது.
மண்ணில் அசையாமல் கிடந்த சிறகு
பறந்ததே அதற்கு உயிருண்டோ?
காற்றுதான் அதை அசைத்தது,பறக்க வைத்தது.
அதுபோல்தான் நாம் தங்கியுள்ள உடலும்.
அந்த சருகைப்போல் ஒரு ஜடம்
நமக்குள் பிராண சக்தி வந்து போய்க்கொண்டிருப்பதால்
இந்த உடல் அங்கும் இங்கும் போய் வந்துகொண்டிருக்கிறது.
உடலில் உள்ள கருவிகளெல்லாம்
இயங்கிகொண்டிருக்கின்றன.
நம்முள்ளிருந்து வெளியே பிராணன்
மீண்டும் உள்ளே வராவிட்டால்.
ஆட்டம் கிளோஸ்
இதை தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
சலனமில்லாமல்
இறைவன் நமக்கு எதற்க்காக
இந்த உடலைக் கொடுத்தான்,
மனத்தைக் கொடுத்தான்,
அறிவைக்கொடுத்தான் என்பதை ஆராயாது
எதை எதையோ ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறோம்.
சிலர் அகழ்வாராய்ச்சி
பண்ணிக்கொண்டிருக்கிரர்கள்.
சிலர் அடுத்தவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்
என்று அல்லும் பகலும் ஆராய்ச்சி
பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மரத்திலிருந்து விழுந்த இலைமீண்டும்
மரத்தில் சென்று ஒட்டிக்கொள்ளமுடியாது.
அதுபோல் இந்த உடலிருந்து வெளியே சென்ற
உயிர் என்னும் பிராணன் மீண்டும்
அந்த உடலில் புகமுடியாது.
எனவேதான் ஞானிகள் விழித்துக்கொள்ளுங்கள்
.மதி மயங்கி இறைவன் கொடுத்த வாய்ப்பை
வீணாக்கி விடாதீர்கள் என்று எச்சரிக்கிறார்கள்.
ஆனால் யாரும் அதை காதில்
போட்டுக்கொள்ளுவதே இல்லை.
கவனியுங்கள். இந்த பிராணன்
எங்கிருந்து வருகிறது எங்கு செல்லுகிறது
அதைக்கண்டுவிட்டால்.மீண்டும் பிறப்பில்லை.
அதனால் விளையும் எண்ணற்ற துன்பங்களும் இல்லை.
உள்ள வரை தான்
தெருவிலே ஒரு காய்ந்த சருகு கிடக்கிறது
காற்று வீசுகிறது
அசையாமல் கிடந்த அந்த சருகு
பறந்து போய் ஒரு வீட்டின் மேல் விழுகிறது.
அப்புறம் மழை பெய்கிறது அது நனைந்து
மக்கி அங்கேயே மண்ணாகிப் போகிறது.
மண்ணில் அசையாமல் கிடந்த சிறகு
பறந்ததே அதற்கு உயிருண்டோ?
காற்றுதான் அதை அசைத்தது,பறக்க வைத்தது.
அதுபோல்தான் நாம் தங்கியுள்ள உடலும்.
அந்த சருகைப்போல் ஒரு ஜடம்
நமக்குள் பிராண சக்தி வந்து போய்க்கொண்டிருப்பதால்
இந்த உடல் அங்கும் இங்கும் போய் வந்துகொண்டிருக்கிறது.
உடலில் உள்ள கருவிகளெல்லாம்
இயங்கிகொண்டிருக்கின்றன.
நம்முள்ளிருந்து வெளியே பிராணன்
மீண்டும் உள்ளே வராவிட்டால்.
ஆட்டம் கிளோஸ்
இதை தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
சலனமில்லாமல்
இறைவன் நமக்கு எதற்க்காக
இந்த உடலைக் கொடுத்தான்,
மனத்தைக் கொடுத்தான்,
அறிவைக்கொடுத்தான் என்பதை ஆராயாது
எதை எதையோ ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறோம்.
சிலர் அகழ்வாராய்ச்சி
பண்ணிக்கொண்டிருக்கிரர்கள்.
சிலர் அடுத்தவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்
என்று அல்லும் பகலும் ஆராய்ச்சி
பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மரத்திலிருந்து விழுந்த இலைமீண்டும்
மரத்தில் சென்று ஒட்டிக்கொள்ளமுடியாது.
அதுபோல் இந்த உடலிருந்து வெளியே சென்ற
உயிர் என்னும் பிராணன் மீண்டும்
அந்த உடலில் புகமுடியாது.
எனவேதான் ஞானிகள் விழித்துக்கொள்ளுங்கள்
.மதி மயங்கி இறைவன் கொடுத்த வாய்ப்பை
வீணாக்கி விடாதீர்கள் என்று எச்சரிக்கிறார்கள்.
ஆனால் யாரும் அதை காதில்
போட்டுக்கொள்ளுவதே இல்லை.
கவனியுங்கள். இந்த பிராணன்
எங்கிருந்து வருகிறது எங்கு செல்லுகிறது
அதைக்கண்டுவிட்டால்.மீண்டும் பிறப்பில்லை.
அதனால் விளையும் எண்ணற்ற துன்பங்களும் இல்லை.
Sunday, May 4, 2014
குருவடி திருவடி
குருவடி திருவடி
குருவடி திருவடி
மலரடி மாணடி
பணிவேன் என்றும்
உன் சேவடி
உண்பதும் உறவு கொள்வதும்
உறங்குவதும் எல்லா உயிர்களுக்கும்
பொதுவான செயல்
இரை தேடுவதும் இரைப்பையை
நிரப்புவதும் அதற்காக போராடுவதும்
விலங்கின் தன்மை
ஏதும் செய்வதறியாது மற்ற உயிர்களை
கொன்று தின்று வயிறு வளர்ப்பது
சில பிராணிகளின் இயல்பு.
ஆனால் மனித பிறவியை அடைந்தும்
விலங்கு போல் வாழ்க்கை நடத்துபவர்களை
என்னவென்று சொல்வது?
மதியை இறைவன் அளித்திருந்தும் அதை
மதி சூடிய மகேசனை நினையாது ,மதியைப் பழிக்கும்
முகவொளி கொண்ட மாயவனை வணங்காது
மாயையில் மூழ்கி மாண்டு போகிறது
மாந்தர் கூட்டம்.
அறியாமையை அகற்றி ஆன்மீக நெறியில்
செலுத்த வந்த குருவின் திருவடிகளைப் பற்றுவோம்
பற்றருப்போம். பிறவிக்கடலை கடப்போம் எளிதாக
குருவடி திருவடி
மலரடி மாணடி
பணிவேன் என்றும்
உன் சேவடி
உண்பதும் உறவு கொள்வதும்
உறங்குவதும் எல்லா உயிர்களுக்கும்
பொதுவான செயல்
இரை தேடுவதும் இரைப்பையை
நிரப்புவதும் அதற்காக போராடுவதும்
விலங்கின் தன்மை
ஏதும் செய்வதறியாது மற்ற உயிர்களை
கொன்று தின்று வயிறு வளர்ப்பது
சில பிராணிகளின் இயல்பு.
ஆனால் மனித பிறவியை அடைந்தும்
விலங்கு போல் வாழ்க்கை நடத்துபவர்களை
என்னவென்று சொல்வது?
மதியை இறைவன் அளித்திருந்தும் அதை
மதி சூடிய மகேசனை நினையாது ,மதியைப் பழிக்கும்
முகவொளி கொண்ட மாயவனை வணங்காது
மாயையில் மூழ்கி மாண்டு போகிறது
மாந்தர் கூட்டம்.
அறியாமையை அகற்றி ஆன்மீக நெறியில்
செலுத்த வந்த குருவின் திருவடிகளைப் பற்றுவோம்
பற்றருப்போம். பிறவிக்கடலை கடப்போம் எளிதாக
வேலை வணங்குவதே என் வேலை
வேலை வணங்குவதே
என் வேலை
ஓவியம் தி. ரா. பட்டாபிராமன்
வாடிய மனதை
வாடா மலராய்
மாற்றிடும் முருகா
வேலை வணங்குவதே
என் வேலை உன் தாளை
வணங்கவே எனக்குத்
தந்தாய் தலையை
உந்தன் வண்ண மிகு மயில்
நஞ்சைக் கக்கும்
நல்லப்பாம்பை வைத்திருக்கும்
தன் காலடியில்
நஞ்சையொத்த எண்ணங்கள்
என் நெஞ்சில் என்றும்
தோன்றா வண்ணம்
என்னை காத்திடுவாய்.
அழகே உருவாய் அமைந்தவா
அடியார் உள்ளத்தை விட்டு
அகலாது அருளும் அரோகரா
என்றும் செப்புவேன் உன்
நாமம் முருகா முருகா என்று.
என் வேலை
ஓவியம் தி. ரா. பட்டாபிராமன்
வாடிய மனதை
வாடா மலராய்
மாற்றிடும் முருகா
வேலை வணங்குவதே
என் வேலை உன் தாளை
வணங்கவே எனக்குத்
தந்தாய் தலையை
உந்தன் வண்ண மிகு மயில்
நஞ்சைக் கக்கும்
நல்லப்பாம்பை வைத்திருக்கும்
தன் காலடியில்
நஞ்சையொத்த எண்ணங்கள்
என் நெஞ்சில் என்றும்
தோன்றா வண்ணம்
என்னை காத்திடுவாய்.
அழகே உருவாய் அமைந்தவா
அடியார் உள்ளத்தை விட்டு
அகலாது அருளும் அரோகரா
என்றும் செப்புவேன் உன்
நாமம் முருகா முருகா என்று.
மறை பொருளாய் இருப்பது பரம்பொருள் (2)
மறை பொருளாய் இருப்பது
பரம்பொருள் (2)
இந்த உடல் அழிவதற்குள்
உரிமையை அடைந்து விடுவோமோ ஐயா...?
திண்டுக்கல் ஜெயபாலன்
ஏன் முடியாது?
அது மிக எளிது
எப்படி?
இப்போது எதை எதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோமோ
அதில் சில மாற்றங்கள் செய்தால் போதும்.
இப்போது தண்ட பேச்சு பேசி
வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.
அதை விடுத்து கையில் தண்டம் ஏந்திய தன்டாயுதபாணியாகிய
முருகனைப் பற்றி பேச வேண்டும், பாடவேண்டும் ,
நினைக்கவேண்டும்.வணங்கவேண்டும் (அல்லது)
அல்லது கோதண்டத்தை கையில் ஏந்தி காட்சி தரும்
கோதண்டராமனை பேச வேண்டும், பாடவேண்டும் , நினைக்கவேண்டும்.
வணங்கவேண்டும் (அல்லது)
மும்மலங்களை அகற்றிய சூலத்தை ஏந்திய சூலபாணியாகிய
சிவபெருமானைத் துதிக்க வேண்டும். (அல்லது)
ஆபத்தில் அபயக்கரம் நீட்டும் அகிலாண்டேஸ்வரியின்
பாதாரவிந்தங்களை பற்றவேண்டும். (அல்லது)
நமக்காக அனைத்தையும் துறந்து எல்லாவற்றையும் தியாகம் செய்த செய்யும்
தண்டத்தை கையில் ஏந்தி பற்றற்று பரோபகாரிகளாக வாழும், வாழ்ந்த ஞானிகளை ,
யோகிகளின் பாதங்களை சரணடையவேண்டும்.
நாம் எப்போதும் புறவுலகில் நமக்கு துன்பம் தரும் எதிரிகளை சமாளிப்பதில்
அக்கறை காட்டுகிறோம்.
அழியும் பொருள்களை நாடி ஓடி தேடி ஆயுளை ஒழிக்கிறோம்.
நமக்குள் இருக்கும் எதிரிகளை நாம் இனம் கண்டு அவைகளை ஒழிக்க
எந்த முயற்சியும் செய்வதில்லை. அவர்களை அழிக்க முடியாது. அவர்களின்
சக்தியை நாம் இறைவனை அடைய பயன்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும்.
அதற்கு ஒரே வழி இறை நாமத்தை சொல்வதுதான்.
எப்படி என்றெல்லாம் கேட்காதீர்கள்
இறை நாமத்தை சொல்லி சொல்லி
முக்தி அடைந்தவர்கள் ஏராளம் நம் நாட்டில்.
சந்தேகத்தை விடுங்கள்.
அவர்கள் சொன்னார்கள்.
செய்து காட்டினார்கள்.
அதைதான் இவனும்
செய்கிறான் சொல்கிறான்.
உலக மோகத்தில் மூழ்கியவர்களின்
காதில் இந்த செய்தி என்றும் போய்ச் சேராது
மனித பிறவியை வீணாக்காதீர்கள்.
இந்த பிறவியில் அதற்கான விதை போட்டால்
அடுத்த பிறவியிலாவது
அது முளைத்து துளிர் விடும்.
பரம்பொருள் (2)
இந்த உடல் அழிவதற்குள்
உரிமையை அடைந்து விடுவோமோ ஐயா...?
திண்டுக்கல் ஜெயபாலன்
ஏன் முடியாது?
அது மிக எளிது
எப்படி?
இப்போது எதை எதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோமோ
அதில் சில மாற்றங்கள் செய்தால் போதும்.
இப்போது தண்ட பேச்சு பேசி
வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.
அதை விடுத்து கையில் தண்டம் ஏந்திய தன்டாயுதபாணியாகிய
முருகனைப் பற்றி பேச வேண்டும், பாடவேண்டும் ,
நினைக்கவேண்டும்.வணங்கவேண்டும் (அல்லது)
அல்லது கோதண்டத்தை கையில் ஏந்தி காட்சி தரும்
கோதண்டராமனை பேச வேண்டும், பாடவேண்டும் , நினைக்கவேண்டும்.
வணங்கவேண்டும் (அல்லது)
மும்மலங்களை அகற்றிய சூலத்தை ஏந்திய சூலபாணியாகிய
சிவபெருமானைத் துதிக்க வேண்டும். (அல்லது)
ஆபத்தில் அபயக்கரம் நீட்டும் அகிலாண்டேஸ்வரியின்
பாதாரவிந்தங்களை பற்றவேண்டும். (அல்லது)
நமக்காக அனைத்தையும் துறந்து எல்லாவற்றையும் தியாகம் செய்த செய்யும்
தண்டத்தை கையில் ஏந்தி பற்றற்று பரோபகாரிகளாக வாழும், வாழ்ந்த ஞானிகளை ,
யோகிகளின் பாதங்களை சரணடையவேண்டும்.
நாம் எப்போதும் புறவுலகில் நமக்கு துன்பம் தரும் எதிரிகளை சமாளிப்பதில்
அக்கறை காட்டுகிறோம்.
அழியும் பொருள்களை நாடி ஓடி தேடி ஆயுளை ஒழிக்கிறோம்.
நமக்குள் இருக்கும் எதிரிகளை நாம் இனம் கண்டு அவைகளை ஒழிக்க
எந்த முயற்சியும் செய்வதில்லை. அவர்களை அழிக்க முடியாது. அவர்களின்
சக்தியை நாம் இறைவனை அடைய பயன்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும்.
அதற்கு ஒரே வழி இறை நாமத்தை சொல்வதுதான்.
எப்படி என்றெல்லாம் கேட்காதீர்கள்
இறை நாமத்தை சொல்லி சொல்லி
முக்தி அடைந்தவர்கள் ஏராளம் நம் நாட்டில்.
சந்தேகத்தை விடுங்கள்.
அவர்கள் சொன்னார்கள்.
செய்து காட்டினார்கள்.
அதைதான் இவனும்
செய்கிறான் சொல்கிறான்.
உலக மோகத்தில் மூழ்கியவர்களின்
காதில் இந்த செய்தி என்றும் போய்ச் சேராது
மனித பிறவியை வீணாக்காதீர்கள்.
இந்த பிறவியில் அதற்கான விதை போட்டால்
அடுத்த பிறவியிலாவது
அது முளைத்து துளிர் விடும்.
Subscribe to:
Posts (Atom)