Sunday, May 11, 2014

அந்த நாளும் வந்திடாதோ?

அந்த நாளும் வந்திடாதோ?

கண்ணா கார்மேக வண்ணா

பிருந்தாவனத்தில்
அவதரித்தகண்ணா
நீ மீண்டும் வந்திடுவாய்
இவ்வுலகில் இன்பம் தழைத்திட



                                                   ஓவியம் -தி.ரா.பட்டாபிராமன் 

இன்று சாலையில் கார்கள்தான்
பவனி வருகின்றன
நச்சுப்புகையைக்  கக்கிகொண்டு
காளிங்கன் போல்

நீ ஓடி விளையாடி மகிழ்ந்த
தூய யமுனை பெருநீர்
இன்றில்லை தூய மனமுடைய
கோபியர்கள் போல்
களங்கமற்ற பக்தி செலுத்தும்
மனிதர்களுமில்லை இப்புவியில்

கோக்களை காக்க வந்தவனே
அன்று ஆனந்தமாய் உன் குழலோசை
கேட்டு தூய யமுனை நீரைப்
பருகி பசும்புல்லை உண்டு களித்த
பசுக்கள் எங்கே?

வீட்டிற்கு ஒரு பசுமாடு உண்டு அக்காலத்தில்
மேய பசும் புல்வெளி  உண்டு. குடிக்க
தூய நீருண்டு அந்தோ
இன்றி எதுவும் இல்லை
வீட்டில் பால் கார்டுதான் உண்டு

விலங்குமனம் கொண்ட  மனிதர்களின்
வயிற்றுக்குள்  போகும் பசுக்களின்
நிலை நீ அறியாயோ? அவைகளின்
துயர் தீர்த்து  காக்க வருவாயோ?

ஒருபுறத்தில் கோபாலகிருஷ்ணனாய்
உன்னை வணங்கிக்கொண்டு மறுபுறம்
கோக்களை கொன்றுதின்கின்றார்
உன் பக்தர்கள்  என்போர் பலர்.

பேராசை பிடித்த கயவர்களை
அழித்தொழித்தாய் பூமியிலிருந்து அன்று

அந்தோ அவர்கள் இந்த உலகை
துன்ப உலகாக மாற்றிவிட்டனர்
அனைவரும் மனிதர்களின்
மனதில் புகுந்துகொண்டு 

3 comments:

  1. அந்த நாளும் வந்திடாதோ.... உண்மைதான்!

    ReplyDelete
  2. வரும் ஐயா... வர வேண்டும்...

    ஓவியம் கண்கொள்ளக்காட்சி..

    ReplyDelete