Sunday, July 20, 2014

ஆடிக்கிருத்திகை

ஆடிக்கிருத்திகை 






குப்பையைக் கிளறிப் புழு ,பூச்சிகளை
பிடித்து தின்னும் சேவலுக்கு தன்னுடைய
கொடியில் இடம் கொடுத்தான் குமரன் 

ஒயிலாய் ஆடும் மயிலை தன்
வாகனமாய் ஆக்கிக்கொண்டான்

விண்ணில் உதித்த  விடிவெள்ளியாம்
தெய்வ யானையையும் . மண்ணில்
தோன்றிய குலக்கொடியாம் குறவள்ளியை
தன்னிடம் சேர்த்துக்கொண்டான் .

சிலையாய் நிற்கின்றான் மலைமேலே
அடியவர்களுக்கு அலையாய் வரும்  துன்பங்களை
அகற்றவே காத்திருக்கின்றான்

அற்ப பொருட்களை அல்லும் பகலும்
நாடி அங்குமிங்கும் ஆடி ஓடும் மனதை
அசையாமல் ஆடல்வல்லானின்
அருங் குமரனின் பாதங்களில் நிறுத்தி
முருக முருகா என்று அவன் நாமம்
சொல்லுவோம்.

முடிவில்லாப் பிறவிகளுக்கு
முற்றுப்புள்ளி வைப்போம்
முழுமையான இன்பத்தை பெறுவோம்.


ஆடிகிருத்திகையாம்  இந்நாளில் மட்டுமல்லாது
எப்போதுமே.


ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம் தனை
சதா ஜபி என் நாவே என்ற பாடலை கேட்டு மகிழ்வும்
இணைப்பு கீழே. 


https://www.youtube.com/watch?v=bp-i4twUXUE&list=RDbp-i4twUXUE

3 comments:

  1. ஆடிக்கிருத்தினை அறிந்தேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. முருகன் படம் தங்கள் கைவண்ணம்தானே
    அருமை

    ReplyDelete
  3. // இந்நாளில் மட்டுமல்லாது எப்போதுமே.... //

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete