Monday, August 25, 2014

தயா ஸ்ரீனிவாசா தயை புரிவாயே

தயா ஸ்ரீனிவாசா தயை புரிவாயே

தயா ஸ்ரீனிவாசா 
தயை புரிவாயே 

தரணியில் எங்கும்
அரக்கர் கூட்டம் தடையின்றி பெருகி
தறிகெட்டு அலைகிறதே (தயா)




                                               ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


சகிப்பு தன்மையின்றி சகட்டுமேனிக்கு
அப்பாவி மக்களுக்கு கடுந்துன்பம்
விளைவிக்கின்றாரே  (தயா)

ஆணவம் மிகக் கொண்டு
எதிர்த்தவரைஎல்லாம்
அழித்து ஒழிக்கின்றாரே (தயா)

அன்பின்றி அவனியில்
அனைவருக்கும் அல்லல் இழைத்து
அமைதியைக் குலைக்கின்றாரே (தயா)

மனித சமூகம் நன்மை பெற்று
நலமாய் வாழ வழி வகுக்கும்
சாத்திர விதிகளை புறக்கணித்து
படுகுழியில் வீழ்கின்றாரே(தயா)

உன்னை அறியும் உண்மையாம்
வழிதனை உதறித் தள்ளிவிட்டு
பொய்ம்மையாம் பாதையில்
சென்று வழி தவறிப் போகின்றாரே(தயா)

உலகைக் காக்கும் உத்தமனாம்
உன் திருவடிகளை மறந்து எத்தர்கள்
பேசும் பேச்சை நம்பி உன்னை ஏசிப் பேசி
ஏமாந்து  போகின்றாரே (தயா)

அவனியில் அனைவரும் அன்பால் இணைந்து
பண்புடன் வாழ்ந்து இன்பமாய் வாழ இறைவா
கருணை செய்திடுவாயே  (தயா)

4 comments:

  1. ஓவியம், பாடல் இரண்டுமே அருமை ஸார்.

    ReplyDelete
  2. தரணியில் எங்கும்
    அரக்கர் கூட்டம் தடையின்றி பெருகி
    தறிகெட்டு அலைகிறதே

    தயாபரன் தயை புரிந்து காக்கட்டும்..!
    தங்கள் கைவண்ணத்தில் அழகு ஓவியம் சிறப்பு சேர்க்கிறது..!

    ReplyDelete