Wednesday, December 24, 2014

ஸ்ரீ ஆண்டாளின் புகழ் பாடிடு மனமே!

 ஸ்ரீ ஆண்டாளின் புகழ் பாடிடு மனமே!

மந்தியை மதியில்
குடி வைத்தால் வாழ்வு சந்தி சிரிக்கும்
என்பதை அறியாயோ மனமே


மாதவம் புரிந்து ஸ்ரீராமனின்
பாதம் பணிந்து  அவன் திருநாமத்தையே
உச்சரித்து  தன் இதயத்தில் நிலை நிறுத்தி
உயர்வடைந்த பக்தனும்
பராக்ரமசாலியுமான  மாருதியை
எப்போதும் சிந்தையில் வை மனமே

பொருளைத் தேடுவதிலேயே
குறியாய் இருந்து பந்தம் என்னும்
எலிப்பொறியில் சிக்கி மாள்வதற்க்கா
மனிதப் பிறவி வேண்டிப் பெற்றாய்
மதிஇழந்து அலையும் மனமே

அருள்தரும் அரங்கனின் திருவடியை
நாடி நன்மைகள் பெறவே நல்லதோர்
வழியை நமக்களித்த   நங்கை நல்லாள்
ஸ்ரீ ஆண்டாளின் புகழை பாடிடு அனுதினமே



ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
பாசுரங்களை பக்தியுடன் அரங்கனின் சன்னதியில்
பாடிடுவாய் அருளும் பொருளும்
ஆனந்த வாழ்வும் கிடைக்கப்  பெற்று
அவனியிலே வாழ்ந்திடுவாய்.


2 comments:

  1. குரங்காய் அலையும் மனத்தை அந்த அரங்கன் அடக்கட்டும். பதிவும் படமும் அருமை.

    ReplyDelete