Wednesday, January 18, 2017

வலியால் துன்புறும் மாந்தர்கள் !

வலியால் துன்புறும் மாந்தர்கள் !

நம் உடலிலோ அல்லது உள்ளத்திலோ
ஏதாவது ஒரு வகையில் வலி தோன்றி
நம்முடைய வலிமையை குறைத்து அல்லது
அடியோடு நம்மை செயலிழக்க வைத்து விடுகிறது.

சில  வலிகள் சாதாரணமாக பொறுத்துக்கொள்ளும்
வகையில் இருக்கும். அப்படியே விட்டுவிட்டு
நம் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டுவிட்டால்
அது தானே மறைந்து விடும்.

சில வலிகள் எதாவது உணவோ அல்லது பானமோ
உட்கொண்டால் சரியாகி விடும்.

சில வலிகள் காற்றோட்டமாக வெளியில் சென்று
உலாவி விட்டு வந்தால் பறந்து போய்  விடும்.

சில வலிகள் மாத்திரைகள், மருந்துகள், போன்றவற்றால்
கட்டுப்படுத்தப்பட்டுவிடும்.

ஒவ்வொருவருக்கும் சில வலிகள் திரும்ப திரும்ப வந்து
தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் .அதற்க்கு ஏற்கெனவே
கையாண்ட வழிமுறைகளை மேற்கொண்டு தற்காலிக
தீர்வை எல்லோரும் அடைவது நடைமுறை .

ஆனால் என் அந்த வலிகள் தனக்கு வருகிறது
என்பதை ஆராய்ந்து பார்ப்பதும் கிடையாது
அப்படி ஆராய்ந்து பார்த்து நிரந்தர தீர்வை
பெற முயற்சிப்பதும் கிடையாது.

அவ்வாறு சேர்த்து வைத்த  வலிகள் முற்றிப் போய்
ஒன்று திரண்டு  ஒருநாள் சுனாமி போல் நம்மை தாக்கி
நிலை குலைய செய்யும்போது நமக்கு பெரும்
பாதிப்பை ஏற்படுத்துகிறது

இந்த பதிவின் நோக்கம் வேறு.

மருந்தில்லாத ஒரு மருத்துவம்
செலவில்லாத மருத்துவம்

பக்க விளைவில்லாத ஆன்மீக மருத்துவம்
ஒன்றை நான் கடைபிடித்து நன்மை அடைந்துள்ளேன்.

அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

உண்மையான ஆர்வம் உள்ளவர்கள்.
பயன்படுத்தி உடனடி நிவாரணம் காணலாம். 

1 comment: