Saturday, August 25, 2018

ஸ்ரீ ராம நாம மகிமை

ஸ்ரீ ராம நாம மகிமை


ஸ்ரீ ராம  நாம மகிமை 


புன்னகை பூக்கும் புவன  சுந்தரா
புவியைக் காக்க வந்த நாராயணா

அகிலம் போற்றும் நாமம் கொண்டவா
அடியவர் துயர் தீர்க்கும் பக்தவத்சலா

அன்பு சிவனும் அம்மைக்கு அருளிய
அருமை மந்திரம் ராம நாம வடிவெடுத்தவா

அன்போடு அழைக்கும் அடியவரை
தேடித்  சென்று அருளிய எளியவா

அல்லும்   பகலும் உந்தன் நாமமே
பவ கடலை கடக்க உதவும் தோணியாகுமே

நாவை தந்தாய் உன் நாமம் சொல்ல
மனதை தந்தாய் உன்  நினைவைக் கொள்ள

கண்களை  அளித்தாய் உன் திருவடிவு
கண்டு ஆனந்தம் கொள்ள

தியாகராஜர் உன் புகழ் பாடி மகிழ்ந்து
பக்தி செய்தார் -பத்ராச்சல ராமதாசரும்
பாமாலை சூட்டி மகிழ்ந்தாரே

சொல்வதற்கும் நினைப்பதற்கும்
எளிய நாமம் ராம நாமம்

எந்நேரமும் சொல்லி வந்தாலே
இவ்வுலக வாழ்வு என்றும்
இன்ப சோலையாகும்  தன்னாலே

ராம பக்தி என்றும் சக்தியும்  தரும்
வாழ்வின் முடிவில் முக்தியும்  தரும்.

ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய  ராம் 
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய  ராம் 

Tuesday, August 21, 2018

இறைவன் இருக்குமிடம் எது?

இறைவன் இருக்குமிடம் எது? 

இறைவன் இருக்குமிடம் எது என்று கேட்டால்
உடனே அனைவரும் கையை காட்டுவது
ஆலயங்களைத்தான்..

ஆலயங்கள் என்பது நம் உடலின்
உள்ளே இதயத்தில் வாசம் செய்யும்
இறைவனை புறத்தே உணர்த்தும்
சின்னம் .அவ்வளவுதான்.

ஆனால் காலப்போக்கில் இந்த
உண்மை மறக்கடிக்கப்பட்டது.

இன்றும் அதே நிலைதான்.

ஆன்மாக்கள் லயமாகும் இடம்தான்
ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.

ஆலயத்தின் உள்ளே நுழையும் முன்பு
நாம் அணிந்துள்ள தோல் செருப்புக்களை
கழட்டி வெளியில் விட்டுவிட்டு
சொல்லுகிறோம்.

எதற்க்காக?

நம்முடைய உயிர் தங்கியுள்ள உடல்
தோலினால் மூடப்பட்டுள்ளது

காலில் அணியும் செருப்பை வெளியே விடுவதைபோல் நாம்
நம்முடைய உடல் அபிமானத்தை விட்டுவிட்டு
ஆலயத்தினுள் நுழையவேண்டும் என்பதையே இந்த செய்கை
உணர்த்துகிறது.

ஆலயத்தில் நுழைந்தவுடன் நாம் ஆண்
பெண் என்ற இன பாகுபாட்டை மறந்து
மனதை சிதறடிக்காமல் இறை சிந்தனை
ஒன்றையே மனதில் கொள்ளவேண்டும்.

உள்ளே சென்றவுடன் உலக விஷயங்களை பற்றி
சிந்திப்பதோ அல்லது பேசுவதோ கூடாது.

அடுத்து பலிபீடம் அருகே சென்றவுடன் நம் மனதில் உள்ள அனைத்து  தீய மற்றும் சுயநல எண்ணங்களை விட்டுவிட்டு.இறைவனை மட்டும் எண்ணியபடி கருவறைக்கு நுழையவேண்டும்.

இறைவனின் வடிவத்தில் மனதை நிலை நிறுத்தி தீபம் காட்டும்போது அந்த தீப  ஒளியில் கவனத்தை  நிலை நிறுத்தி பழகவேண்டும்.

வீடு திரும்பியதும்  சில நிமிடங்கள் அந்த காட்சியை நினைவு படுத்தி பார்க்கவேண்டும்.

இவ்வாறு செய்துவந்தால் நம் மனம் இறை சிந்தனையில் நிலைபெற்று நமக்கு நன்மை பயக்கும்.

இன்று ஆலயவழிபாடு என்பது நம்முடைய கால அட்டவணையில் ஒரு சில நிமிட நேரமே நடக்கும் ஒரு சடங்கு. அதுவும் மன  ஒருமைப்பாடு இல்லாமல் செய்யப்படுவது.

மனம் இறைவனோடு ஒன்றாமல் அவனை எப்படி அடையமுடியும்?

ஆனால் இன்று அங்குதான் எல்லா உலக விவகாரங்களையும்
விலாவாரியாக விவாதித்து தெய்வீக சூழலையே
கெடுத்துக்கொண்டிருக்கிறோம்.

காசில்லாதவன் கடவுளானாலும்  கதவை சாத்தடி  என்ற திரைப்பட பாடல் உண்மையாகிவிட்டது.

இன்று ஆலயங்கள் காசு வசூல் செய்யும் இடமாகவும்  பணம்,பட்டம்,பதவி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனி மரியாதைகள் அளிப்பதும்,
அர்ச்சனைக்கு கட்டணம், அர்ச்சகர் தட்டில் கட்டணம்,உண்டியில் காசு,கட்டளை கட்டணம் ,பிரசாதங்கள்  கட்டணம், ஆன்மீகம் என்ற பெயரில் ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என
ஆலயங்களின் நோக்கமே போய்விட்டது.

அடுத்து விளம்பரங்கள் வேறு. இந்த ஸ்வாமி வர ப்ரஸாதி. இங்குவந்து அந்த மாலை போட்டால், அபிஷேகம், செய்தால் இது கிடைக்கும் அது கிடைக்கும் என்று  அனைவரையும் வேண்டுதல்களை செய்யுமாறு தூண்டப்படுவதும்  சர்வ சாதாரணம்.

இந்த உலகில் அனைவரும் விதியின் கைப்பாவைகள். அதை யாரும் மாற்றமுடியாது.

கடமை தவறியவனுக்கு கடவுள் அருள் என்றும் கிட்டப்போவதில்லை.

அதற்காக நான் கடமையை செய்வேன் கடவுளை வணங்கமாட்டேன் என்பதும் சரியான  வாதம் அல்ல

நம் புலன்களுக்கு கடவுள் புலப்படவில்லை என்பதால் அந்த புலன்களை இயக்கும்  சக்தியான கடவுளை மறுப்பது சரியான வாதம் இல்லை.

அதனிடையே நாம் இறைவனை வணங்கி அவன் அருள் பெறுவதை எந்த சக்தியும் தடை செய்ய போவதில்லை.

நம் உடலாகிய ஆலயத்தில், உள்ளம்  என்னும் கோயிலில் நம் இதயத்தில் இருக்கும் இறைவனை கொண்டு வந்து நிறுத்தி நாம் அவனை உணர்ந்து கொள்ள வழி வகுக்கும் புற  வெளிப்பாடே ஆலய தரிசனங்கள்.

புற  வழிபாட்டின்  இந்த உண்மையை உணர்ந்துகொண்டு  நம் அக வழிபாட்டினையும் செய்தால் நன்மை விளையும்.

ஆலயங்களை  சுத்தமாக வைத்திருப்பதைப்போல நம் உள்ளத்தையும் சினம், பொறாமை,கருமித்தனம், அகந்தை போன்ற தீய குணங்களை அகற்றி
இறைவன் குடிகொள்ளும் இடமாக மாற்றவேண்டும்.

இல்லாவிடில் தெய்வம் அங்கு குடி கொள்ளாது. ஜீவன் சிவனை உணர்ந்துகொள்ள முடியாது.

அவ்வாறு  நாம் நம் உள்ளே இருக்கும் இறைவனை உணர்ந்துகொண்ட பின்புதான் எல்லா உயிரிலும் இருக்கின்ற இறைவனை உணர முடியும், விருப்பு வெறுப்பின்றி அன்பு செலுத்த முடியும்.

கவலைகளிலிருந்து விடுபடமுடியும். பிறவி பிணி தீரும். 

Saturday, August 18, 2018

சிந்திக்க சில செய்திகள்(2)


சிந்திக்க சில செய்திகள்(2)

நெஞ்சில் உரம் இல்லாதவன்
வாள் இல்லாத உறையைப் போன்றவன்

இதயத்தில் அன்பில்லாதவன்
உயிர் இல்லாத மிருக தோலினால்
செய்யப்பட்ட பொம்மை போன்றவன்

எட்டிக்காய்  பழுத்தென்ன பயன் ?
பசியாற உதவுமோ?

தனக்கும் பயன்படாது
பிறருக்கும் உதவாது சேமித்து
வைக்கும் செல்வமும் அதுபோலத்தான்

அனைவரும் பிறர் மீது
எப்போதும் குறை காண்பது
அவரவர்களின் குறைகளை
பிறரிடமிருந்து மறைக்கத்தான்.

இந்த உலகத்தில் உண்மையாய்
வாழ்வதற்கு அதற்குரிய விலையை
கொடுத்துதான் ஆகவேண்டும்

ஆனால் பொய் பேசினால் அதற்கான
விலையோடு ரெட்டிப்பு அபராதத்தையும்
சேர்த்து செலுத்தித்தான் ஆகவேண்டும்

இன்பமும் துன்பமும் ஒவ்வொருவர்
வாழ்விலும் தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்வு..
அது அவரவர் மனதின் நிலையை பொறுத்தது.

ஏன் என்று கேள்வி கேட்பதில்
தவறில்லை?

ஆனால் எதற்கெடுத்தாலும்
ஆராயாமல் கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பது
அறிவீனம்.

படிப்பு மட்டும் ஒருவனுக்கு
உயர்வை தராது.

அதோடு நல்ல பண்புகளும்
ஒன்றிணையவேண்டும்.

உடலில் உயிர் இருக்கும் வரை
உறங்கினால் மீண்டும் விழிக்கலாம்

உடலைவிட்டு உயிர் நீங்கினால்
அதே உடலில் மீண்டும் விழிக்க முடியாது.

அதனால் எதை செய்ய வேண்டுமென்று நினைத்தாலும்
அதை செய்துவிட்டு உறங்க செல்வதுதான் நலம்.

அதனால்தான் நாளை என்று
நல்ல செயல்களை தள்ளிப் போடுவது
நடக்காமல் போகும் வாய்ப்புகள் அதிகம்.

Friday, August 17, 2018

சிந்திக்க சில செய்திகள்..

சிந்திக்க சில செய்திகள்..

ஆசைப்பட ஆசைப்பட ஆய்வரும்
துன்பம் என்கிறார் திருமூலர்.

ஓசையின்றி உயிர் போகும் முன்னே
ஆசைகளை விட்டொழிக்க பழகு.

கோமா நிலைக்கு செல்லும் முன்னரே
ராம நாமத்தை சொல்லி பழகு.

அழகு என்பது வடிவிலோ அல்லது
நிறத்திலோ இல்லை
அது காண்பவன் இதயத்தில் இருக்கிறது

உண்மை பேச மனம் தேவையில்லை
பொய் பேசத்தான் மனம் வேண்டும்.

உண்மை உடனே கொல்லும்
பொய் நாட்பட்ட தீராத நோய்களை
அளித்து வருத்தி  கொல்லும் .

உழைப்பு மட்டும் என்றும் உயர்வு தராது.
எந்த நோக்கத்திற்காக என்பதை பொறுத்துதான்
உயர்வையோ தாழ்வையோ தரும்.

கொடுத்துக்கொண்டே இருப்பவனிடம்
செல்வம் தங்குவதில்லை.

கொடுக்காத கருமியிடம்
செல்வம் தங்கும்

ஆனால் அந்த செல்வத்தை அனுபவிக்க
அவன் தங்குவதில்லை.

ஈரம் உள்ள  மண்ணில்தான்
பசுமையான புற்கள் முளைக்கும்

இதயத்தில் அன்பு  உள்ளவனின்
வாயிலிருந்துதான் அன்பான
சொற்கள் வெளிவரும். 

மண்ணிலிருந்து வந்த நாம் ...

மண்ணிலிருந்து வந்த நாம் ...

மண்ணிலிருந்து வந்த நாம் ...


மண்ணிலிருந்து வந்த நாம்
நம்மை முளைக்க வைத்த
மன்னவனை அறியாது போனால்
மீண்டும் மண்ணுக்குள்தான் போகவேண்டும்.

எம்மதமும் சம்மதம் என்று மேடையிலே
முழங்குவது இவ்வுலக வழக்கு.

ஆனால் பாடையிலே போகும்வரை
தன் மதமே உயர்ந்ததென்று தன்
பாதையில் வருவோரையெல்லாம்
அழித்தொழிப்பதே பலரின் இலக்கு

எத்தனை சாத்திரங்கள் படித்தாலும்
உடல் என்னும் பாத்திரத்தில் உள்ள
குடலை நிரப்ப யாரிடமாவது
பிச்சை எடுத்துதான் ஆகவேண்டும்
அல்லது  பிடுங்கித்தான் தின்ன வேண்டும்.

எல்லாவற்றையும் அவன் இலவசமாக
கொடுக்கையில் இவன் எல்லாம்
அனைத்தையும் தானதாக்கிக் கொள்கிறான்.

எதிர்த்தவரை கொல்கின்றான் .காலன்
அவனை எந்நேரமும் கொல்ல காத்திருக்கின்றான்
என்பதை அறியாமல்.

ஒரு உயிர் மற்றொரு உயிருக்கு
இரையாவது இந்த உலகத்தின் விதி.
சில கண் முன்னே நடக்கும்
பல கண்களுக்கு புலப்படாமல் நடக்கும்

இந்த உண்மையை அறியாது
பிதற்றி திரிபவன் எண்ணையில்லாது
எரிந்து கண நேரமே ஒளி சிந்தி
அழியும் சாம்பலாகும்
விளக்கு திரி   போன்றவன்.

புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு
கோளை விண்ணில் செலுத்த
விண்கலம் தேவை

உலக ஆசைகளிலிருந்து விடுபட்டு
மனம் அமைதி  அடைய
உடல் என்னும் விண்கலம் தேவை.

கோளை  செலுத்திய பின்
விண்கலம் புவி மீது விழுந்துவிடும்.

அது போல் உலக  ஆசைகளிலிருந்து
விடுபட்டபின் இந்த உடலும்
மண்ணில் விழுந்து விடும்

தாவரங்கள் விதைகளை உற்பத்தி செய்யும் வரை
மீண்டும் மீண்டும் முளைக்கத்தான் செய்யும்.

ஆசைகள் இருக்கும் வரை உயிர்கள்
மீண்டும் பிறக்கத்தான் செய்யும்.

இன்ப துன்பங்களை
அனுபவிக்கத்தான் செய்யும்.

அண்டத்தை படைத்த ஈசனும்
பல்லுயிர்களை படைத்து அவைகளின்
இதயத்தில் உறையும்  ஈசனும் ஒன்றே.

அவனை அறிந்த பின்தான்
அனைத்தும் ஒன்றே என்று அறிய இயலும் .

அதை விடுத்து அவன் படைப்புகளை
கூறாய்வு செய்து கொண்டிருந்தால்
கூற்றுவனுக்கு மீண்டும் மீண்டும்
இரையாவதை தவிர்க்க இயலாது.

விண்ணிலே ஒளி வீசும் விண் மீன்களுக்கும்
புவியில் வாசம் செய்யும் பல்லுயிர்க்கும்
ஆன்மா ஒன்றே என்பதை உணராதுபோனால்
உள்ளத்தில் அன்பென்னும் பயிர் விளையாது.

உள்ளத்தில் அன்பிருந்தால்
சொல்லிலும் செயலிலும் இன்பம் பரவும்
விருப்பு வெறுப்பென்னும் அம்புகள்
வெளிப்பட்டால் வேதனைகள்தான் மிஞ்சும்.

Tuesday, August 14, 2018

இசையும் நானும் (321)-(முருகன் பாடல்கள்) பாடல்::ஓராறு முகமும் ஈராறு கரமும்

இசையும் நானும் (321)-(முருகன் பாடல்கள்) பாடல்::ஓராறு முகமும் ஈராறு கரமும்

MOUTHORGAN VEDIO(321) 

 பாடல் வரிகள்-வாலி 
பாடியவர்-- டி .எம் .சவுந்தரராஜன் 



ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும் - ஐயன்

(ஓராறு)

ஆராவமுதென அருள்மழை பெய்யும்
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்

(ஓராறு)

சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த - அந்த

(ஓராறு)

மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த
(ஓராறு)

Image courtesy-google-images 





Wednesday, August 1, 2018

இசையும் நானும் (318)-திரைப்படம்-பாத காணிக்கை -1962 பாடல்::பூஜைக்குவந்த மலரே வா

இசையும் நானும் (318)-திரைப்படம்-பாத காணிக்கை     -1962

பாடல்::பூஜைக்குவந்த மலரே வா 

MOUTHORGAN VEDIO(318)

இசை- எம் .எஸ். விஸ்வநாதன் 

பாடல் வரிகள்-கண்ணதாசன்
பாடியவர்கள்- பி.பி.ஸ்ரீனிவாஸ் -எஸ். ஜானகி. 

56 ஆண்டுகளானாலும் வாடாது

மணம்  வீசும் வாடா மலர் 

பூஜைக்கு வந்த மலரே வா 
பூமிக்கு வந்த நிலவே வா 
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த 
பொன் வண்ணமேனி சிலையே வா 

மலர் கொள்ள வந்த தலைவா வா 
மனம் கொள்ள வந்த இறைவா வா 
கையோடு  கொண்டு தோளோடு சேர்த்து 
கண் மூட வந்த கலையே வா 

கோடைகாலத்தின்நிழலே நிழலே 
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா 
ஆடை கட்டிய ரதமே  ரதமே  
அருகில் அருகில் நான் வரவா 

அருகில் நின்றது உருகி நின்றது 
உறவு தந்தது முதல் இரவு 
இருவர் காணவும் ஒருவர் ஆகவும் 
இரவில் வந்தது பெண்ணிலவு (மலர்)

செக்கச் சிவந்த இதழோ  இதழோ 
பவளம் பவளம் செம்பவளம் 
தேனில் ஊறிய மொழியில் மொழியில் 
மலரும் மலரும் பூ மலரும் 

எண்ணி வந்தது கண்ணில் நின்றது 
என்னை வென்றது உன் முகமே 
இன்ப பூமியில் அன்பு மேடையில் 
என்றும் காதலர் காவியமே(மலர்)(பூஜைக்கு)