Friday, September 7, 2018

அழகும் ஆபாசமும்

அழகும் ஆபாசமும் 

அழகு என்பது
இயற்கையின் அம்சம் .

அதை இறை நம்பிக்கையுள்ளவர்கள்
அம்பிகையின் அம்சம் என்பார்கள்.

அது காணும்
பொருட்களில் இல்லை.

அதிலிருந்து வெளிப்படும் அழகின் ஈர்ப்பு
இறைவனிடமிருந்துதான் வெளிப்படுகிறது
என்பதுதான் உண்மை.

மனம் எப்போதும் அழகையே
விரும்புகிறது .

அதையே எங்கும் காண விரும்புகிறது
ரசிக்க விரும்புகிறது.

அதை நினைத்து மகிழ்ச்சியில் திளைக்க
விரும்புகிறது.

ஒவ்வொருவருடைய மனமும்
அது அந்த அழகினை அளிக்கக்கூடிய
அந்த பரம்பொருளை அறிந்துகொள்ளும்வரை.
அது இறைவன் படைப்பில் உள்ள ஒவ்வொரு
பொருட்களில் உள்ள அழகை மாறி மாறி
ரசித்துக்கொண்டே இருக்கும்.

இயற்கை காட்சிகளில்  அழகு,
புன்னகை புரியும் குழந்தைகள்,ஆண் , பெண்
விலங்குகள் உள்ளிட்ட எண்ணற்ற உயிர்கள்
என அது ஒவ்வொன்றாக தாண்டிப்  போய்க்கொண்டிருக்கும்.

ஒரு அழகான மங்கையை பார்த்து அதில் மனம் லயித்துக்கொண்டிருக்கும்போது அவளை விட வேறு அழகான
மங்கையை  பார்த்தவுடன்  மனம் அவளிடம் சென்றுவிடும்.
எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு.

மனதின் இயல்பு. என்றும் அது ஒரு பொருளில்
நிலைத்து நிற்காது.

ஆனால் அழகை ரசிப்பதற்கும்
அதில் ஆபாசத்தை காண்பதற்கும்
ஒரு வரையறையை இடம், காலம் ,நேரம்  பொறுத்து
நம் சமூகம் வெவ்வேறு  விதமாக
நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது.

அதை சிலர் மீறுவதால் அழகு ஆபாசமாகிறது
அல்லது பாசமாகிறது. அல்லது விரசமாகிறது.

இந்த மெல்லிய வேறுபாட்டை
அனைவரும் புரிந்துகொண்டால் இந்த
உலகம் இன்ப சோலையாக மாறிவிடும்.

இதற்கான மாற்றம் ஒவ்வொருவர்
உள்ளத்திலிருந்துதான்
தோன்றவேண்டும். 

No comments:

Post a Comment