Thursday, September 6, 2012

செல்வத்தின் பயன் ஈதல்


பிச்சை 

பெரும்பாலும் எதற்கும் வழியில்லாமல் தன்னை தாழ்த்திக்கொண்டு ,
கூனி குறுகி ,பிறர் வீட்டின் முன்போ அல்லது ஒரு மனிதன் முன்போ நின்றுகொண்டு பிச்சை போடு தாயே /மகராஜாவே என்று கேட்டு நிற்ப்பது பிச்சை எனப்படுகிறது. ஆனால் வீட்டில் உள்ளவர்கள் பிச்சை போட்டாலும் போடலாம் ,அல்லது மனம் நோகும் வகையில் திட்டி துரத்தலாம் அல்லது நாயை விட்டு விரட்டவும் செய்யாலாம்/அல்லது காவல்காரனை விட்டு அடித்து துரத்தவும் செய்யலாம் 

பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனே தான் வாமன அவதாரம் எடுத்து மகா பலியிடம் மூன்றடி நிலம் கேட்கும்போது தன் சக்தியெல்லாம் மறைத்துக்கொண்டு குறுகிய குள்ள உருவம் எடுத்துக்கொண்டுதான் பிச்சை கேட்க வந்தார்.

அதிகாரமாக பிச்சை எடுப்பவர்களும் உண்டு பிச்சை எடுக்கும் சாக்கில் கொள்ளையடிக்க நோட்டம் விடும் திருடர்களும் சமூக விரோதிகளும் இன்று நாட்டில் பெருகிவிட்டார்கள். .
 
ஒருவன் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளபடுவதர்க்கு முற்பிறவியில் அவன் செய்த பல தீய செயல்களின் விளைவுதான். நாத்திகர்கள் இதை ஒத்துகொள்ளமாட்டர்கள் அவர்கள் சமூகத்தின் மீதும், அரசின் மீதும் குற்றம் சுமத்துவார்கள். தீதும் நன்றும் பிறர் வாரா என்ற பழமொழி தமிழறிந்தவர்களுக்கு தெரியும் .
அதே நேரத்தில் வாழ்க்கையில் ஆராயாமல் பேராசைப்பட்டு அல்லது மூடத்தனமாக ஏமாற்றுக்காரர்களின் பேச்சை நம்பி அனைத்தையும் இழந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுபவர்கள்தான் அதிகம்.

இயற்கை சீற்றங்களினாலும், போர்களினாலும் அனைத்தையும் இழந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுபவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு

உழைத்து பிழைக்க முடியாத அளவிற்கு  அங்க குறைபாடு உள்ளவர்களும், கடுமையான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களும், முதுமையடைந்தவர்களும் உடல் ஊனமுற்றவர்களும் குடும்பத்தால் பல்வேறு சூழ்நிலைகளில் கைவிடப்பட்டவர்களும் பிச்சை எடுத்துதான் தன்னுயிரை காப்பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

இன்று பிச்சை எடுப்பது லாபகரமான தொழிலாக மாறிவிட்டது பிச்சைக்காரகள் கூட்டணி அமைத்துக்கொண்டு ஒவ்வொரு பகுதியையும் பாகம் பிரித்துக்கொண்டு பிச்சை எடுக்கின்றனர். தொழில்முறை பிச்சைகாரர்களை பற்றி திரைப்படங்களின் நகைச்சுவை  காட்சிகளாக எடுக்கப்பட்டு அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டப்படுவிட்டார்கள். 

பல காரணங்களினால் நாளுக்கு நாள் பிச்சைக்காரர்களின் கூட்டம் பெருகி கொண்டே போகிறது. அவர்கள் இல்லாத இடமே இல்லை. எங்கு திரும்பினாலும் யாராவது நம்மை சுற்றிநின்று கொண்டு பிச்சை கேட்டு கொண்டு நிற்பது நம் நாட்டில் அதிகரித்துவிட்டது. 

அரசுகளும் பிச்சைக்காரகள் தங்கும் விடுதிகள் அமைத்தும் அங்கிருக்கும் ஊழல் பெருச்சாளிகளின் மெத்தனத்தால் அவைகள் சரிவர இயங்குவதில்லை.

மேலும் இன்று மக்களிடையே புனித தலங்களில் அன்ன தானம் செய்வது,கோயில்களுக்கு சென்றால் அங்கு உட்கார்ந்திருக்கும் ஏழைகளுக்கு பிச்சை போடுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளமையால். ஏராளமாக பிச்சைக்காரர்கள் அந்த இடங்களில் கூடுகிறார்கள்.
 
இன்று அவர்கள் சமுதாயத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டார்கள். அவர்களை மாற்றுவது, அல்லது அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவது என்பது இயலாத செயல் ஆகிவிட்டது.
 
ஒருவன் உங்களிடம் பிச்சை கேட்கிறான் என்றால் மானம் மரியாதை,கௌரவம் ஆகியவற்றை விட்டுவிட்டுதான் உங்களிடம் பிச்சை கேட்கிறான். உங்களிடம் இருந்தால் உதவுங்கள். இல்லையேல் அவனை கோபிக்காமல் அனுப்பிவிடுங்கள்.என்று சீரடி  சாயிபாபா கூறுகிறார் 
இறைவன் எல்லா உயிரிலும் இருப்பதால் ஒவ்வொருவனும் பிச்சை இடும்போது இறைவன்  அவன் வடிவில் வந்துள்ளதாக கருதி அன்போடு பிசையிடவேண்டும். அவன் நிலைக்கு தன்னை வைக்காமல் மற்றவருக்கு உதவும் நிலையில் தன்னை இறைவன் வைத்துள்ளானே என்று இறைவனை நன்றியுடன் நினைக்க வேண்டும். அப்போதுதான் அகந்தை விலகி பணிவு தோன்றும். பணிவு இருந்தால்தான் ஆன்மீக முன்னேற்றம் சித்திக்கும்
.  
செல்வத்தின் பயன் ஈதல் என்பது தமிழர் பண்பாடு .
போன பிறவியில் செல்வம் இருந்தும் வறியவர்களுக்கு கொடுக்காதவன்தான் அடுத்த பிறவியில் வறுமையின் கொடுமையை அனுபவித்து திருந்தும் பொருட்டு ஏழையாக பிறவி எடுக்கிறான் என்று சாத்திரங்கள் சொல்லுகின்றன

2 comments:

 1. தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்பதை தவறாக புரிந்து கொண்டால் என்ன செய்வது...?

  பிச்சை இடும் போதும் கூட... பல மனிதர்களிடம் சுயநலம் உள்ளது... (நேரிலும் கண்டதுண்டு)

  ReplyDelete
 2. தானமும் தர்மமும் பயனை
  எதிர்பார்த்து செய்யப்படுபவை

  பிச்சை இடுவது பசியால் துன்பப்படும்
  ஒரு உயிருக்கு அன்பின் அடிப்படையில் உதவுவது.

  பிச்சையிடாமல் துரத்துபவர்களை விட
  சுய நலத்துடனாவது பிச்சையிடுபவர்கள் எவ்வளவோ மேல்
  .
  குறையே காணா மனம் வேண்டும்
  இறைவா அதை நீ தர வேண்டும்.என்று
  இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
  உள்ளத்தில் அமைதி என்றும் நிலைத்து நிற்கும்

  ReplyDelete