Friday, November 23, 2012

அகமும் புறமும் ஒருங்கே ஒளிரட்டும் இந்நாளிலிருந்து கார்த்திகை தீபம்


அகமும் புறமும் ஒருங்கே ஒளிரட்டும் இந்நாளிலிருந்து
கார்த்திகை தீபம் 






நாமெல்லாம் 
ஆட்டுவிக்கப்படும் பொருட்களே

நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்
நாம்தாம் எல்லாவற்றையும்
செய்து கொண்டிருக்கிறோம் என்று
உண்மையில் அது இல்லை

நம்மையெல்லாம் ஒரு சக்திதான்
ஆட்டுவித்துகொண்டிருக்கிறது
அது நமக்குள் இருந்துகொண்டு
அதை செய்விக்கின்றது.

மரத்தில் இருக்கும் இலைகள்
காற்றால் அசைவதுபோல
இந்த உடலின் இயக்கம் நமக்குள்
வந்து போய் கொண்டிருக்கும் பிராண சக்தியினால்
இயங்கிகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை

நாம் சுவாசிக்கும் காற்றில் பிராண சக்தியான
ஆக்ஸ்சிஜன்  இல்லையென்றால் நம் உடலில் காற்று
வந்துபோய் கொண்டிருந்தாலும் நாம் இறந்துதான் போவோம்.

அப்படி சுவாசிக்கும் காற்று நச்சு பொருட்கள்
நிறைந்ததாக இருந்தாலும் நம் கதி அதோ கதிதான்

இந்த உலகில் நச்சு பொருட்களும்
நல்ல பொருட்களுடன் சேர்ந்தே
இறைவனால் உண்டாக்கப்பட்டிருக்கின்றன
உதாரணத்திற்காக சொல்லவேண்டுமென்றால்
பிராண வாயுவுடன் நச்சு வாயுவான
கரியமில வாயுவும் சேர்ந்துதான் இருக்கின்றன.

ஆனால் அந்த நச்சு வாயுவை தாவரங்களுக்கு
பிராண வாயுவாக இறைவன் அமைத்திருப்பது
இறைவனின் கருணை.

இதை புலப்படுத்தும் வகையில்தான்
அவன் ஆலகால விஷத்தை உண்டு
உயிர்களையெல்லாம் காப்பாற்றியதாக
புராண கதைகள் சொல்லும்.

இதைப்போல் உயிர்களை காப்பாற்ற இறைவன்
எண்ணற்ற ஏற்பாடுகளை செய்திருக்கிறான்

அப்படிப்பட்ட இறைவனை நினைந்து
உருகி பக்தி செய்து அவனுக்கு
நம் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டவர்கள்.
கடமையை செய் என்பது கண்ணன் கீதை.

இதைப்போலத்தான் நம் ஐம்புலன்களாலும் சக்தியை
இந்த உலகத்திலிருந்து நம்முடைய உடலில் உள்ள கருவிகள் பெற்றுக்கொண்டு நம்மை உயிர் வாழ செய்து கொண்டிருக்கின்றன.

இந்த உலகத்தில் அனைத்து உயிர்களுக்கும்
பொருட்களுக்கும் சக்தியை தருவது சூரிய ஒளியே

அது இல்லையென்றால்
இந்த உலகம் இருண்டு மறைந்துவிடும்

அந்த சூரியனில் ஒளியாய் இருந்து
அதை ஒளிர செய்பவன் இறைவன்.
அந்த ஜோதி வடிவினனாக விளங்கும்
 இறைவனை கார்த்திகை தீப திருநாளில்
 நினைந்து,தீப ஒளியில் கண்டு
வணங்கி மகிழ்ந்து இன்புறுவோம்.

1 comment:

  1. அருமை... விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete