Friday, November 30, 2012

இன்று யோகி ராம்சூரத் குமார் பிறந்த தினம்


இன்று யோகி ராம்சூரத் குமார்
பிறந்த தினம்(1-12-2012)



























கங்கை நதி தீரத்தில் பிறந்து
திருவண்ணாமலையில்
வந்து யோகி ராம்சூரத் குமாராய்
மலர்ந்துமணம் வீசி
மக்களின் தாபத்தை போக்கியவர்

தன்னை ஒரு பிச்சைக்காரன்
என்றே அழைத்துக்கொண்டிருந்தவர்
தன்னை அண்டி வந்தோருக்கெல்லாம்
ஆன்மீக பிச்சை போட்டவர்
அன்பை அள்ளி அள்ளி தந்தவர்.

வழக்கம்போல் ஞானிகளை நம் நாட்டு மக்கள்
என்றும் துவக்கத்தில் அறிந்துகொண்டதில்லை
அவரை துன்புறுத்தி பல கொடுமைகளை அவருக்கு
இழைத்து மகிழ்ச்சி கொண்டனர்.

ஆனால் தான் உடல் அல்ல தான் ஒரு ஆத்மா
என்று உணர்ந்துகொண்ட அந்த ஜீவன்
அதையெல்லாம் சட்டை செய்யாது
தன்னை அண்டி வருவோருக்கெல்லாம்
அன்பையும்,ஆறுதலையும், அருளையும்
வாரி. வாரி வழங்கியது.

மனமெல்லாம் இருளை நிரப்பும்
பொருளை தேடி நம் நாட்டு மக்கள்
மேலை நாடுகளுக்குசாரி சாரியாக
செல்லும் நேரத்தில் மன இருளை போக்கும்
ஞானிகளை தேடி அனைத்தையும் விட்டு விட்டு
ஓடி வருகின்றனர் மேல் நாட்டு மக்கள்.

அவர்களில் ஒருவர்தான் இந்த ஞானியை
பற்றி வெளி உலகத்திற்கு தெரிவித்தவர்.
பிறகுதான் அனைவரும் அவரின்
தெய்வீக தன்மையை உணர தொடங்கினர்.

இன்று அண்ணாமலையில்
அவரின் ஆசிரமம் அவரின்
பெருமைகளை பரப்பிக்கொண்டிருக்கிறது


அவர் ஜபித்த மந்திரம்:

ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்
ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய  ஜெயராம்

அவர் நமக்களித்த மந்திரம்

யோகிராம் சூரத்குமார்
யோகிராம் சூரத்குமார்
யோகிராம் சூரத்குமார்
ஜெயகுருராயா

தான் என்ற அகந்தை  கொண்டவனுக்கும்
மதம் கொண்டவர்களுக்கும் மகான்களின்
மகத்துவம் புரியாது.

அது நம் மனதில் இருக்கும் வரை
இறைவனின் தத்துவம் புரியாது.

எப்படி ஒரு நாயால் ஒரு தேங்காயை
எவ்வளவு முறை உருட்டினாலும்
அதை உடைத்து அதன் உள்ளே
இருக்கும் தேங்காயை தின்ன முடியாதோ.
அதுபோல்தான் நாமே கடவுளை தேடுவதும்
.
இறைவனை அறிந்துகொண்ட
மகான்களின் பாதங்களை பற்றினால்
நம்மைபல பிறவிகளாக பற்றிக்கொண்டு
நம்மை துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும்
அறியாமையிலிருந்து
நம்மை விடுவித்துக்கொள்ளும் வழியை
நமக்கு உபதேசிப்பார்கள்.

அதற்க்கு அவர்களிடம் நம்மை பூரணமாக
அர்ப்பணிக்கவேண்டும்.
பலன் எதிர்பாராமல்அனைத்து உயிர்களுக்கு
தொண்டு, இயன்ற அளவிற்கு
தர்மமும் செய்யவேண்டும்.

அப்போதுதான்அசுத்தஎண்ணங்களால்
நிறைந்துள்ள நம் மனம் சுத்தமாகும்.
சுத்தமான மனதில்தான் இறையுணர்வு உண்டாகும்.

அப்போதுதான் தேவையற்ற விஷ யங்களிருந்து
நம் மனம் விடுபட்டு. உண்மை பொருளைநாடும்

.எத்தனையோ பிறவிகளை கடந்து வந்து விட்டோம்.
 இந்த பிறவியிலாவது. அருணை மகானை
 நினைந்து நம் எண்ணம் ஈடேற பிரார்த்திப்போம்.

ஜெய். குரு மகராஜ் .

2 comments: