Sunday, April 14, 2013

ராமாயணம்-பகுதி-2


ராமாயணம்-பகுதி-2 

ராமன் யார்?

ராமன் பரம்பொருள்
பரமாத்மா

சீதை யார்?

சீதைதான் ஜீவாத்மா

ஜீவாத்மா என்பது இறைவனிடமிருந்து
பிரிந்து வந்த ஒரு ஒளி துகள் .

இறைவனை பிரிந்து வந்தமையால்
 மாயைக்கு ஆட்படுகிறது.

மாயைக்கு ஆட்பட்டவுடன்
ஒரு ஜீவனாகிறது.

அது ஜீவனானாலும் இறைவனின்
 தன்மைகள் அனைத்தும் அதனுடன்
அப்படியே இருக்கும் தன்மைகொண்டது.

அதனால்தான் கீதையில் கண்ணபிரான்
ஆன்மாவை யாரும் ஒன்றும்
செய்யமுடியாது என்கிறார்.

ஆனாலும் அது செயலற்ற
நிலையில்தான் இருக்கும்.
அதன் மீது உள்ள அத்தனை களங்கங்களும்
நீங்கினால்தால் அதன் பிரகாசம்
வெளிப்படும்.

விண்வெளியில்
சுற்றிகொண்டிருக்கும் ஆன்மா
 பிறவிஎடுக்கவேண்டுமேன்றால்
பூமிக்குத்தான் வரவேண்டும்.

 மழைமூலம் பூமிக்கு வந்து ஏதாவது
ஒரு உயிரின் கர்ப்பத்தில் வாசம்செய்து
பிறவிஎடுத்து வினைகள் நீங்கி
தன்னுடைய உண்மை
ஸ்வரூபத்தை அடையவேண்டும்.

அதை குறிக்கும்வண்ணம் தான்
சீதை பூமியிலிருந்து கண்டெடுத்ததாக
இராமாயண கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

எந்த பிறவி எடுத்தாலும் அது தாங்கி உள்ள
உடலின் இயல்புகளைதான்
அந்த ஜீவன் பெற்றிருக்கும்.


ஹனுமான் யார்?

ஹனுமான் உலக பற்றில்
மூழ்கி துன்பத்தில் ஆழ்ந்துவிட்ட ஜீவனை
அதிலிருந்து மீட்க வழி காட்டும் குரு
ஜீவாத்மாவையும் பரமாத்வையும்
ஒன்று சேர்க்கும் குரு.
.
ராவணன் யார்?
ராவணனுக்கு மட்டும் என் பத்து தலை?

ஒரு மனிதனுக்கு
பத்து இந்திரியங்கள் உள்ளன
5 ஞானேந்திரியங்கள் (5software)5 கர்மேந்திரியங்கள்
(5 hardware).
இந்த  10 இந்திரியங்கள்தான்
மனிதர்களை  ஆட்டி  படைக்கின்றன
அதை குறிக்கத்தான் ராவணனுக்கு
10 தலைகள் என உருவகப்படுத்தப்பட்டது.
 10 தலைகளால் ஏற்படும் பற்றுதலை
குறிக்கவும் பத்துதலை என கூறப்பட்டது

இன்னும் வரும் .

2 comments:

  1. ஒவ்வொரு விளக்கமும் புதுமை... அருமை...

    தொடர்கிறேன் ஐயா...

    ReplyDelete