Sunday, April 28, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (28)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (28)

மனதிற்கு உபதேசம் 

திவ்ய நாம சங்கீர்த்தனை 

கீர்த்தனை-ரே மானச -சிந்தைய ஸ்ரீராமம் -ராகம்-தோடி -தாளம்-ரூபகம்)

மனமே இராமனையே 
என்றும் நினைப்பாயாக!























சாகேத நகரத்தின் அதாவது 
அயோத்தியின் அதிபதியும் 
இணையற்ற திருமகள் நாயகனும் 
காமம் முதலிய குணங்களற்ற 
சாதுக்களின் இதயமென்னும் கடலுக்கு 
சந்திரன் போன்றவனும் 
பூமிதேவியின் கணவனும் 
,பக்தர்களின் பாவங்கள் 
என்னும் மேகங்களுக்கு 
காற்றையொத்தவனும்,
மாசற்றவனும் ,
கருடனின் துயராகிய 
இருட்டை அகற்றும் சூரியனும் 
நலம் புரிபவனும் ,
இந்திரனால் ஆராதிக்கப்படுபவனும் ,
திசைகளை ஆடைகளாக உடையவனும் 
சைதன்யமே ஆவரணமாக உடையவனும் 
அடிபணியும் தேவர்களுக்கு வரங்களையும், 
அபயத்தையும்,அளிக்கும் இராகவனும் 
தியாகராஜனால் அர்சிக்கப்பெறும் 
தாமரைப் பாதனும் 
எப்போதும் இதம் தருபவனாகிய 
இராமனை நினைப்பாயாக!  

இந்த கீர்த்தனையில்  பலவிதமான 
பெருமைகளை உடையவனும் நம்பியவர்களை கைவிடாமல் 
ஆதரித்து காப்பவனுமாகிய இராமபிரானின் திருவடிகளை 
பற்றிகொள்வாயாக என்று மனதிற்கு உபதேசம்செய்கிறார் 

3 comments:

  1. மிகவும் அருமை... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. படம் அருமையாக வரையப்பட்டுள்ளது. நல்ல தகவல்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த படம் தியாகராஜச்வாமிகளின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிக்காக வரையப்பட்ட படத்தின் ஒரு பகுதி
      விரைவில் முழு படமும் வெளியாகும்

      Delete