Monday, April 29, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (29)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (29)

மனதிற்கு உபதேசம் 


ஒ மனமே !

இராம நாமத்தை 
சதா பஜனை செய்வாயாக
திருடனை போல்
நீ ஒளிந்து திரிவானேன்?

ஸ்ரீரங்கனின் திருவடிகளை 
அணைத்துக்கொள் 

மானிட ஜன்மம் கிடைத்திருப்பதால் 
சிறிதும் சந்தேகமின்றி வைதேஹி நாயகனை 
"எனக்கு பக்தியை கொடு ,பக்தியை கொடு?
 என்று வேண்டிக்கொள் 







எங்கிருந்தாலும் இருப்பது ஹரி ஒருவநேயன்றி 
துணிந்து அவன் கருணையை 
எண்ணி மெய்ம்மறந்து பஜனை செய்

வேறெங்கும் போகாமல் முழுமதி வதனனை
உன் இதயத்திற்குள் தரிசித்து  பயன் பெறு

சாதுக்களின் உபதேசத்தாலும் 
உன் சாதகத்தாலும்  இவ்வுலகின் 
இடர்களை போக்கிகொள் 

பற்றில்லாத துறவிகளின் 
பேரதிர்ஷ்டமாகிய பகவானைத் 
தவிர வேறு  புகழ் ஏது?

(கீர்த்தனை-ராம நாமம் பஜரே-மானஸ-ராகம்-மத்யமாவதி-தாளம்-ஆதி)

மனம்தான் நம்மை இந்த 
உலக மாயையில் தள்ளி 
நம்மை துன்பத்திர்க்குள்ளாக்கிறது 

ஆனால் அதே மனதை நாம் 
இறைவன்பால் திருப்பிவிட்டால் 
அதுவே நம் விடுதலைக்கு 
வழி வகுக்கிறது. 

மனித ஜன்ம கிடைத்ததே
 நாம் செய்த 
புண்ணியத்தினால்தான். 

அதைகொண்டு விலங்குபோல் 
வாழ்க்கை நடத்துவது அறிவில்லா 
மூடர்கள் செய்யும் காரியம்.

எனவே நாம் இந்த கிடைத்தற்கரிய 
வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு 
ராமபிரானின் திருவடிகளில் 
பக்தி செய்து உய்யவேண்டும் 
என்று மனதிற்கும் 
நமக்கும் மீண்டும் 
தியாகராஜ ஸ்வாமிகள் 
வலியுறுத்துகிறார்.  

4 comments:

  1. நல்ல விளக்கம்... அருமை ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. //எனவே நாம் இந்த கிடைத்தற்கரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு
    ராமபிரானின் திருவடிகளில் பக்தி செய்து உய்யவேண்டும் என்று மனதிற்கும்
    நமக்கும் மீண்டும் தியாகராஜ ஸ்வாமிகள் வலியுறுத்துகிறார். //

    அருமையான விளக்கம். சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் அது மிக கடினம்

      ஏனென்றால் நம் மனம் நம்மை நன்றாக ஏமாற்றிவிடும். நல்ல பிள்ளைபோல் நம்மிடம் நாடகமாடி நாம் அசந்திருக்கும்போது கீழே தள்ளிவிடும்.

      சீதை பெம்மானாகிய ராமபெருமான் அருகில் இருந்தும் அவள் மனம் பொன்மானை தேடி ஓடியது .அதன் துன்பத்தை அனுபவித்தாள் அவள்

      அதைபோல்தான் இறைவன் நம் உள்ளத்திலேயே இருந்தும் அவன் அருமை உணராது நாம் இந்த உலக இன்பங்களை தான் நாடி ஓடுகிறோம்.

      அதற்க்காகாக முயற்சியை கைவிடக்கூடாது.

      எத்தனை முறை கீழே சறுக்கிவிழுந்தாலும் மனம் தளராது தொடர்ந்து ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டே நேரம் காலம் பார்க்காது இருக்கவேண்டும்.

      அனன்ய சிந்த யன்தொமாம் என்ற நிலை வரும்வரை ஜபத்தை விடக்கூடாது. விட்டால் தொலைந்தோம்.
      அடுத்த வண்டி எப்போது வரும் என்று தெரியாது

      Delete