Tuesday, April 30, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (31)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (31)

மனதிற்கு உபதேசம் 


இராமா என்னை காப்பாற்று !
















கல்யாணசுந்தர வடிவனான இராமா!
என்னைக் காத்தருள்.

நான் கற்றவன் அல்லன்
எது நற்புத்தி என்று அறியாதவன்

உன் பஜனையை செய்ய புத்தியில்லாமல்
பிறரை இரந்து இதுவரையில் திரிந்தேன்

தினந்தோறும் வயிற்றுப் பிழைப்பிற்காக
 தனிகர்களை நாடினேன்

மனைவி மக்கள் மீது கொண்ட ஆசையை
உன் திருவடிகளில் செலுத்த முடியாதவனானேன்

இல்வாழ்க்கையின் இன்பமே
நிலையானதென்று எண்ணி
உன் திருநாம சாரத்தை
அறிவதை மறந்தேன்

சிற்றின்பத்தை வெறுக்கமுடியாமல்
கர்வத்தினால் மோசம் போனேன்

எத்தனையோ பிழைகள் புரிந்தும்
மன்னிக்குமாறு உன்னை வேண்டினேன்

சுகர் வணங்கும் என் தந்தையே !
நீயே சரண்! என்று முறையிட்டேன்

தாமரைக் கண்ணனான ரகுவீரா !
உன்னையே நம்பிய என்னை ஏற்றுக்கொள்.

உன்னை நம்பியவரின்
வாய்ப்பே சிறப்புற்றது.

உன் திருவடி சேவை
பத்து லட்சத்திற்கு ஈடாகும்

சாகேத ராம !

என் மீது அன்பு காட்டாமலிருப்பது
நியாயமல்ல

சரண்யனே!
கோசலராம !
தியாகராஜனை காப்பவனே!

(கீர்த்தனை-பாஹி-கல்யானசுந்தரராம மாம்-பாஹி-(491)-ராகம் புன்னாகவராளி -தாளம்-சாபு)

இந்த கீர்த்தனையில் நாம் செய்யும்
அத்தனை அபராதங்களையும்
தான் செய்ததாக ராமபிரானிடம்
முறையிடுகிறார் ஸ்வாமிகள்.

அதை நாம் உணர்ந்து குறைகளை தவிர்த்து
 ராமபிரானிடம் பக்தி செலுத்தவேண்டும்
என்பதே சுவாமிகளின் நோக்கம்.
முயற்சி செய்வோம்.
முயற்சி திருவினையாக்கும்.


4 comments:

  1. கற்றவர்களிடம் எங்கே நற்புத்தி இருக்கிறது...? (இன்றைக்கு)

    விளக்கத்திற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. காசு சம்பாதிப்பதற்காக காசு கொடுத்து கல்வி கற்கிறார்கள்
      அந்த கல்வி அப்படிதான் இருக்கும்
      போதிப்பவர்களும் ஒழுக்கமாக இல்லை
      அதனால் போதிக்கப்படுபவர்களும் ஒழுக்கமாக இல்லை
      அதனால்தான் நாடு நாசமாகி கொண்டு வருகிறது.

      Delete
  2. //இந்த கீர்த்தனையில் நாம் செய்யும்
    அத்தனை அபராதங்களையும்
    தான் செய்ததாக ராமபிரானிடம்
    முறையிடுகிறார் ஸ்வாமிகள்.//

    ஆஹா, மஹான்கள் மஹான்கள் தான். லோகக்ஷேமத்திற்காக எல்லோருக்காகவும் வேண்டிக்கொள்கிறார்கல். ஆச்சர்யம் தான்.

    ReplyDelete
  3. மஹான்கள்
    மஹான்கள் தான்

    ReplyDelete