Friday, April 26, 2013

மகான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் (3)


மகான் ஸ்ரீ  சேஷாத்ரி ஸ்வாமிகள் (3)

















அண்ணாமலையின்
அடிவாரத்தில்
தன் உள்ள குகையில்
உறையும் அருணாசலனை
நாடி தவமிருந்தான்
ரமணபெருமான்

அவர் பெருமை அறியாது
அவரை துன்புறுத்தியது
அறிவில்லா அற்ப கூட்டம்

இவை ஏதும் அறியாது
மோனத்தில்ஆழ்ந்தவனை
ஏது செய்யும் இதுபோன்ற
அடாத செயல்கள்

காமாஷி அன்னையின்
வடிவமாய் அங்கு உலவிய
சேஷாத்ரிஸ்வாமிகள் தன் மகன்
படும் பாட்டை கண்டார்
அவர் துன்பம் நீக்க வழி கண்டார்

அவர் தவம் முடிந்ததும் அவரை
துஷ்டர்களிடமிருந்து காப்பாற்றி
இந்த உலக மக்கள் உய்ய வழி காட்டும்
மகானை நமக்கு தந்த
தயாபரனனன்ரோ ஸ்வாமிகள்

உள்ளத்தில் அப்பழுக்கற்ற ஞானி
ஆனால் அவன் உலகத்தின் கண்களுக்கு
அழுக்கு மூட்டை கோணி

கந்தை துணியோடு அலைந்த அவனை
உள்ளத்தில் அகந்தைகொண்டவர்கள்
அணுக இயலாமல் ஏமாற்றத்துடன்
அலைந்து திரிந்ததுதான் மிச்சம்

உரைக்காமல் உள்ளத்தில்
உள்ளதை தானே அறிவான்
மறைக்க முயன்றால் பட்டென்று
போட்டு உடைப்பான்
பல பேர் முன்னிலையில்

அவன் பாதம் பணிவோம்
அவனருள் பெற்று இன்பமாய் வாழ்வோம்.



4 comments:

  1. அவன் பாதம் பணிவோம்
    அவனருள் பெற்று இன்பமாய் வாழ்வோம்.//

    அருள் கிட்டடும் அனைவருக்கும்

    ReplyDelete
    Replies
    1. அதற்காகத்தான் இந்த பதிவு
      வருகைக்கு நன்றி

      Delete
  2. அவரைப்பற்றிய தகவல்களுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete