Thursday, April 18, 2013

தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள்(15)


தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள்(15)

















ராம பக்தனுக்கு
இருக்கவேண்டிய குணங்கள் 


மனமே சீதாராமனின் 
உண்மையான பக்தனின் 
நடத்தையை கூறுகிறேன் கேள்

ஒரு விஷயத்திலும்
பற்றில்லாமல் ஜீவன் முக்தனாக
விளங்கி ஆனந்தமடைபவன் அவன்

ஹரிபக்தன் தான்
ஜபதபங்கள் செய்வதாக
பெருமை கொள்ளலாகாது

கபடம்நிறைந்த
உள்ளத்துடன் பேசக்கூடாது

தனக்கு  நிகராக ஒருவரும்
இருக்கக்கூடாதென்று ஊரூராக
விளம்பரம் செய்துகொண்டு திரியக்கூடாது

ஆசை நிறைந்த மனத்துடன்
மனைவி மக்கள் மீது
சதா மோகம் கொள்ளலாகாது

இல்லற வாழ்வில்
கிடைக்கும் இன்பங்களே
சதமென்று எண்ணலாகாது.

சிவன் விஷ்ணு என்ற
வித்தியாசம் பாராட்டலாகாது.

உலகில் தான் ஒருவனே
யோக்கியநேன்று எண்ணிப் பொய்கள்
பேசி வயிறு நிரப்பலாகாது.

அனுமனால் தாங்கப்படும்
இராமனின் திருவடிகளை
 என்றும் மறக்கலாகாது.

இராஜச தாமச குணங்கள்
ராம பக்தனுக்கு இருக்கலாகாது.

காரணமின்றி தனக்கு லாபம்
ஒன்றும் கிடைக்கவில்லை
என்று எண்ணலாகாது

ராஜயோக மார்கத்தையும்
பகவானின் சித்தம் தன்னிடம் வர வழி
தேடுவதையும் விடலாகாது

பிறைசூடிய பெருமானின்
தோழனாகிய ஹரியை
ஒரு பொழுதும் மறக்கலாகாது.

(கீர்த்தனை-பக்துநி(368)-ராகம்-பேகட -தாளம்-ஆதி )

இந்த கீர்த்தனையில் ஸ்வாமிகள்
ஒரு ராம பக்தனுக்கு இருக்க வேண்டிய
 குணங்களை பற்றி தெளிவாக விளக்குகிறார்.

இந்த அடிப்படை குணங்கள்
இல்லாதவர்கள் ராம பக்தியில்
எந்தவிதமான முன்னேற்றமும்
அடைய இயலாது.

ராம பக்தியின் இலக்கணம் 
என்னவென்றால் பக்தனுடைய இலக்கு 
ராமன்தானே ஒழிய மற்ற 
எந்த பயனை நாடியும் அல்ல 
என்பதை உணரவேண்டும் 

3 comments:

  1. /// விளம்பரம் செய்துகொண்டு திரியக்கூடாது ///

    இன்று இது தான் மிகவும் முக்கியம்...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  2. பக்தனுடைய இலக்கு
    ராமன்தானே ஒழிய மற்ற
    எந்த பயனை நாடியும் அல்ல
    என்பதை உணரவேண்டும்

    //அருமை! பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete