Friday, November 8, 2013

ஆதி குருவும் ஜகத் குருவும்

ஆதி குருவும் ஜகத் குருவும் 

இந்த உலகத்தின்
ஆதி குரு தட்சிணாமூர்த்தி

அவர் பிரம்ம ஞானத்தை சனகாதி
முனிவர்களுக்கு உபதேசித்தார். மௌனம் மூலம்.
அதனால் அவர் ஆதி  குரு  மௌன குரு.



அது சனகாதி முனிவர்களோடு
நின்று விட்டது.

அடுத்து கண்ண  பரமாத்மா பாரதபோரின் போது
அர்ஜுனனுக்கு உபதேசித்தார்.
இந்த ஜகமெல்லாம் பிரம்ம ஞானம் பரவட்டும் என்று.



அதனால் அவர் ஜகத்  குரு என்றழைக்கப்பட்டார்
அதுவும் இந்த உலகத்தில் பரவவில்லை.



மீண்டும் சிவ  பெருமானே ஆதி சங்கரராக
தோன்றி பிரம்ம ஞானத்தை பரப்பினார்.
அது மெத்த  படித்த பண்டிதர்களுடன் நின்று விட்டது

மீண்டும் ஆதி சேஷன் ராமானுஜராக அவதரித்து
ஞானத்தை எளிமைபடுத்தி தந்தார்.



அதற்கு பிறகு மத்வாசாரியார் தொடங்கி
கணக்கற்ற குரு மகான்கள் ஆத்ம  ஞானத்தை
தொடர்ந்து வாழையடி வாழையாக
உப்தேசித்துக்கொண்டே இருக்கிறார்கள்.


நாட்டம் உள்ளவர்கள் பயன் பெறுகிறார்கள்
தகுதியுடைய குருவை நாடி

குருவே சர்வ லோகம் என்பதை உணர்த்தவே
வினாயகபெருமான் ஆதி  சிவனை வலம் வந்து
 ஞானக்கனியை பெற்றார்.







முருகனோ உலகமே குரு என்பதை உணர்த்தும் வண்ணம்
உலகத்தை வலம்  வந்தார். ஏனெனில் உலகம்தான் அனைவருக்கும் அனைத்துவிதமான அனுபவங்களைத் தந்து ஞானம் பெற உதவுகிறது


இல்லாதவர்கள் வாட்டத்தோடு வாழ்க்கையை
தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் 

6 comments:

  1. _படித்தது::_"மஹாபெரியவா காசியில் முகாமிட்டு இருந்தார் .ஒருநாள்,காசியில் உள்ள பண்டிதர்கள்,
    உள்ளுர் ஆட்கள் பலரோடு உள்ளே நுழைந்தார்கள்."இங்கே யார் ஜெகத்குரு"-என்பவர்?அதட்டலாக கேட்டார்கள்.பெரியவா சிரித்துக் கொண்டே,"அப்படிதான் இவர்கள் என்னை சொல்கிறார்கள்"என தன் முன்னே அமர்ந்து இருந்தவர்களை காட்டினார்..."ஓஹோ..ஜெகத்குரு..உலகத்துக்கே குரு..அப்படியானால் எங்களுக்கும் நீர்தான் குருவா?--உருமினார் ஒருவர்..."ஓ...நீங்கள் அப்படி நினைத்து கொண்டீர்களா?நான் அப்படி நினைக்கவில்லை...எனக்கு ஒன்றும் தெரியாது...இந்த ஜெகத்தையே நான் குருவாக நினைக்கிறேன்...நிறைய விழயங்களை இந்த ஜெகத்தில் இருந்து கற்றுக்கொண்டு இருக்கிறேன்...இந்த ஜென்மா போதாது...எத்தனை ஜென்மா வேண்டுமோ?தெரியாது என்றார்...பிறகென்ன ..வந்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து,"இல்லையில்லை...நீங்கள்தான் ஜெகத்குரு"என நமஸ்கரித்து,பிரசாதம் பெற்று சென்றனர்.
    கந்தஷஷ்டி அன்று, குரு அருளோடு,திருவருளையும் தந்த தங்களுக்கு நமஸ்காரம்...நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பெரியவா ஜாதி ,மதம், இன பேதமின்றி
      அனைவர்க்கும் குருவாக விளங்கி
      ஜகத் குரு என்ற பட்டத்திற்கு ஏற்ப
      அதன் மாண்பை காப்பாற்றி தந்தார்.
      அவருக்கு நிகர் அவரே.
      தெய்வம் மானுஷ ரூபேண
      என்ற வாக்கியத்தின் பொருளுக்கு
      இலக்கணமாக விளங்கியவரும் அவரே. .

      அவரின் சரிதத்தோடு இந்த பதிவை
      இணைத்தது அவர் கருணையே
      நன்றி.

      Delete
  2. நல்ல பல தகவல்கள். ’ஓம் சரவணபவ தாமரைக்கோலம்’ நல்லாயிருக்குது. பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கோலம் இவன் துணைவியின்
      கைவண்ணம்
      பாராட்டிற்கு நன்றி.

      Delete
  3. திருவருளும் குருவருளும் ததும்பும் பகிர்வுகள்... பாராட்டுக்கள்..!

    ReplyDelete