Monday, May 12, 2014

ஆனந்தம் ஆனந்தம் ஞானானந்தம் !

ஆனந்தம்  ஆனந்தம் 
ஞானானந்தம் !






இந்த உலகில் பிறந்த 
உயிர்கள் அனைத்தும் 
ஆனந்தத்தை நாடுகின்றன. 

ஆனால் அவைகள் அந்த ஆனந்தத்தை 
அழியும் பொருளில் தேடுவதால் அது 
நிலைப்பதில்லை. 

அழியும் பொருள் எது அழியாதது எது என்று 
பகுத்தறியும் அறிவு உலக மாயையில் 
மூழ்கியிருக்கும் நம் போன்றோருக்கு 
வாய்ப்பதில்லை . 

நம்மை படைத்த 
இறைவன் ஒருவனே 
அழியாதவன். 

அவனே ஆனந்தமயமாக 
இருப்பதால் அவனையே நினைத்து 
அவன் திருவடிகளை 
வணங்கி  அவனை அறிந்துகொண்ட 
ஞானிகளைத் தேடி அவர்களுக்கு 
தொண்டு செய்து நாம் எந்த சூழ்நிலையிலும் 
அழியாத அந்த ஆனந்தத்தை பெற்றுவிட்டால் 
நாம் என்று அந்த ஆனந்த நிலையிலேயே இருக்கமுடியும். 

அதனால்தான் பரிமுகனை 
ஞானத்தையும் ஆனந்தத்தையும், அதற்கான 
 அறிவையும் தரும் கடவுளாக 
போற்றி வணங்குகிறோம். 

அப்படிப்பட்ட ஞானத்தை அடைந்து 
அந்த நிலையிலேயே நின்று 
நம்மிடையே வாழ்ந்து இன்று 
ஒளி  வீசிக்கொண்டிருக்கும் 
ஞானானந்தகிரி  சுவாமிகளை வணங்கி 
ஞானத்தையும் ஆனந்தத்தையும் 
ஒருங்கே  பெறுவோம். 

10 comments:

  1. உண்மையான ஆனந்தம் தேடுவோம். பேரானந்தம் பெறுவோம்.

    ReplyDelete
  2. நல்லதொரு பதிவு! பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  3. // நாம் என்கிற நிலையில்...// முக்கியம் ஐயா...

    ReplyDelete
  4. ஞானானந்தகிரி சுவாமிகளை வணங்கி
    ஞானத்தையும் ஆனந்தத்தையும்
    ஒருங்கே பெறுவோம்.!..//

    இனிமையான கருத்து.
    பதிவினுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  5. ஞானானந்தகிரி சுவாமிகளை வணங்கி
    ஞானத்தையும் ஆனந்தத்தையும்
    ஒருங்கே பெறுவோம்.

    ReplyDelete