Friday, July 11, 2014

பிறவி எதற்காக?

பிறவி எதற்காக?

இந்த புவியில் பிறவி எடுப்பது எதற்காக ?

மீண்டும் இப்புவியில் பிறக்காமல் இருக்கும்
வழியை தேடுவதற்காக

ஆனால் அந்த புண்ணிய காரியத்தை
நாம் செய்கிறோமோ ?

ஏதோ கோடியில் ஒருவர்தான் அதற்கு
முயற்சிக்கிறார் .அதில் வெற்றி பெறுபவர்கள்
மிகவும் குறைவு.

அப்படி வெற்றி பெற்றவர்களை நாம்மகானாக
கொண்டாடுகிறோம்.

பல பிறவிகளில் நாம் செய்த கர்மங்களின்
விளைவுகளை அனுபவிக்கவே ,அவைகள் தீரும்வரை
தொடர்ந்து பிறந்து இன்ப துன்பங்களை அடைகிறோம்.

கர்மங்களை அனுபவித்துதான் தீரவேண்டும் என்பது விதி.
அதை தள்ளிப்போடுவதோ அதை அனுபவிக்காமல்
ஏமாற்றுவதோ வீண் வேலை.

தான் என்ற அகந்தையினாலும் , சுயநல எண்ணங்களினாலும்
பிறர் பொருட்களை அபகரித்ததினாலும், பிற உயிர்களுக்கு தீங்கு
விளைவித்ததாலும் அந்த உயிர்கள் அடைந்த இன்னல்களை நாம்
அனுபவிக்கிறோம்.

அவ்வாறு அனுபவிக்கும்போது மனம் திருந்தி, மனம் வருந்தி மீண்டும்
நாம் அதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என்று மனதில்
உறுதி கொண்டு அவைகளை தவிர்த்தோமானால் நமக்கு மீண்டும் துன்பங்களும் வராது. பிறவிகளும் வராது.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்?

செய்த தவறுகளையே ஒவ்வொரு பிறவிகளிலும் கூடுதலாக செய்து
பிறவிகளை  கூட்டி கொள்கிறோம்.

ஒரு மரம் போல் தன்னிடம் உள்ள அனைத்தையும் மற்றவர்களுக்கு
கொடுக்கும் தியாக உள்ளம் நமக்கு வரவேண்டும்

யாரையும் பழிக்கவேண்டாம்.
நாமும் பழிக்கு ஆளாகவேண்டாம்

பெரும்பொருட் செலவில்
செய்யப்படும் யாகங்களை விட
அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சிறு சிறு தியாகங்கள் நம்மை இறைவனிடம் எளிதாக கொண்டு சேர்க்கும்.

வில்லிலிருந்து புறப்படும் அம்பு
 உடனே உயிரைக் கொன்றுவிடும்.

நம் வாயிலிருந்து புறப்படும் சொல்லம்போ  மாறாத காயத்தை உள்ளத்தில் ஏற்படுத்தும். அவர் நம்மை  மன்னித்தால்தான் நாம் அதன்  விளைவிலிருந்து விடுபடமுடியும். 

பிறருக்கு விளைவிக்கும் துன்பங்களின் விளைவுகள் .பல பிறவிகள் நம்மை தொடரும். 

6 comments:

  1. நல்ல பகிர்வு. நலமா ஸார்?

    ReplyDelete
    Replies
    1. நலமே நலம் நாடும் நீங்கள் நலமா?

      Delete
  2. // யாரையும் பழிக்கவேண்டாம்... //

    இது ஒன்றே போதாதா...?

    ReplyDelete
  3. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தங்களின் பதிவினைப் பார்க்கிறேன்
    நலம்தானே ஐயா

    ReplyDelete
  4. நலம்தான் நண்பரே .நீங்கள் நலமா ?
    தந்தை மகனுக்கு சரியான நேரத்தில் வழங்கிய சரியான ஆலோசனை குறித்த உங்கள் பதிவை பார்த்தேன் அருமை.

    ReplyDelete