Thursday, June 13, 2013

சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்- குருவே இறைவன்(பகுதி-2)

சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்-
குருவே இறைவன்(பகுதி-2)






ஆத்மீக வழியிலே சாதகனுக்கு தடைகளும் ,
அபாயங்களும்,வலைகளும்,
படுகுழிகளும் வருகின்றன.

அவன் சாதனையிலும் மிகவும் ஜாக்கிரதையாக
 இருக்க வேண்டியிருக்கிறது .

எனவே ஏற்கெனவே அந்த பாதைகளையும்,
உபாதைகளையும் கடந்து இலக்கை
அடைந்துவிட்ட ஒரு குருவினுடைய
உதவி அவனுக்கு வழி காட்டுவதற்கு அவசியம்

தடைகள் என்றால் சாதனையை
தொடங்கும்போது உற்சாகமாக
இருந்த மனம் சிறிது சிறிதாக
உற்சாகத்தை இழக்க தொடங்கும்.
அதற்க்கான காரணங்களை கண்டு
அதை நீக்க வில்லை என்றால்
சாதனையே நின்று போய் விடும்
.
அபாயங்கள் என்றால்
ஏராளமாக உள்ளன .

ஒருவன் ஒரு குருவிடம்
ஹனுமான் மந்திரத்தை உபதேசம் பெற்றான். .

குரு அப்போது அவனுக்கு
தன்னோடு இருக்கும்போது மட்டும்
அதை உபாசிக்குமாறு அறிவுறுத்தினார்.

ஆனால் அவன் அதை காற்றில்
பறக்க விட்டு விட்டான்.

வீட்டில் தனியே மாடியில்
அந்த மந்திரத்தை
ஜபிக்க ஆரம்பித்தான்.

வீட்டில் உள்ளவர்களுக்கு.
 இந்த விஷயம் தெரியாது.

இவன் ஜபம் உருவேற உருவேற
அவனுக்கு ஹனுமனின் சிறிய வடிவம்
காட்சி அளிக்க தொடங்கியது. .

அதனால் அவனுக்கு மிக்க
மகிழ்ச்சி ஏற்பட்டது.
தன்னுடைய முயற்சி பலனளிக்கிறது
என்று தெரிந்ததும் ஜபத்தை
இன்னும் தீவிரப்படுத்தினான்

ஹனுமான்.அவன் எதிரே
 ஓடி விளையாட தொடங்கினார்.
ஹனுமார் சிறிய வடிவில்.

 ஒருநாள் திடீரென்று விஸ்வரூபம் எடுத்தார்.
சற்றும் இதை எதிர்பார்க்காத அவன் பயந்துபோய்
அலறி மயக்கமடைந்துவிட்டான்.
அவனுக்கு சித்த பிரமை ஏற்பட்டுவிட்டது.

பிறகு வீட்டில் உள்ளவர்கள்
அந்த குருவிடம் அவனை அழைத்து
கொண்டு சென்றனர்.
அவர் அதற்க்கான காரணத்தை தெரிந்துகொண்டு
அவனை மீண்டும் சுய நினைவிற்கு கொண்டுவந்தார்.

அதனால்தான் சில மந்திரங்களை
உபாசனை செய்ய குருவின் துணை அவசியம்.

எந்த தேவதைகளும் ஒரு சாதகனை
சோதனை செய்யாமல்
எந்த பலனையும் அளிப்பதில்லை.

எனவே குருவின் வழிகாட்டுதல்
ஒரு சாதகனுக்கு  கண்டிப்பாக அவசியம்.
(இன்னும் வரும்)

4 comments:

  1. //சில மந்திரங்களை உபாசனை செய்ய குருவின் துணை அவசியம்.

    எந்த தேவதைகளும் ஒரு சாதகனை சோதனை செய்யாமல் எந்த பலனையும் அளிப்பதில்லை. எனவே குருவின் வழிகாட்டுதல் ஒரு சாதகனுக்கு கண்டிப்பாக அவசியம்.//

    நல்லது. ஹனுமன் விஸ்வரூப தரிஸனக் கதையையும் அருமையாகச் சொல்லியுள்ளார்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அவசரக் குடுக்கை / அதீத ஆர்வமும் இருக்கக் கூடாது என்பதை அருமையாக சொல்லி விட்டார்கள்...

    நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete