Saturday, June 8, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(60)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(60)



எங்களுக்கென்ன கவலை?







மாகேலரா விசாரமு -கீர்த்தனை(290)-ராகம்-ரவிசந்திரிக 
தாளம்-தேசாதி 

எங்களுக்கென்ன கவலை?
மதனனை பெற்ற ஸ்ரீ ராமச்சந்திர!
அயோத்யா ராஜ்ஜியத்தின்
சக்கரவர்த்தி திருமகனே !
மெய்யடியாரின் மந்தார(கற்பக விருட்சமே )!
திருவளிப்பவனே!

நீ உலக மாந்தரை ஜதை சேர்த்து ,
நாடகத்தின் சூத்திர
கயிற்றைக் கையில் பிடித்து
உலகம் புகழும் வண்ணம்
நடை தவறாமல்
ஆட்டிவைக்கிறாயல்லவா?

ஆகவே எங்களுக்கென்ன  கவலை?

சிவனால் தொழப்படுபவனே!

மிக அருமையான கீர்த்தனை.
இராமபிரானிடம் நம்பிக்கையை 
ஊட்டும் அற்புதமான பாடல். 

உண்மையான இராம  பக்தனுக்கு 
கவலையே கிடையாது .
இந்த உலகத்தை படைத்து 
அதில் மனிதர்களை உலவ விட்டு ,
அவர்களையும் அந்த இராமன்தான் 
ஆட்டி வைக்கின்றான் என்பதை 
நன்றாக உணர்ந்து கொண்டவர்களுக்கு. 
கவலை எப்படி வரும்.?
வராது

அவர்கள் அனைத்தையும் 
அவன் லீலைகளாக கருதி
மகிழ்ச்சியாக இருப்பார்கள் 

4 comments:

  1. கவலையே கிடையாது... உண்மை தான் ஐயா... உங்களைப்போல...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ராம நாமத்தில் பற்று வைத்தால்
      நம்மை அழிக்கும் கவலைகள்
      என்னும் கரையான் புற்றுகள்
      அழிந்து காணாமல் போய்விடும்

      Delete
  2. //மிக அருமையான கீர்த்தனை. இராமபிரானிடம் நம்பிக்கையை ஊட்டும் அற்புதமான பாடல். //

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete