கவலைகளை மாற்றும் மருந்து
இந்த உலகில் கவலை இல்லாதவர்கள்
யாராவது இருக்கிறார்களா?
கேட்டால் இல்லை என்றுதான்
பதில் சொல்ல வேண்டும்.
எதுவும் தனக்கு இல்லையே
என்று கவலைப்படுபவர்கள் ஒரு கூட்டம்
எல்லாம் இருக்கிறது .ஆனால் மனதில்
அமைதி இல்லையே என்று
அங்கலாய்க்கிறது ஒரு கூட்டம்
சிலருக்கு எல்லாம் இருந்தும்
வேறு சிலருக்கு தன்னை விட
எல்லாம் அதிகம் இருக்கிறதே
என்று வெம்பி வெதும்பி மாய்பவர்கள் பலர்.
பலருக்கு எல்லா சுகங்களும் இருந்தும்
அதை அனுபவிக்க இயலாமல்
நோய் நொடிகளும், ,துன்பங்களும்.
துயரங்களும் மாறி மாறி வாட்டும் நிலை.
படிப்பறிவு இல்லாதவன்
பல கோடி ரூபாய்களுக்கு அதிபதியாய்
சகல சௌபாக்கியங்களுடன்
வலம் வருகின்றான்.
மெத்த படித்தவனோ, மாத சம்பளத்திற்கு
அடிமையாக பிறரிடம் வேலைக்கு
அமர்வதிலேயே குறியாக இருக்கிறான்
பேராசைப்பட்டு இருக்கின்ற
சொத்தையெல்லாம் இழந்துவிட்டு
அந்த கவலையிலேயே
வாழ்நாளை கழிப்பவர்கள் பலர்.
பெற்ற குழந்தைகள் மீது
அளவற்ற பாசம் வைத்து
அவர்களுக்காக
தன் வாழ்க்கையை இழந்து
(தியாகம் செய்வதாக நினைப்பு)
முதுமையில் வறுமையிலும்
நோயிலும் வாடுபவர்கள் பலர்.
சிலருக்கு தன் குழந்தைகள்
சரியாக படிக்கவில்லையே
என்று குறை
சிலருக்கு நன்றாக படித்தும்
நல்ல வேலை கிடைக்கவில்லையே என்று குறை
சிலருக்கு தங்கள் குழந்தைகளுக்கு
பருவ வயதை கடந்தும் இன்னும்
திருமணம் ஆகவில்லையே,
சிலருக்கு திருமணமாகியும்
குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையே என்று
சிலருக்கு பிறந்த குழந்தைகள்,
உடற்குறையுடனோ அல்லது
மனகுறையுடனோ இருந்து அதனால்
அடையும்.துன்பங்கள் கோடி கோடி.
மனிதனுக்கு ஏற்படும்
கவலைகளுக்கும்,
துன்பங்களுக்கும்,
துயரங்களுக்கும்
அளவே இல்லை
ஒவ்வொரு மனிததும்
ஒவ்வொருவிதமான
துன்பங்களை அனுபவிக்கிறான்.
சில அவன் பிறக்கும்போதே வருபவை
சில அவனாகவே உண்டாக்கி கொண்டவை
சிலர் பிறரால் வருபவை
சில அவனுக்கு
அப்பாற்பட்டசக்திகளால் வருபவை.
எனவேதான் இந்த வாழ்க்கையை
சம்சார சகரம், பிறவிபெருங்கடல் என்கிறார்கள்
கடுகத்தனை இன்பத்திற்காக
மலையத்தனை துன்பங்களை
அனுபவிக்கவேண்டியுள்ளது.
ஒன்று போனால் மற்றொன்று வருகிறது.
இதற்க்கு முடிவே இல்லை
மனம் இருக்கும் வரை,
இந்த உடல் இருக்கும் வரை
இந்த துன்பங்கள்
இருக்கத்தான் செய்யும்.
அதாவது மனதில் எண்ணங்கள்
இருக்கும்வரை, உடல் மீது பற்று
இருக்கும்வரை.
இதற்கு எல்லையில்லை.
அதற்கு ஒரே வழி இந்த இரண்டு
பற்றுக்களையும் ஒழிக்கவேண்டும்.
எப்படி ஒழிப்பது?
நம்மை படைத்த இறைவனை
சரணடையவேண்டும்.
எப்படி மனம் எண்ணங்களை கொண்டு
நம்மையும் இந்த உடலையும்
ஆட்டி படைக்கிறதோ
அதே மனதை கொண்டுதான்
அதை வெல்லவேண்டும்.
அதற்கு ஒரே வழி இந்த
உலக கடமைகளை
ஆற்றிக்கொண்டே
இராம நாமம் சொல்லிக்கொண்டே
இருப்பதுதான்.
ஏன் எப்படி என்ற
சந்தேகம் வேண்டாம்
சொல்லி பாருங்கள்.
அதன் உண்மை
அனுபவத்தில் விளங்கும்.
இது சத்தியம்.
Pic.courtesy-google images.
/// கடுகத்தனை இன்பத்திற்காக மலையத்தனை துன்பங்களை அனுபவிக்கவேண்டியுள்ளது...///
ReplyDeleteஇதுவும் உண்மை வரிகள் தான்...
/// அதே மனதை கொண்டுதான் அதை வெல்லவேண்டும்... இராம நாமம் சொல்லிக்கொண்டே
இருப்பதுதான்... ///
மருந்தையும் சொல்லி விட்டீர்கள்...
நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...
நன்றி DD
Delete//கடுகத்தனை இன்பத்திற்காக மலையத்தனை துன்பங்களை அனுபவிக்கவேண்டியுள்ளது. ஒன்று போனால் மற்றொன்று வருகிறது. இதற்கு முடிவே இல்லை
ReplyDeleteமனம் இருக்கும் வரை, இந்த உடல் இருக்கும் வரை, இந்த துன்பங்கள் இருக்கத்தான் செய்யும்.
அதே மனதை கொண்டுதான் அதை வெல்லவேண்டும்.
அதற்கு ஒரே வழி இந்த உலக கடமைகளை ஆற்றிக்கொண்டே இராம நாமம் சொல்லிக்கொண்டே இருப்பதுதான்.//
அருமையான விஷயங்களை அழகாகப் புட்டுப்புட்டு வைத்து, அதற்கு எளிமையான தீர்வும் அளித்துள்ளது, மனதுக்கு ஆறுதலாக உள்ளது.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்..
புட்டு புட்டு என்றீர்கள்
Deleteஉங்களுக்கு சுவையான
புட்டு நினைவு வந்திருக்கவேண்டும்.
ஆனால் அது தற்போது
நினைவுக்கு வரவில்லை.
அதைபோல்தான்
ராம நாமத்தை சொல்லிக்கொண்டே
இருந்தால்போதும்
எல்லாம் மறந்துபோகும்
துன்பமெல்லாம் பறந்து போகும்.