Monday, June 10, 2013

தியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(64)

தியாக ராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(64)






ரகு குல தோன்றலே!
உன் திருவடி தாமரைகளை  
நான் என்றும் விடேன்.

கீர்த்தனை(385)-ரகுநாயக நீ பாதயுக 
ராகம்-ஹம்சத்வனி(மேள-29)
தாளம்-தேசாதி 


ரகுகுல தோன்றலே!
உன் திருவடி தாமரைகளை
நான் என்றும் விடேன்

கனத்த என் பாவங்களையகற்றி  என்னை
ஆதரிக்க நீயே புகல் அல்லவா!

சம்சாரமென்னும் இக்கடலைத்
தாண்ட முடியாமல்
நான் பெருந்துயரடைந்து
உன்னை நாடி வந்தடைந்தேன்

சீதா நாயகனே!
தஞ்சமடைந்தவரைக் காப்பவனே !
ஆனந்தம் தருபவனே!

எந்த சூழ்நிலையிலும் ஒரு இராம பக்தன் 
இராமபிரானின் திருவடி தாமரைகளை விடக்கூடாது.
என்பதை வலியுறுத்துகிறார் ஸ்வாமிகள் 
இந்த  கீர்த்தனையில். 

2 comments:

  1. //எந்த சூழ்நிலையிலும் ஒரு இராம பக்தன்
    இராமபிரானின் திருவடி தாமரைகளை விடக்கூடாது.//

    அருமை. அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. அருமையான விளக்கம் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete