Sunday, June 23, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(92)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(92)








திரிபுரசுந்தரியன்னையே !
உனது  திவ்விய வடிவைக் காண எனக்கு 
வாய்ப்பு கிடைத்ததம்மா !

கீர்த்தனை(481)-சுந்தரி நீ திவ்விய ரூபமு நு ..
ராகம் -கல்யாணி தாளம்-ஆதி 

ஸ்வாமிகள் திருவொற்றியூரில்  
உறையும் திரிபுரசுந்தரி அன்னை மீது 
இயற்றிய அருமையான கீர்த்தனை

திரிபுரசுந்தரியன்னையே !
உனது  திவ்விய வடிவைக் காண
எனக்கு வாய்ப்பு கிடைத்ததம்மா !
மென்னடையாளே !
இது உன் அருட்பார்வையின் பலனோ?

அல்லது நான் முன் செய்த பூஜையின் பயனோ?

இப்புவியில் சிறப்புற்ற ஆதிபுரமென்னும்
திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கும்
 உன் திருவழகைக் கேள்வியுற்று பிரம்மன்
முதலிய தேவர்கள் ஒன்றுகூடி வெள்ளிக்கிழமையன்று
உன் தரிசனம் கிடைக்குமாவென்று ஏங்கி மனக்கரைந்து
வானுலகில் பதறும்பொழுது எளியவர் துயர் தீர்ப்பவளாகிய
உன் வடிவைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது

இக்கலியுகத்தில் எளியோரைக் காப்பவள் நீயே
என்று சபை கூடுமிடங்களெல்லாம் புகழ்வேன்.

இனிய குணங்கள் நிரம்பிய கருணைக் கடலே!
உனக்கு நிகர் யார் உளர்?

களைத்து வந்திருக்கும் என் மனம் நிம்மதிடையுமாவென்று
 நான் இருக்கையில் கலகலவென்று தேவ ஸ்திரீகள்
வரிசையாக வந்து உன்னை வணங்கும் இனிய
வெள்ளிக்கிழமை  சேவை எனக்கு கிடைத்தது

என்னைப் பெற்ற தாயே
என் ஜன்மமே இன்றுதான்
பயனுடையதாக  ஆயிற்று
இன்று பரம  ஏழைக்குச் செல்வம் கிடைத்தது போலவும்
,என் கண்கள் பேறு பெற்றதுபோலவும் உன் தரிசனம் கிடைத்தது

தாமரைக் கண்ணியே!
நன்மை புரிபவளே!
மன்மதனைப் பெற்ற திருமாலின் சோதரி!
தியாகராஜனின் (சிவனின்)மனதை வசீகரித்தவளே!
கௌரி !

அன்னையின் தரிசம் பெற்ற மகிழ்ச்சியை 
எப்படி இந்த கீர்த்தனையில் ஸ்வாமிகள் 
வெளிப்படுத்தியிருக்கிறார் 
என்பது கவனிக்கத்தக்கது 


4 comments:

  1. வர்ணனையுடன் விளக்கம் சூப்பர்...!

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. //திரிபுரசுந்தரியன்னையே !
    உனது திவ்விய வடிவைக் காண
    எனக்கு வாய்ப்பு கிடைத்ததம்மா !//

    அருமையான வரிகள் ! ;)))))

    நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete