Saturday, June 15, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(79)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(79)

இராமா !
என் மனம் உன் திருவடிகளை 
என்றும் விடாது 






கீர்த்தனை(347)-விட ஜாலதுரா நா மனசு -
ராகம்-ஜனரஞ்சனி-தாளம்-ஆதி

துராசைகளில் சிக்கிக்கொண்டு
நான் உடல் இளைத்தாலும்
என் மனம் உன் திருவடிகளை
என்றும் விடாது

என்னுடல் எப்பணியில்
ஈடுபட்டாலும்
புலன்கள் காணக்கூடாத
காட்சிகளைக் கண்டாலும்
அனைத்தும் நீயென்று உகப்படையும்
தியாகராஜனால் வணங்கப்பெறும் தெய்வமே!

மிக அருமையான 
பொருள் பொதிந்த கீர்த்தனை. 

மந்திரங்களை ஜபிக்க
ஏராளமான கட்டுப்பாடுகள்
சாத்திரத்தில் விதிக்கப்பட்டுள்ளன.

 நம்மால் சாத்திரங்கள் படி
எதையும் செய்யமுடியாது என்று
விட்டுவிட்டோமானால் எதுவுமே
செய்ய முடியாமல் போய்விடும்.

வெறும் சாத்திரங்களையே
 நாம் பார்த்துக்கொண்டிருந்தால்
அகந்தைதான் வளரும்
பக்தி போய்விடும்.

விதிகளையே ஆயுள் முழுவதும்
 நாம் நோக்கிகொண்டிருந்தால்
நம் விதி முடிந்து போய் விடும்.

அழுக்காகும் தண்ணீரை
கொண்டுதான் அழுக்கையும்
போக்கிக்கொள்ளுகிறோம்

நம் மனம் புலன்கள் மூலம்
அழுக்காகிகொண்டே இருக்கிறது.

அவ்வப்போது அழுக்கை சுத்தம்
செய்யாவிடில் .அதில் அழுக்காறு
ஓட ஆரம்பித்துவிடும்.

அதில் இன்னும் கசடுகளும்
சேர்ந்து கொள்ளும்.

இருந்தாலும் ஒரு வெள்ளம் வந்தால்
அனைத்தும் அடித்துக்கொண்டு போய் விடும்.

அதுபோல் எந்த வேலை செய்தாலும் 
பிராணன் இயங்கி கொண்டிருப்பதைப்போல 
இடைவிடாது இராம  நாமத்தை 
சொல்லி கொண்டிருந்தோமானால்
இறைவனின் அருள் வெள்ளம் பாயும்போது 
அனைத்து உள்ளக் கசடுகளும் 
அடித்துக்கொண்டு போய் 
நம்மை தூய்மையாக்கி விடும் 
என்பது உண்மை. 

pic-courtesy-google images. 

4 comments:

  1. ஆஹா, இன்றைக்கே மேலும் சில சிந்தனைத்துளிகளா? :)))))))

    இதோ படிச்சுட்டு வரேன் .........>>>>>

    ReplyDelete
    Replies
    1. தம்பி உடையான் படைக்கு
      அஞ்சான் என்பது பழமொழி.

      இந்த அண்ணன் எழுதுவதை
      பார்க்க,படிக்க கருத்துக்களை சொல்ல
      vgk இருக்கும்போது எனக்கென்ன கவலை?
      அசராமல் மூச்சு உள்ளவரை
      எழுதி தள்ளி கொண்டே இருப்பேன்.

      Delete
  2. ////அழுக்காகும் தண்ணீரை கொண்டுதான் அழுக்கையும்
    போக்கிக்கொள்ளுகிறோம் நம் மனம் புலன்கள் மூலம்
    அழுக்காகிகொண்டே இருக்கிறது.

    அவ்வப்போது அழுக்கை சுத்தம் செய்யாவிடில் .அதில் அழுக்காறு ஓட ஆரம்பித்துவிடும்.

    அதில் இன்னும் கசடுகளும் சேர்ந்து கொள்ளும்.//

    சூப்பரான உ தா ’ர ண ம் ’

    >>>>>

    ReplyDelete
  3. //அதுபோல் எந்த வேலை செய்தாலும் பிராணன் இயங்கி கொண்டிருப்பதைப்போல இடைவிடாது இராம நாமத்தை சொல்லி கொண்டிருந்தோமானால் இறைவனின் அருள் வெள்ளம் பாயும்போது அனைத்து உள்ளக் கசடுகளும்
    அடித்துக்கொண்டு போய் நம்மை தூய்மையாக்கி விடும்
    என்பது உண்மை. //

    அழகோ அழகு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete