சிந்தனைகள் (89)
இராமா
உன்னைப் போல்
நாட்டை ஆண்டவர்கள் உண்டா?
கீர்த்தனை(198)-காருபாரு சேயுவாரு...
ராகம்-முகாரி-தாளம்-ஆதி
ஊர் மக்களும் ,தேச ஜனங்களும், மகரிஷிகளும்
பரமானந்தமடைந்து சர்வ மங்களமும் பெற்று
வாழுமாறு சாகேதநகரத்தை (அயோத்யா புரியை)
உன்னைப் போல் அரசு புரிபவர்கள் உளரா?
மாதம் மும்மாரி பொழிய ,பிரஜைகள் சகல
வித்தைகளையும் கற்று ,நீண்ட ஆயுளைப்
பெற்று,கோபம் ,கர்வம், முதலியன
அற்றவர்களாக வாழவில்லையா?
தியாகராஜன் தொழும் இராம !
ஆஹா படிக்கவே
எவ்வளவு இன்பமாக இருக்கிறது.
இராமபிரான் தர்மத்தின் வடிவம்.
தர்மம் ஆட்சி செய்தமையால்
மாட்சிமை பெற்று விளங்கியது நாடு.
அரசன் எவ்வழியோ குடி மக்களும்
அவ்வழி என்பார்கள்.
அதனால் மக்களும்
நல்லவர்களாக திகழ்ந்தார்கள்
இயற்கையோடு இயைந்த வாழ்வு
அனைவருக்கும்
இன்பம் தந்தது.
ஆனால் இன்று ஆள்பவர்கள்
எல்லாம் ஒழுக்கம் தவறியவர்கள்
,மக்களை சுரண்டி
கொழுப்பதில் வல்லவர்கள்.
மக்களை பிச்சைக்காரர்களாகவே
இருக்க வைத்து அவர்கள் மட்டும்
வாழ வழி தேடும் புண்ணிய புருஷர்கள்.
வருமானத்திற்க்காக
குடிமக்களை குடிகாரர்களாக்கி
தாங்கள் மட்டும் சொகுசு கார்களில்
வலம் வரும் மக்கள் விரோத
போக்கு கொண்ட ஆளும் வர்க்கம்.
சுயனலத்திர்க்காக
இயற்கை வளங்களை அழிப்பவர்கள்.
அதனால்தான் ஆண்டுதோறும்
ஒன்று மழை அபரிமிதமாக பெய்து
அனைத்தையும் அழிக்கிறது.
அல்லது காய்ந்து கெடுக்கிறது.
நாம் என்ன செய்ய முடியும்?
நம் மனதிர்க்குள்ளாவது
அந்த இராம பிரானின் ஆட்சியை
அமைக்க முயற்சி செய்வோம்.
அதற்கு அவன் திவ்ய நாமத்தை
விடாது சொல்லுவோம்.
செய்யக்கூடிய முயற்சி... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDelete//இராமபிரான் தர்மத்தின் வடிவம்.தர்மம் ஆட்சி செய்தமையால் மாட்சிமை பெற்று விளங்கியது நாடு. அரசன் எவ்வழியோ குடி மக்களும் அவ்வழி என்பார்கள். அதனால் மக்களும் நல்லவர்களாக திகழ்ந்தார்கள்//
ReplyDeleteஇராமராஜ்யக்காட்சிகள் அருமை. பாராட்டுக்கள்.
”அந்த நாளும் வந்திடாதோ!” http://gopu1949.blogspot.in/2011/04/blog-post.html
சென்றதிநீ மீளாது.........மகா கவி பாரதி
Delete