Saturday, June 15, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(81)

தியாகராஜ
சுவாமிகளின் சிந்தனைகள்(81)

ஸ்ரீ ரகுவர!
உனது பாதங்களை நினைப்பதே 
என் வாழ்வாகும்

கீர்த்தனை(354)-ஸ்ரீ ரகுவர கருணாகர
நீ பத சிந்தநமே ஜீவனமு -ராகம்-தேவ காந்தாரி-தாளம் ஆதி

ஸ்ரீ ரகுவர!
கருணாகர!

உனது பாதங்களை நினைப்பதே
என் வாழ்வாகும்

யானையைக் காத்தவனே!
பக்த ஜனங்களின்
பாவங்களை அகற்றுபவனே!

மென்மை பொருந்திய
பேச்சையுடையவனே!

குணவானே!
மன்மதர்களுள் மன்மதனென்று
புகழ் படைத்தவனே!

என் வேண்டுகோளைக் கேள்!

லக்ஷ்மிபதியே
என்னை மறவாதே.

பேரழகனே!
என் நாவில் உனது திருநாமம்
என்றென்றும் விளங்குமாறு அருள்புரி.

அவரவர்களின் நல்வினைக்கு
தகுந்தவாறு சுகங்களை
அளிக்க மாட்டாயா?

அரக்கரென்னும்  மேகத்தை
சிதறவடிக்கும் பெருங்காற்றே!

மன்மதனுக்கும்
நான்முகனுக்கும் தந்தையே!

குபேரன்வணங்கும்
பதவிணையுடையவனே!

சூரிய சந்திரரை
கண்களாக உடையவனே!
தேவேந்திரனைப் பாலித்தவனே!
அரசரால் தொழப்படுபவனே!

தியாகராஜனின் பிரபுவே!

இராகவா!
என்னை காத்தருள்.

அருமையான கீர்த்தனை .

ஸ்வாமிகள் ஸ்ரீ ராமனை
வர்ணிக்கும் அழகை ரசித்து மகிழவேண்டும்.

எல்லோரும் ஸ்ரீஹரி
ஒரு யானை முதலையிடம் அகப்பட்டு
உயிருக்கு போராடி முடிவில் ஆதிமூலமே
என்றழைத்தவுடன் வந்து காப்பாற்றிய
கதையை பல யுகங்களாக கூறி வருகிறார்கள்.

இந்த அண்ட சராசரங்களையும் உயிர்களையும் 
தன் சங்கல்பத்தினாலேயே படைத்து, 
காத்து முடிவில் தனக்குள் லயமாக்கிகொள்ளும் 
சக்தி படைத்த ஸ்ரீஹரி  இருக்கின்ற 
இடத்திலேயிருந்து யானையை காக்க 
சக்தியிருந்தும் ஏன் அவ்வாறு 
செய்யவில்லை.சிலர் என்று நினைக்கலாம்.

எல்லா உயிரிலும் அவன் ஆன்மாவாக 
உறைந்திருந்தாலும் ஆத்மா ஞானம் 
அடையாத ஜீவன்கள் அவன் வைகுண்டத்தில்
உறைவதாகதான் எண்ணுகிறது. 





தன்னுள் இறைவன் உறைகின்றான் 
என்ற உண்மையை அறியாத ஜீவன் 
அவன் எங்கோ இருப்பதாக எண்ணி 
அந்த நிலையில் 
ஆசாபாசங்கள் என்னும் 
முதலைகள் நிறைந்த  பிறவிக்கடலில் 
சிக்கி கொண்ட யானை என்னும் ஜீவன் 
அதிலிருந்து வெளிவர 
தன்னாலான முயற்சிகள் 
அனைத்தையும் செய்து 
தோல்வியுற்று களைப்புற்று 
,தன் இயலா நிலையை உணர்ந்து ,
அப்போதும் யாரால் தன்னை  
காப்பாற்ற இயலும் என்றறியாது 
ஆதிமூலமே என்று அழைத்ததை 
ஏற்றுக்கொண்ட ஸ்ரீ ஹரி நேரில் வந்து 
அந்த ஜீவனை காப்பாற்றினார் 
என்று பொருள் கொள்ளவேண்டும். 

அதற்கு பரிபூரண சராணாகதி 
இறைவன் திருவடிகளில் வேண்டும். 

அதற்க்கு ஸ்ரீ ராமனின் நாமம் 
நாவினால் உச்சரித்துக்கொண்டே 
இருக்கவேண்டும். 

அப்போது அந்த நாமத்தின்  ஒலி காதில்
கேட்டுக்கொண்டே இருக்கும், 

மனம் அசை போட்டுக்கொண்டே இருக்கும்.
புத்தி வேறு எதிலேயும் செல்லாது. 
மனம் காலபோக்கில் ஒருமைப்படும்.  

அந்த ஸ்ரீராகவன் அருளை 
நாம் வேண்டி பெறுவோமாக !

4 comments:

  1. /// மனம் அசை போட்டுக்கொண்டே இருக்கும்... புத்தி வேறு எதிலேயும் செல்லாது... மனம் காலபோக்கில் ஒருமைப்படும்... ///

    அந்தக் காலம் தான் விரைவில் வர வேண்டும்...

    அருமையான விளக்கங்களுக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //அதற்கு பரிபூரண சராணாகதி
    இறைவன் திருவடிகளில் வேண்டும். //

    அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி VGK
      எதற்கு பாராட்டு?
      யாருக்கு பாராட்டு?

      Delete